Agriculture
வேளாண்மை :: நார் பயிர்கள்
இறவை பருத்தி மானாவாரி பருத்தி நெல்லுடன் பயிர் சுழற்சி முறையில் பருத்தி
பருத்தி (காசிபியம் இனம்)

இந்தியாவின் பருத்தி கழகம்
மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம், நாக்பூர்
பருத்தி தொழில்நுட்பத்தில்,  மத்திய ஆராய்ச்சி நிறுவனம், மும்பை
பருத்தி மேம்பாட்டு இயக்குநரகம்
Bt பருத்தி ஆராய்ச்சி
பஞ்சு எடுப்பான் – வீடியோ - மேலும் தகவல்களுக்கு கிளிக் செய்யவும

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம் / பருவம் இரகங்கள் / கலைபினங்கள்
இறவை
குளிர்கால இறவை (ஆகஸ்ட் – செப்டம்பர்)
கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், தேனி MCU 5, MCU 5 VT, சுவின், TCHB 213*, MCU 12,
MCU 13, சுரபி
தர்மபுரி MCU 5, TCHB 213*, MCU 12, MCU 13, சுரபி
சேலம், நாமக்கல் MCU 5, சுவின், TCHB 213*, MCU 12, MCU 13, சுரபி
கடலூர், விழுப்புரம் LRA 5166, SVPR 2, SVPR 4, சுரபி,
கோடைகால – இறவை (பிப்ரவரி – மார்ச்)
ஈரோடு MCU 5, MCU 5 VT, MCU 12, MCU 13, சுரபி
மதுரை, திண்டுக்கல், தேனி MCU 5, MCU 5 VT, SVPR 2, SVPR 4, சுரபி
இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, MCU 5, MCU 5 VT, SVPR 2, SVPR 4, சுரபி
திருநெல்வேலி, தூத்துக்குடி
மானாவாரி (செப்டம்பர் – அக்டோபர்)
மதுரை, திண்டுக்கல், தேனி LRA 5166, K11, KC 2, SVPR 2,KC 3
இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை LRA 5166, K 11, KC 2, SVPR 2,KC 3
திருநெல்வேலி, தூத்துக்குடி, தர்மபுரி LRA 5166, K 11, KC 2, SVPR 2,KC 3
நெல்தரிசு
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி பகுதிகள், பெரம்பலூர், கரூர், கடலூர் மற்றும் விழுப்புரம் MCU 7, SVPR 3, அஞ்சலி

