முதுநிலை பட்டம் 
                      
                      விண்ணப்பங்கள்: 
                        விண்ணப்ப கட்டணம் 
                      
                        
                          - நேரில் ரூ. 250
 
                          - தபாலில் ரூ.300
 
                         
                       
                      செலுத்தும் முறை 
                        விண்ணப்ப கட்டணத்தை ‘இயக்குனர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி’ என்ற முகவரியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கிழை SBl, கோயமுத்தூர் – 641003 வங்கியில் செலுத்தும் வகையில் வரைவோலை கீழ்காணும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். 
                         
                        இயக்குனர் 
                        திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கம், 
                        தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், 
                        கோவை – 641003 
                        தொலைப்பேசி: 0422 – 6611229, 6611429 
                        மின்னஞ்சல்: odl@tnau.ac.in  
                        வலைதளம்: www.tnauodl.com 
                       
                       
                      பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்கள் 
                      MBA (வணிக மேலாண்மை நிர்வாகவியல்) 
                        
                      1.முன்னுரை 
                      தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் ஊரக மேலாண்மை கல்வி மையம் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் கொள்கை இடர்பாடுகள் ஆகிய கோனங்களின் அனைத்து வேளாண்மை மற்றும் ஊரக மேலாண்மை (ARM) துறையின் இயக்கம் வணிக மேலாண்மை நிர்வாகவியல் (MBA) பட்டத்தை திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி (ODL) முறைப்படி 2005 ல் இருந்து வழங்கிவருகின்றது. இது த.வே.ப.க – தில் வழங்கப்படும் தனித்துவம் வாய்ந்த பயிற்சி வகுப்பாகும். 
                      2.வணிக மேலாண்மை நிர்வாகவியல் 
                      MBA பட்டம் ODL கீழ் இரண்டு வருட பயிற்சி வகுப்பாகும்.இப்பட்டப் படிப்பு செயற்குழுக்கள் / மேலாளர்கள் பயிற்சி மற்றும் மேலாண்மை ஆற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த வேளாண் தொழில் நிர்வாகங்களின் சுய வேலை வாய்ப்பு பட்டதாரிகள் ஆகியவையை செயல்படுத்துகிறது. 
                      3.பயிற்சி காலம் 
                      இரண்டு வருடங்கள் (நான்கு பருவங்கள்) 
                      4.நுழைவுத் தகுதி 
                      B.Sc.(Ag.) / சார்பு பாடங்கள் அல்லது வேளாண்மை / சார்பு தொழில் நிறுவனங்களின் மூன்று வருட பணி அணுபமுடன் எதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
                         
                        5. பயிற்சி மொழி: 
                        ஆங்கிலம் 
                         
                        6.திட்டம் 
                         
                        6.1. வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள் 
                         
                        முதல் பருவம்:மேலாண்மை கொள்கைகள்,உற்பத்தி மற்றும் பொருள் மேலாண்மை,அமைப்புசார் நடத்தை மற்றும் மேலாளர்களுக்கான கணிதம் 
                         
                        இரண்டாம் பருவம்:விறப்னை மேலாண்மை,மேலாண்மை கணக்குப்பதிவு மேலாண்மைப் பொருளியல் மற்றும் மேலாண்மைக்கான புள்ளியியல் 
                         
                        மூன்றாம் பருவம்:நிதிநிலை மேலாண்மை,மனிதவள மேலாண்மை,மேலாண்மை குறிய ஆராய்ச்சி முறையியல், உத்தி தயாரிப்பு மற்றும் செயலாக்கம் 
                         
                        நான்காம் பருவம்:அறிவுசார் சொத்து மேலாண்மை,வணிக சட்டம்,விருப்பத்தேர்வான பயிற்சிகள் l மற்றும் ll திட்டச்செயல் 
                         
                        6.2. தேர்ந்தெடுக்கப்பட்ட / விருப்புரிமையான பயிற்சிகள் (குழு) 
                        A. பன்னாட்டு வணிகம் 
                        B. ஊரக மற்றும் சில்லறை விற்பனை 
                        C. நிதிநிலை சேவை மேலாண்மை 
                        D. மேலாண்மைத் தகவல் அமைப்பு 
                         
                        7. பயில் பொருள் 
                        ஒவ்வொரு பாடம் / பயிற்சிக்கு பயில் பொருள் வழங்கப்படுகின்றது 
                         
                        8. வகுப்பீடு 
                        மாணவர்களுக்கு ஒவ்வொரு தாளுக்கான வகுப்பீட்டு தலைப்புஅனுப்பப்படுகின்றது. வகுப்பீட்டை குறித்த காலத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றது.இவ்வகுப்பீடு 40 மதிப்பெண்களுக்கு மதிப்பீடப்படுகின்றது. 
                         
