பருத்தி  ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிப்புத்தூர்           
          தமிழ்நாட்டில் உள்ள கோடை இறவை சாகுபடி பகுதிகளுக்கு ஏற்ற நல்ல தரம் வாய்ந்த நடுத்தர இழை நீளம் கொண்ட உயர் விளைச்சல் தரக்கூடிய பருத்தி இரகங்களை உருவாக்குவதற்காக, பருத்தி ஆராய்ச்சி நிலையம்  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூரில் 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 
          
          
          நிலையத்தின் குறிக்கோள்  
          
            - கோடை இறவை மற்றும் நெல் தரிசுப் பகுதிகளுக்கு ஏற்ற நடுத்தர, நீண்ட மற்றும் அதி நீண்ட இழையுடைய உயர் விளைச்சல் பருத்தி இரகங்களை உருவாக்குதல்.
 
            -               கோடை இறவை மற்றும் நெல் தரிசுப் பகுதிகளுக்கு ஏற்ற குறுகிய கால வீரிய ஒட்டு இரகங்களை உருவாக்குதல்.
 
            -               கோடை இறவை மற்றும் நெல் தரிசுப் பருத்தி சாகுபடிகளுக்கு ஏற்ற உழவியல் தொழில் நுட்பங்களை கண்டறிதல்.
 
            -               கோடை இறவை மற்றும் நெல் தரிசுப் பருத்தியில் பூச்சி நோய் மேலாண்மை உத்திகளை கண்டறிதல்.
 
            -               அகில இந்திய ஒருங்கிணைந்த பருத்தி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பருத்தி வளர்ப்புகளை மதிப்பீடு செய்தல்.
 
           
          தற்போதைய ஆராய்ச்சி திட்டங்கள்  
          இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் (ICAR) 
          
            - அகில இந்திய ஒருங்கிணைந்த பருத்தி மேம்பாட்டுத் திட்டம் 
 
            -               முன்னிலை செயல் விளக்கத் திடல் 
 
           
          திட்டம் சாரா திட்டம் (Non Plan) 
          
            - வேளாண்மை ஆராய்ச்சி திட்டம் 
 
            -               பயிர் மருத்துவ நிலையம் 
 
           
          தமிழ்நாடு பருத்தி சாகுபடி திட்டம் (TNCCM) 
          பயிர் மேம்பாடு 
          
            - கோடை இறவை மற்றும் நெல் தரிசுப் பகுதிகளுக்கு ஏற்ற அதிக மகசூல் மற்றும் தத்துப் பூச்சியை தாங்கி வளரக்கூடிய பருத்தி இரகங்கள் உருவாக்குதல் 
 
            - நடுத்தர இழை  நீளம் கொண்ட பருத்தி இரகங்கள் உருவாக்குதல் 
 
            - இயந்தர முறை சாகுபடி செய்வதற்கு ஏற்ற அடர் நடவுக்குகந்த பருத்தி இரகங்களை உருவாக்குதல் 
 
           
          பயிர் மேலாண்மை  
          
            - கோடை இறவை பருத்திக்கு ஏற்ற உயர் விளைச்சல் உழவியல் தொழில்நுட்பங்களைக் கண்டறிதல் 
 
            -               கோடை இறவையில் பிரபலமாக உள்ள பி.டி பருத்திக்கேற்ற உழவியல் தொழில் நுட்பங்களைக் கண்டறிதல் 
 
            -               அடர் பருத்தி சாகுபடி முறைக்கேற்ற உழவியல் தொழில்நுட்பங்களை கண்டறிந்து இயந்திர அறுவடைக்கு வழிகோலுதல் 
 
            -               அங்கக முறையில் பருத்தி சாகுபடி 
 
           
          பயிர் பாதுகாப்பு  
          
            - பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட வளர்ப்புகளை கண்டறிதல் 
 
            -               புதிய பூச்சிக் கொல்லி மூலக்கூறுகளின் திறனை ஆராய்தல் 
 
            -               பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் 
 
            -               அடர் நடவு முறைக்கு ஏற்ற பூச்சி மேலாண்மை கண்டறிதல் 
 
            -               பூச்சி கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை 
 
           
          சாதனைகள் 
          வெளியிடப்பட்ட பயிர் இரகங்கள்  
           
          
            
              | இரகங்கள்  | 
              வெளியிடப்பட்ட ஆண்டு  | 
             
            
              | பருத்தி – எம்சியு.2 | 
              1954 | 
             
            
              | எம்சியு.4 | 
              1967 | 
             
            
              | எம்சியு.8 | 
              1974 | 
             
            
              | எஸ்விஆர்.1 | 
              1991 | 
             
            
              | எஸ்விஆர்.2 | 
              1996 | 
             
            
              | எஸ்விஆர்.3 | 
              2000 | 
             
            
              | எஸ்விஆர்.4 | 
              2009 | 
             
            
              | வெள்ளை எள் - எஸ்விஆர்.1 | 
              1992 | 
             
            
              | பனை மரம் - எஸ்விஆர்.1 | 
              1991 | 
             
           
          
          கண்டறியப்பட்ட தொழில் நுட்பங்கள்  
          
            -             பருத்தி - பயறு - நெல் என்ற புதிய பயிர் சுழற்சி முறையானது பருத்தி - நெல் முறையை விட அதிக பயனுள்ளது 
 