பருத்தி இரகங்களும் அதன் சிறப்பியல்புகளும்

இரகங்கள் தோற்றம் பருவம் இறவை, மானாவாரி மகசூல்,
(
கி.ஹெ)
சிறப்பியல்புகள்
எம்.சி.யு 5 பல இரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்ட கம்போடியா பருத்தி ஆடி, தை இறவை 1850 70ஆம் நெம்பர் நூல் நூற்கக்கூடிய திறன் உடையது.
எம்.சி.யு 5 வீடி எம்.சி.யு 5லிருந்து மறுதேர்வு செய்யப்பட்டது. ஆவணி - புரட்டாசி, ஆடி, தை. இறவை 2000 வெர்ட்சிலியம் வாடல் நோய் எதிர்ப்பு மிக நீண்ட இழை நீளம்
எம்.சி.யு 7 எல் 1143 இஇ – எக்ஸ்ரே கதிர்களைக் கொண்டு சடுதி மாற்றம் செய்யப்பட்டது. தை நெல்தரிசு 1330 நடுத்தர இழை நீளம் 40ம் நெம்பர் நூல் நூற்க ஏற்றது. கருங்கிளை நோயைத் தாங்கி வளரக்கூடியது.
எம்.சி.யு 12 எல்.ஆர்.ஏ 5166 - எம்.சி.யு 11 ஒட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டது. ஆவணி - புரட்டாசி இறவை 2000 நீண்ட இலை பருத்தி இரகம், அரவைத் திறன் 34.8, எம்.சி.யு 5 விடக் குறைந்த வயதுடையது.
எம்.சி.யு 13 பல இரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்ட கம்போடியா பருத்தி ஆவணி - புரட்டாசி
ஆடி, தை
இறவை 2200 குறைந்த வயது, 50 ஆம் நம்பர் நூற்புத்திறன்.
எல்.ஆர்.ஏ 5166 லட்சுமி, ரெபா பி 50, ஏசி 122 ஆகிய மூன்று இரகங்களை சேர்த்து உருவாக்கப்பட்டது. ஆவணி - புரட்டாசி
தை, மாசி
இறவை மானாவாரி 1800
725
நடுத்தர இலை நீளம், 40ஆம் நெம்பர் நூற்புத்திறன், அரவைத்திறன் 36.20
சுப்பிரியா எம்.சி.யு 5 × சி 1998 ஆவணி - புரட்டாசி
ஆடி, தை
இறவை 2000 வெள்ளை ஈ தாக்குதல் எதிர்ப்புத்திறன்
அஞ்சலி எல்.ஆர்.ஏ 5166 × (கந்வா 2 × ரீபா பி 50) தை இறவை 1800 குறைந்த உயரம், ஓரளவு அடர்த்தியான சிம்போடியாக்களைக் கொண்டது.
சுரபி எம்.சி.யு வீடி × (எம்.சி.யு × கா மெக்சியானம்) ஆவணி - புரட்டாசி இறவை 2200 மிக நீண்ட இழைப்பருத்தி, வெர்டிசிலியம் வாடல்  நோயைத் தாங்கும் சக்தியைக் கொண்டது.
சுமங்களா சிடபில்யு 134 × ரீபாபி 150 × கந்வா 2 புரட்டாசி, தை இறவை மானாவாரி 2000
1200
மானாவாரிக்கு ஏற்றது.
சுருதி 70இ × ஆர் எஸ்.பி 4 புரட்டாசி,
தை
இறவை 2500 குறைந்த பருவம்
கே 11 (0794 - 1 - டீ × (0794- 1 – டீ × எச் 450) போன்ற இரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது. புரட்டாசி மானாவாரி 1100 கருங்கண்ணி இரகம், பூச்சி நோய் எதிர்ப்புத்திறன், சிறந்த இழை நூற்புத்திறன் உடையது. வறட்சியை தாங்கி வளரும் தன்மை.
சுவின் சுஜாதா × எஸ். வின்சென்ட் இரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது. ஆடி இறவை 1020 நீண்ட இழைப்பருத்தி 28 சதம் அரவைத்திறன், 100 ஆம் நெம்பர் நூற்புத்திறன்.
டி.சி.எச்.பி 213 இருவேறு இன பருத்தி இரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது. ஆடி இறவை 2215 அதிக மகசூலும், தரமுள்ள பஞ்சைக் கொண்டது. 165-170 நாட்களில் அறுவடைக்கு வரும். இலைப்புள்ளி நோய்க்கு எதிர்ப்புத்திறன்.
எஸ்விபிஆர் 2 டி.எஸ்.டி 22 × ஜே.ஆர் 36 ஒட்டிலிருந்து தேர்வு மாசி, புரட்டாசி. கோடைக்கால இறவை, குளிர்கால மானாவாரி 2000 150-160 நாட்கள் அரவைத்திறன் 36.4 சதம், நடுத்தர இழை நீளம்
எஸ்விபிஆர் 3 எல்.எச்.900 × 1301 டிடி ஒட்டிலிருந்து தேர்வு தை நெல் தரிசு 1800 135-140 நாட்கள் அரவைத் திறன் 35.2 சதம்
கே.சி 2 எம்.சி.யு 10 × கே.சி 1 ஒட்டிலிருந்து தேர்வு. புரட்டாசி மானாவாரி 1000 135-140 நாட்கள் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை 40ம் நெம்பர் நூல் நூற்கும் திறன். தத்துப்பூச்சியின் தாக்குதலை எதிர்த்து வளரும் தன்மை.
கே.சி 3 கலப்பின வகை 
of TKH 97x KC1
செப்- அக் மானாவாரி 1080 தத்துப்பூச்சியின் தாக்குதலை எதிர்த்து வளரும் தன்மை.
பருத்தி – 26.4 mim, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு ஏற்றது. 
எஸ்.வி.பி.
ஆர் 4
கலப்பின வகை  MCU 5x S 4727 பிப்-மார்ச் செப்- அக் பாசனம் மானாவாரி 1800 சிறந்த நார் சத்து கொண்ட உயர்தர மத்திய இலை பருத்தி. 40வது இரக நூல் நூற்பதற்கு தகுந்தது.


