சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் தமிழில் 
                
                  
                    - நவீன கரும்பு சாகுபடி தொழில்  நுட்பங்கள்
 
                    - தோட்டக்கலைப் பயிர்களுக்கான  நாற்றங்கால் தொழில்நுட்பங்களும், பயிர்ப்பெருக்க முறைகளும்
 
                    - காளான் வளர்ப்பு
 
                    - பழங்கள் மற்றும் காய்கறிகளைப்  பதப்படுத்துதல்
 
                    - பண்ணைக் கருவிகள் மற்றும் இயந்திரங்களைப்  பழுது பார்த்தலும், பராமரித்தலும்
 
                    - திடக்கழிவுகளும், மண்புழு உரம்  தயாரித்தல் தொழில்நுட்பங்களும்
 
                    - தேனீ வளர்ப்பு
 
                    - தென்னை சாகுபடித் தொழில் நுட்பங்கள்
 
                    - பருத்தி சாகுபடித் தொழில் நுட்பங்கள்
 
                    - அடுமனைப்பொருட்கள், மிட்டாய்  மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள்
 
                    - அங்கக வேளாண்மை
 
                    - பட்டுப்புழு வளர்ப்பு தொழில்  நுட்பங்கள்
 
                    - நவீன பாசன முறை மேலாண்மை
 
                    - அலங்காரத் தோட்டம் அமைத்தல்
 
                    - மூலிகைப்பயிர்கள்
 
                    - மலர்சாகுபடி தொழில் நுட்பங்கள்
 
                   
                 
                நுழைவுத் தகுதி 
                
                  
                    - கல்வி தகுதி :ஆறாம் வகுப்பு
 
                    - பயிற்சி மொழி : தமிழ்
 
                    - கால அளவு : 6 மாதங்கள்
 
                    - பதிவு கட்டணம்: ரூ.1,500 / பயிற்சி
 
                    - வயது :18 வயதிற்கு மேல்
 
                       - நேர்முக       பயிற்சி வகுப்புகள் மேலே குறிப்பிட்டுள்ள மையங்களில் மட்டுமே நடைபெறும். பயிற்சியாளர்களின்       எண்ணிக்கையைப் பொறுத்து மையங்கள் மாற்றத்திற்கு உள்ளாகும். குறைந்தது 20 பயிற்சியாளர்கள்       சேர்நதால் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்.
 
                       - ஒரு நபர்       ஒரே நேரத்தில் ஒரு பாடத்தில் மட்டுமே சேரமுடியும்.
 
                       - ஐந்து       நேர்முகப் பயிற்சி வகுப்புகள் மாதம் ஒரு வகுப்பு வீதம் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில்       நடைபெறும். வகுப்பு பற்றிய விவரம் முன்னதாகவே அறிவிக்கப்படும். இறுதி வகுப்பில்       தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் எக்காரணம் கொண்டும்       திருப்பிதரபடமாட்டாது மற்றும் மாற்றத்திற்கு உகந்தது அல்ல. முதல் பயிற்சி வகுப்பில்       பாட புத்தகம் தரப்படும். குறைந்தது மூன்று வகுப்புகள் கலந்து கொண்டால் மட்டுமே       6 வது பயிற்சி வகுப்பில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
 
                       - பயிற்சியாளர்களுக்கு       அனுப்பப்படும் கடிதங்கள் தவறாமல் வந்து சேர சரியான முகவரி அவசியம். கடிதங்கள்       வரவில்லை என்பதற்கு பல்கலைக்கழகம் பொறுப்பல்ல.
 
                        - முகவரி       மாற்றம் இருப்பின் உடனடியாக தெரிவிக்க வேண்டும். விண்ணப்படிவத்தில் தொலைபேசி       எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
 
                          - விண்ணப்பங்களை       (கட்டணம் இன்றி) ரூ.5க்கான தபால்களைல ஒட்டிய சுயவிலாசமிட்ட உறையுடன் இயக்குநர்,       திறந்த வெளி மற்றும் தொலைத்தூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,       கோயமுத்தூர் - 641 003 க்கு எழுதி பெற்றுக் கொள்ளலாம்.
 
                   
                 
                பயிற்சி  கட்டணம் அனுப்ப வேண்டிய முகவரி 
                
                  - பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்  பயிற்சிக் கட்டணத்தை நேரடியாகவோ அல்லது வரைவோலையாக (Demand Draft), “Director, ODL “Payable at SBI, TNAU  Branch, Coimbatore - 641 003 என எடுத்துக் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப  வேண்டும்.
 
                 
                “இயக்குநர்,  திறந்த வெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்  கோயமுத்தூர் -    641003” 
                  தொலைபேசி அலைபேசி : 0422-6611229/  9442111057 
                  இணையதளம்: www.tnau.ac.in   மின்னஞ்சல்: odl@tnau.ac.in  தொலை நகலி : 0422-6611429 
                  |