            -               எக்டருக்கு 60:30:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து என்ற உர அளவில் அடியுரமாக தழைச்சத்தில் பாதியும், முழு அளவு மணிச்சத்தும் சாம்பல் சத்தும் இட்டு மீதமுள்ள பாதி தழைச்சத்தை 45ம் நாள் இட்டு மண் அணைப்பது கோடை இறவை பருத்தியில் அதிக மகசூல் கொடுக்கிறது
 
            -               விதைத்த 75-80 நாட்களில் 15ம் கணுவிலிருந்து நுனி கிள்ளுதல் தேவைக்கு அதிகமான தாவர வளர்ச்சியை குறைத்து பருத்தி மகசூலை அதிகரிக்கிறது 
 
            -               நெல் தரிசு பருத்தி சாகுபடியில் நெல் அறுவடைக்குப் பின் வரிசை உழவில் விதைத்தால் பருத்தி மகசூல் அதிகரிக்கிறது 
 
            -               பருத்தி விதைகளை பாரில் விதைத்து 40-வது நாளில் மண் அணைப்பதால் தண்டுக்கூன் வண்டின் தாக்குதல் குறைகிறது 
 
            -               வேப்பெண்ணைய் 3 சதம் தெளித்தல் அல்லது எக்டருக்கு வேப்பம் புண்ணாக்கு 250 கிலோ இட்டு வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் தெளித்தால் தத்துப் பூச்சியின் தாக்குதல் குறைகிறது 
 
            -               வயலில் எக்டருக்கு 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதுடன் டிரைகோடெர்மா விரிடி (4கிராம் / கிலோ) விதை நேர்த்தி செய்தால் இளஞ்செடி கருகல் மற்றும் வேரழுகல் நோய்கள் குறைகின்றன 
 
            -               திருவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் - 
 
              இமிடாகுளோபிரட் (WS) என்ற பூச்சிக் கொல்லி மருந்தினை ஒரு கிலோ பருத்தி விதைக்கு 5 கிராம் என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்தல். 
              ஊடுபயிராக பாசிப்பயறு, தட்டைப்பயறு, வெண்டை மற்றும் துவரை பயிரிடுதல், ஆமணக்கு, சூரியகாந்தி மற்றும் மக்காச்சோளம் போன்ற பொறிப் பயிர்களைப் பயிரிடுதல், மஞ்சள் ஓட்டும் பொறி மற்றும் இனக்கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் வைத்தல் ஆகிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைந்து செய்வதால் பூச்சிகளின் தாக்கம் வெகுவாக குறைவதோடு, நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து பருத்தியில் அதிக மகசூல் கிடைக்கிறது. 
           
          எதிர்காலத்திற்கான முக்கிய ஆய்வுகள்  
          
            - அடர் நடவு மற்றும் இயந்திர அறுவடைக்கு ஏற்ற பருத்தி இரகங்களை உருவாக்குதல் 
 
            -               அடர் நடவுக்கு ஏற்ற உழவியல் தொழில்நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை கண்டறிதல் 
 
            -               கோடை இறவை மற்றும் நெல் தரிசு நிலங்களுக்கு ஏற்ற தேசி பருத்தி இரகங்கள் அறிமுகம் செய்தல் 
 
            -               கோடை இறவை மற்றும் நெல் தரிசு நிலங்களில் பயிரிடப்படும் பருத்தி இரகங்களுக்கு ஏற்ற உயர் விளைச்சல் மேலாண்மைத் தொழில் நுட்பங்களான சரியான பயிர் இடைவெளி மற்றும் பயிர் எண்ணிக்கை பராமரித்தல், ஒருங்கிணைந்த களை, உரம் மற்றும் நீர் நிர்வாக முறைகளைக் கண்டறிதல் 
 
            -               தண்டுக்கூன்வண்டு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், காய்ப்புழுக்கள், பாக்டீரியா கருகல் மற்றும் வேர் அழுகல் நோய்களுக்கான பயிர்ப் பாதுகாப்புத் தொழில் நுட்பங்களைக் கண்டறிதல் 
 
            -               வேளாண் பயிர்களில் உள்ள தரமான இரகங்களையும் புதிய தொழில் நுட்பங்களையும் பயிற்சிகள் மற்றும் செயல் விளக்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு கற்பித்தல்.
 
           
          பிற சேவைகள்  
          
            - மாதாந்திர மண்டல பணி மனையில் தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்குதல் 
 
            -               பூச்சி மற்றும் நோய் கண்காணித்தல் 
 
            -               கள ஆய்வு மற்றும் பண்ணை ஆலோசனை சேவைகள் 
 
            -               நாளேடுகள் பத்திரிக்கைகள் மற்றும் அகில இந்திய வானொலி மூலம் தொழில் நுட்ப ஆலோசனைகள் வெளியிடுதல் 
 
            -               வேளாண் விரிவாக்க பணியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல் 
 
            -               புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு பரப்புதல் 
 
            -               வல்லுநர் விதை மற்றும் உண்மை நிலை விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகம் 
 
           
           
          தொடர்புக்கு  
          பேராசிரியர் மற்றும் தலைவர்  
            பருத்தி ஆராய்ச்சி நிலையம்  
            திருவில்லிபுத்தூர்  
            தொலைபேசி - 04563 260730 
            மின் அஞ்சல் - arssvpr@tnau.ac.in  
            இணையம் - www.tnau.ac.in  
         
           |