பருத்தி – எஸ்.வி.பி.ஆர்  4

பயிர் மேலாண்மை

இறவைப் பருத்திக்கான சாகுபடிக் குறிப்புகள்

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்றாக உழுது பண்படுத்தவேண்டும். குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு இருந்தால் நிலத்தை கத்திக் கலப்பையைக் கொண்டு 0.5 மீ இடைவெளியில் ஒரு திசையில் உழவேண்டும். பின்னர் அதற்கு நேர்செங்குத்தான திசையில் உழவேண்டும். இதனை மூன்று வருடத்திற்கு ஒரு முறை செய்யவேண்டும். மண் நன்கு பொடியாகும்படி உழுதபின்னர் எக்டருக்கு வேப்பம் புண்ணாக்கு 250 கிராம் இடுவதன் மூலம் கூன் வண்டின் தாக்குதலைத் தவிர்க்க முடியும்.

இயற்கை உரமிடல்

எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய உரம் (அ) 2.5 டன் மண்புழு உரத்தை உழுவதற்கு முன் மண்ணின் மீது பரப்பி உழவு செய்யவேண்டும். அசோபோஸ் 2கிகி/எக்டர் அல்லது அசோஸ்பைரில்லம் + பாஸ்பரஸில் கரைக்கக்கூடிய பாக்டீரியா + இளஞ்சிவப்பு நிறமுடைய நிலைமாறும் மெத்திலோடிராபிக் எக்டருக்கு 2.2 கிகி ஒவ்வொரு முறையும் அடியுரமாக அளிக்க வேண்டும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 100 மிலி 70 சத வணிக கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி அமில நேர்த்தி செய்யவேண்டும். இதன் மூலம் விதைகளின் மேற்பரப்பில் உள்ள துசும்புகளையும், பூச்சி முட்டை நோய்க்கிருமிகள் ஆகியவை அழிக்கப்பட்டு, விதையுறை மிருதுவாக்கப்பட்டு முளைப்புத்திறன் அதிகரிக்கிறது. விதை நேர்த்தி செய்ய பிளாஸ்டிக் பக்கெட் (அ) கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தப்பட வேண்டும். உலோக பாத்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது. ஒரு கிலோ விதையை ஒரு பிளாஸ்டிக்  பக்கெட்டில் போட்டு 100 மில்லி அமிலத்தை ஊற்றவேண்டும். கண்ணாடி (அ) மரக்குச்சியால் 4 நிமிடங்கள் நன்கு கலக்கவேண்டும். பிறகு வேறு ஒரு பக்கெட்டில் நீர் நிரப்பி அமிலநேர்த்தி செய்த விதைகளை நிழலில் உலர்த்தி சேகரித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

பார்கள் அமைத்தல்

இரகங்களுக்கு ஏற்ற இடைவெளியில் 6-40 மீட்டர் நீளத்தில் பார்கள் அமைக்கவும் இதற்கு இடை இடையே நீர் பாய்ச்சுவதற்கேற்ப வாய்க்கால் அமைக்கவும், இதற்கு நீர் பிடிக்கும் கலப்பையைப் பயன்படுத்தலாம்.