                        9. நேரடித் தொடர்பு வகுப்புத் திட்டம் 
                        பருவத்திற்கு 10 நாட்கள் நேரடித் தொடர்பு வகுப்புத் திட்டம் ஒருஞ்கிணைக்கப்படுகின்றது.(1 நாளுக்கு 6 மணி நேரம் வகையில் ஒரு மாதத்திற்கு இரண்டு நாட்கள்). 
                         
                        10. மதிப்பீடு 
                        MBA பட்டப்படிப்பு மாணவர்கள் 3 மணி நேர கால அளவில் 60 மதிப்பெண் தேர்வு மற்றும் 40 மதிப்பெண் வகுப்பீடுக்கு தோன்றுகின்றனர்.கடைசித் தேர்வு மற்றும் வகுப்பீடு உட்பட பாடம் ஒன்றிற்கு குறைந்தது 50 மதிப்பெண்கள் பெற வேண்டும். 
                         
                        11. கட்டண அமைப்பு 
                        பல்கலைக்கழகம் விதிக்கப்பட்டதன் அடிப்படையில் பருவத்திற்கு மற்ற கட்டணத்துடன் ரூ.10,000 வசூலிக்கப்படுகின்றது. 
                      மேலே 
                       
                       
                      M.Sc. சுற்றுச்சூழல் மேலாண்மை 
                       
                        
                      முன்னுரை 
                         
                        தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறை மண் மற்றும் பயிர் மேலாண்மை கல்வி மையத்தின் கீழ் இயங்கிவருகின்றது.இத்துறை கல்வி, ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலின் விரிவாக்க பொருட்கள் ஆகியவையை கையாளுகின்றது.இப்பயிற்சி 2005 ல் இருந்து ODL வழங்கி வருகின்றது. சுற்றுச்சூழல் நீடிப்புத்திறனுக்கான சுற்றுப்புற மதிப்புள்ள வல்லுநர்களை உருவாக்கும் வகையில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.அதாவது தொழில் சாலை, சுற்றுலாத்து, தணிக்கை மற்றும் பசுமை நகரத்திற்கான ஆளும் முறை ஆகிய கொற்றங்கள். 
                         
                        2. M.Sc. சுற்றுச்சூழல் மேலாண்மை 
                           
                        இது ஒரு இரண்டு வருட முதுநிலை பட்ட படிப்பு திட்டம். அறிவிய் பட்டதாரிகள் மற்றும் அவர்களை சுற்றுச்சூழல் இடர்பாடுகள் மற்றும் வளர்ச்சி சார் முறைகளின் கூர் உணர்த்தும் வகையில் இப்பட்டப்படிப்பு வழங்கப்படுகின்றது. சுற்றுச்சூழல் தனிக்கை / சுற்றுச்சூழல் பாதுகாப்பு / அறிவு மற்றும் தற்போதைய வளர்ச்சியுடன் மாற்று திறன் ஆகியவைகளின் தொழில் நெறிஞர்கள் பண செய்ய இயங்கச் செய்கிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்,தொழிற்சாலைகள், னவியல், SO தரச் சான்றழிக்கும் நிறுவனங்கள், ட்ட வல்லுநர்கள்,சுற்றுலாத்துறை,ஊரக திட்டமிடுதல் ஆகியவைகளிள் இருந்து புகழ் பெற்ற சுற்றுச்சூழல் வல்லுநர்களுடன் சிறப்பு கூட்டத் தொடர் அமைக்கப்படும். 
                         