10 மீ இடைவெளியில் வரப்பு மற்றும் வாய்க்கால்கள்

 

இரகங்கள் / வீரிய ஒட்டு இடைவெளி (பார்களுக்கு இடையே செ.மீ)
எம்.சி.யு 5, எம்.சி.யு 5, விடி , எம்.சி.யு 12, எல்.ஆர்.ஏ 5166, எம்.சி.யு.13 75
ஒட்டு இரகங்கள் - சுவின் வகைச் சேர்க்கை 90
டி.எச்.பி 213 - இரு வகைச் சேர்க்கை 120
எம்.சி.யு 7, எஸ்.வி.பி.ஆர் 3 60
எஸ்.வி.பி.ஆர் 2 75
கே.சி 2, எல்.ஆர்.ஏ 5166, கே.11 45

இராசயன உரமிடுதல்

மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி மற்றம் சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இல்லையெனில் கீழ்க்கண்டவாறு உர அளவை இடவேண்டும்.

இரகங்கள்/ வீரிய ஒட்டு இரகங்கள் உரஅளவு (கி/எக்டர்)
தழை மணி சாம்பல்
எம்.சி.யு 5, எம்.சி.யு 5 விடி, எம்.சி.யு 12, எம்.சி.யு 13, எஸ்.வி.பி.ஆர் 2 80 40 40
எம்.சி.யு 7, எஸ்.வி.பி.ஆர் 3 60 30 30
வீரிய ஒட்டு இரகங்கள் 120 60 60
  • அடியுரம் இட இயலாத சூழ்நிலையில்களில், விதைத்த 25  நாளில் உரமிடலாம்.
  • இரகங்களுக்கு 50 சத தழைச்சத்தும், சாம்பல் சத்து,மணி சத்தை முழுமையாகவும் அடியுரமாக இடவேண்டும். எஞ்சியுள்ள தழை மற்றும் சாம்பல் சத்தை 40-45ம் நாள் இடவும். வீரிய ஒட்டு இரகங்களுக்கு தழைச்சத்தை மூன்று முறையாக அடியுரம் 45 மற்றும் 60 நாள் இடவும்.
    இலைத் தெளிப்பாக 2% டி.ஏ.பி + 1% பொட்டாசியம் குளோரைடு அல்லது பாலிபீடு மற்றும் மல்டி பொட்டாசியத்தை அளிப்பதன் மூலம்  பருத்தி மகசூலை அதிகரிக்கலாம்.
  • உரங்களை பட்டையாக மூன்றில் இரண்டு பங்கு உயரத்தில் மேலிருந்து இட்டு மண்ணுடன் கலந்திடவேண்டும்.

நுண்ணூட்டம் இடுதல்

தமிழ்நாடு நுண்உரக் கலவையை இரகங்களுக்கு எக்டருக்கு 12.5கிகி கலப்பினமாக இருந்தால் 15கிகி ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்க வேண்டும். ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக் கலவை மற்றும் தொழுவுரத்தை சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் ஒரு மாதம் நிழலில் உலர்த்த வேண்டும்.  அடிப்படை இலைவழித் தெளிப்பாக 2% மெக்னீசியம் சல்பேட் + காய் உருவாகும் பருவத்தில் 1% யூரியாவும் தெளிக்க வேண்டும்.

எக்டருக்கு 12.5 கிராம் நுண்ணூட்டக் கலவையை சுமார் 50 கிலோ மணலுடன் கலந்து விதைச் சாலில் தூவவேண்டும்.

ஊட்டச்சத்துக் குறைபாடுகள்

  • துத்தநாகக் குறைபாடுள்ள நிலங்களுக்கு எக்டருக்கு 50 கிராம் துத்தநாக சல்பேட் இடவேண்டும். பயிர் வளர்ச்சியின் போது குறைபாடு தென்பட்டால் 0.5 சத துத்தநாக சல்பேட் கரைசலை விதைத்த 45,60 மற்றும் 75 நாட்களில் தெளிக்கவேண்டும்.
  • மக்னீசியம் குறைபாடு உள்ள நிலங்களுக்கு எக்டருக்கு 20 கிராம் மக்னீசியம் சல்பேட்டு இடவேண்டும்.
  • அடிப்படை இலைவழித் தெளிப்பாக 2% மெக்னீசியம் சல்பேட் + காய் உருவாகும் பருவத்தில் 1% யூரியாவும் தெளிக்க வேண்டும்.