                        3.பயிற்சி காலம் 
                        இரண்டு வருடங்கள் (நான்கு பருவங்கள்) 
                         
                        4.நுழைவுத் தகுதி 
                      
                        
                          - அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகத்திலிருந்து எதாவது இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு (இயற்பியல் மற்றும் கணிதம் தவிர)
 
                          - சுற்றுச்சூழல் பாதுகாப்பு / மாசு கண்காணிப்பு / மேலாண்மை பிரிவு நிறுவனங்களின் மூன்று வருட பணி அனுபவத்துடன் எதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
                         
                       
                      5.பயிற்சி மொழி 
                        ஆங்கிலம் 
                         
                        6.திட்டம் 
                        6.1வழங்கப்படும் பாடங்கள் 
                      முதல் பருவம்: 1. சுற்றுச்சூழல் அறிவியல் கொள்கைகள் 
                        2. சுற்றுச்சூழல் வேதியியல் 
                        3. சுற்றுச்சூழல் மாசு மற்றும் கட்டுப்பாடு 
                        4. செய்முறை l 
                         
                        இரண்டாம் பருவம்: 1. கழிவு மறுசுழற்சி மற்றும் மேலாண்மை 
                        2. சூழல்சார் உயர்த்தொழில் நுட்பவியல் 
                        3. பல்லுயிர்மம் மற்றும் சுற்றுப்புற பாதுகாப்பு 
                        4. செய்முறை ll 
                         
                        மூன்றாம் பருவம்: 1. சூழல் பாதுகாப்பு பொறியியல் 
                        2. சூழல் பிரச்சனைகள் மற்றும் வளமேலாண்மை 
                        3. ஆராய்ச்சி முறையியல் 
                        4. செய்முறை lll 
                         
                        நான்காம் பருவம்: 1. சூழல்நிலைக் கல்வி, சட்டமியற்றல் மற்றும் மக்கள் இயக்கம் 
                        2. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 
                        3. ஒவ்வாமை 
                         
                        7. பயில் பொருள் 
                        தனி பயில் பொருள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. 
                         
                        8.வகுப்பீடு 
                        ஒவ்வொரு மாணவர்களும் ஆய்வேடு சமர்ப்பிக்க வேண்டும்.இது பின் மதிப்பீடப்படும். 
                         
                        9. நேரடித் தொடர்பு வகுப்புத் திட்டம் 
                        மாணவர்கள் ஒரு நாளுக்கு 6 மணி நேரங்கள் என்ற வகையில் மாதத்திற்கு இரண்டு நாட்கள் கலந்து கொள்ள வேண்டும்.இது பருவத்திற்கு பத்து நாட்களாக கணக்கிடப்படுகின்றது.செயல்முறை மற்றும் பாட வகுப்புகளிள் தனித்தனியே 60% வருகை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். 
                         
                        10. மதிப்பீடு 
                        M.Sc. சுற்றுச்சூழல் மேலாண்மை மாணவர்கள் 3 மணி நேர கால அளவில் 60 மதிப்பெண் தேர்வு மற்றும் 40 மதிப்பெண் வகுப்பீடுக்கு தோன்றுகின்றனர்.இறுதி தேர்வு மற்றும் வகுப்பீடு உட்பட பாடம் ஒன்றிற்கு குறைந்தது 50 மதிப்பெண்கள் பெற வேண்டும். 
                         
                        11. கட்டண அமைப்பு 
                        பல்கலைக்கழகம் விதிக்கப்பட்டதன் அடிப்படையில் பருவத்திற்கு மற்ற கட்டணத்துடன் ரூ.12,500 வசூலிக்கப்படுகின்றது. 
                      மேலே 
                       
                       
                      M.Sc. கரும்பு தொழில்நுட்பம் 
                        
                      முன்னுரை 
                         
                        வாழ்வியல் மற்றும் கரும்பு ஆராய்ச்சி மற்றும் கரும்பு ஆராய்ச்சி நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள், கரும்பு ஆலைகள்,வேளாண்மை மாநிலத் துறை,உலகின் பொது மற்றும் தனியார் வணிக நிறுவனம் ஆகிய பட்டதாரிகளுக்கு இப்பயிற்சி மிகவும் பயனளித்துள்ளது.இப்பயிற்சி திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கருப்பு இனப்பெருக்க நிலையம்,கோவை ஆகியவையின் கூட்டு முயற்சியில் வழங்கப்படுகின்றது. 
                        உற்பத்தியை மேம்படுத்த கரும்பு வேளாண்மையில் ஈடுபடும் கரும்பு வளர்ப்பு பணியாளர்களின் அறிவை புதுப்பிக்கவும் மற்றும் கரும்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவில் வாழ்வியல் பட்டதாரிகளில் வேலை வாய்ப்பு மேலாண்மை அறிவை வளமாக்குதலுக்கும் இப்பயிற்சி முக்கிய கொள்கையாக விளங்குகின்றது. 
                         
                        2. M.Sc. கரும்பு தொழில்நுட்பம் 
                         
                        இப்பயிற்சி கரும்பு தொழில் சாலைகளிள் பணிபுரியும் பணியாளர்களின் ஆற்றலை மேம்படுத்தவும் மற்றும் கரும்பு அதிகாரிகள்,வேளாண் வல்லுநர்கள் ஆகியோரின் அறிவை அவர்களின் பதவி உயர்விற்கு வழிவகுக்கும் வகையில் திறம் உயர்த்துதல் ஆகியவைக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. 
                         
                        3.பயிற்சி காலம் 
                        இரண்டு வருடங்கள் (நான்கு பருவங்கள்) 
                         
                        4.நுழைவுத் தகுதி 
                        B.Sc. (Ag.) / உயிரியலில் எதாவது ஒரு பட்டம் 
                         
                        5. பயிற்று மொழி 
                        ஆங்கிலம் 
                         
                        6.திட்டம் 
                        6.1. வழங்கப்படும் பாடங்கள் 
                           
                        முதல் பருவம்: 1. கரும்பு இனப்பெருக்கம்,மரபியல் மற்றும் விதை உற்பத்தி 
                        2. கரும்பு பயிர் உற்பத்தி தொழில்நுட்பம் 
                        3. கரும்பு மண் மற்றும் அதன் மேலாண்மை 
                        4. பயிர் செய்தல் மற்றும் பண்ணை அமைப்புக்கான கொள்கைகள் மற்றும் முறைகள் 
                         
                        இரண்டாம் பருவம்: 1. கரும்பு வேதியியல், சர்க்கரை மற்றும் வெல்லம் தொழில் நுட்பம் 
                        2. கரும்பு வினையியல் 
                        3. தாவர உயிரணு திசு வளர்ப்பு 
                        4. தாவர நீர்த் தொடர்பு 
                         
                        மூன்றாம் பருவம்: 1. கரும்பு நோய்,கொள்ளை நோயியல் மற்றும் கட்டுப்பாடு 
                        2. கரும்பு பூச்சி மற்றும் அதன் கட்டுப்பாடு 
                        3. புள்ளியியல் உத்திகள் மற்றும் தரவு மேலாண்மை மற்றும் பகுப்பாய்வுக்காள கணிப்பொறி பயன்பாடுகள் 
                        4. கரும்பு சாகுபடிக்கான பண்ணை கருவி 
                         
                        நான்காம் பருவம்: 1. கரும்பு தெழில்நுட்ப பரிணாமத்திற்கான உத்தி நோக்கு 
                        2. கரும்பு மேம்பாடு மற்றும் மேலாண்மை  
                        3. செயல் திட்டம் 
                         
                        7. பயில் பொருள் 
                        தனி பயில் பொருள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. 
                         
                        8.வகுப்பீடு 
                        ஒவ்வொரு மாணவர்களும் அவர்கள் பயிற்சியை முடிக்க ஆய்வேடு கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.இது மதிப்பீடப்படும் 
                         
                        9. நேரடித் தொடர்பு வகுப்புத் திட்டம் 
                        M.Sc. கரும்பு தொழில்நுட்ப மாணவர்கள் ஒரு நாளுக்கு 6 மணி நேரங்கள் என்ற வகையில் மாதத்தற்கு இரண்டு நாட்கள் கலந்து கொள்ள வேண்டும்.இது பருவத்திற்கு பத்து நாட்களாக கணக்கிடப்படுகின்றது.செயல் முறை மற்றும் பாட வகுப்புகளிள் தனித்தனியே 60% வருகை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். 
                         
                        10. மதிப்பீடு 
                        M.Sc. கரும்பு தொழில்நுட்ப மாணவர்கள் 3 மணி நேரகால அளவில் 60 மதிப்பெண் தேர்வு மற்றும் 40 மதிப்பெண் வகுப்பீடுக்கு தேர்வு எழுதவேண்டும்.இறுதி தேர்வு மற்றும் வகுப்பீடு உட்பட பாடம் ஒன்றிற்கு குறைந்தது 
                        50 மதிப்பெண் பெற வேண்டும். 
                         
                        11. கட்டண அமைப்பு 
                        பல்கலைக்கழகம் விதிக்கப்பட்டதன் அடிப்படையில் பருவத்திற்கு மற்ற கட்டணத்துடன் ரூ.10,000 வசூலிக்கப்படுகின்றது. 
                                                |