வயலில் சாகுபடி மேலாண்மை நுட்பங்கள்

விதையளவு

கீழ்க்கண்ட விதையளவை இரகங்களுக்கும் வீரிய ஒட்டு இரகங்களுக்கு பயன்படுத்தவும்.

இரகங்கள்/ வீரிய ஒட்டு இரகங்கள் உரஅளவு (கி/எக்டர்)
பஞ்சுடன் பஞ்சு நீக்கியது பஞ்சில்லா விதை
எம்.சி.யு 5, எம்.சி.யு 5 விடி, எம்.சி.யு 12, எம்.சி.யு 13, எஸ்.வி.பி.ஆர் 2 15.0 7.5 -
கே.சி 2 20 15.0 -
சுவின் - - 6.0
டி.சி.எச்.பி 2.5 2.0 -

இடைவெளி

பருத்தியைத் தனிப்பயிராகப் பயிரிடுவதாக இருந்தால் கீழ்க்கண்டவாறு கடைப்பிடிக்கவும்.

இரகங்கள்/ வீரிய ஒட்டு இரகங்கள் இடைவெளி (செ.மீ)
குறுகிய கால இரகங்கள் 60 × 30
தனி இரகங்கள் 75 × 30
அமெரிக்க × எகிப்திய இரகங்கள் 120 × 60
அமெரிக்க × அமெரிக்க இரகங்கள் 90 × 45

இரட்டை வரிசை நடவுமுறை

இம்முறையில் சால்களுக்கு இடையில் அதிக இடைவெளி விட்டு சால்களின் இருபக்கங்களிலும் விதைகள் நட்டு, இரு சால்களுக்கு இடையில் தண்ணீர் கட்டுவதால் இரண்டு வரிசையிலும் உள்ள செடிகள் தேவையான தண்ணீரைப் பெறுகின்றன. மேலும் பருத்தியில் ஊடுபயிராக மற்ற பயிர்களை பயிர் செய்வதாக இருந்தால் ஒரு வரிசையில் பருத்தியையும் அடுத்த மூன்று வரிசைகளுக்கு ஊடுபயிராகப் பயறுவகைப் பயிர்களையும் பயிர் செய்யலாம். இதனால் பருத்தியைத் தனிப்பயிராகப் பயிரிடும்போது கிடைக்கும் பயிர் எண்ணிக்கையைப் பெறுவதுடன் ஊடுபயிர் மூலமாகக் கூடுதல் பெறமுடியும்.

இரகங்கள் / வீரிய ஒட்டு இரகங்கள் பருத்திக்கான இடைவெளி (செ.மீ)
இரட்டை வரிசைக்குள் இரட்டை வரிசைக்கு இடையே செடிகளுக்கு இடையே
இரகங்கள் 60 90 30
சுவின் 80 100 45
வீரிய ஒட்டு இரகம் 100 140 60

இரண்டு வரிசைகளில் ஊடு பயிரை விதைக்கவேண்டும்.

ஊடு பயிர் விதையளவு (கி / எ) இடைவெளி (செ.மீ)
வரிசைக்கு வரிசை செடிகளுக்கு இடையில்
உளுந்து 12.5 30 10
பாசிப்பயிறு 12.5 30 10
தட்டைப்பயிறு 7.5 30 20
சோயா 20.0 30 10
சோயாவுடன் ஊடுபயிர் செய்யப்பட்ட பருத்தி
சோயாவுடன் ஊடுபயிர் செய்யப்பட்ட பருத்தி

 

பருத்தி + உளுந்து ஊடுபயிர்
பருத்தி + உளுந்து ஊடுபயிர்
பருத்தி + பச்சைப்பயிறு ஊடுபயிர்
பருத்தி + பச்சைப்பயிறு ஊடுபயிர்
பூஞ்சாண விதைநேர்த்தி

பஞ்சு நீக்கிய ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் ட்ரைகோடெர்மா விரிடி என்ற நன்மை செய்யும் ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் கலந்து உடன் விதைக்கவேண்டும். கார்பென்டாசிம் கலந்து விதையுடன் ட்ரைக்கோடெர்மா விரிடி கண்டிப்பாகக் கலக்கக்கூடாது. ஏனெனில் டிரைக்கோடெர்மா ஒரு உயிருள்ள நன்மை செய்யும் பூசணம், கார்பென்டாசிம் மருந்து அதனைக் கொன்றுவிடும். உயிர் உரங்களைக் கொண்டு ஏற்கெனவே கூறியபடி விதைநேர்த்தி செய்யவேண்டும்.

விதையை கடினப்படுத்தல்

ஒரு சதம் புங்க இலைச்சாறில் அதே அளவுடன் விதையை ஊறவைத்து உலர வைப்பதன் மூலம் முளைப்பு மற்றும் செடியின் வீரியத்தை அதிகப்படுத்தலாம்.

விதை முலாம் தயாரித்தல்

ஒரு கிலோ விதைக்கு அரப்பு இலை 100 கிராம், டி.ஏ.பி 40 கிராம், நுண்ணூட்டக் கலவை 15 கிராம், அசோஸ்பைரில்லம் 200 கிராம் எடுத்து ஐந்து சத மைதா பசையுடன் கலந்து விதை முலாம் தயார் செய்வதன் மூலம் முளைப்புத்திறன் மற்றும் செடியின் வீரியத்தைக் கூட்டலாம்.

விதைத்தல்

விதைகளை 3 செ.மீ ஆழத்தில் குழிகளில் ஊன்றவேண்டும். இரகங்களுக்கு வளம் குறைந்த நிலங்களில் குத்துக்கு இரண்டு செடியும், வீரிய ஒட்டு இரகங்களுக்கு ஒரு செடியும் விட்டு மற்ற செடிகளை விதைத்த 15 ஆம் நாள் நீக்கவேண்டும்.

3 – 5 செ.மீ ஆழத்தில் விதைகளை ஊன்றவும்
3 – 5 செ.மீ ஆழத்தில் விதைகளை ஊன்றவும்

வெள்ளப்பாசன முறையில் நாற்று முளைத்தல்

இடைவெளி நிரப்புதல்

விதைத்த பத்தாவது நாள் முளைக்காமல் இருக்கும் இடங்களில் புதிய விதைகளைக் கொண்டு நிரப்பவேண்டும். இதனால் தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

களைகளைக் கட்டுப்படுத்த உழவியல் முறைகள்

களைகளைக் கட்டுப்படுத்த மறைமுகமான சில உழவியல் முறைகள் உண்டு. அவற்றில் முக்கியமானவை பயிர் சுழற்சி, பசுந்தாள் உரம் பயிர் செய்தல், தரிசு விடுதல் முதலியவை. அடர்த்தியான தீவனப்பயிர் (அ) பயறு வகை போன்றவற்றையும் இடையுழவு செய்யக்கூடிய பயிர்களையும் பயிர் செய்தல் களைகளை குறைக்கப் பெரிதும் உதவும்.


விதைத்த 45 வது நாளில் கைக்களை எடுத்தல்

களைக் கொல்லிகள்

எக்டருக்கு 3.3 லிட்டர் பெண்டிமெத்தாலின் (அ) புளூகுளோரலின் 2.2 லிட்டர் இவற்றில் ஏதாவது ஒரு களைக்கொல்லியைப் பயன்படுத்தி களையைக் கட்டுப்படுத்தவேண்டும். பருத்தி விதைத்த மூன்றிலிருந்த ஐந்து நாட்களுக்குள் 500 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். களைக்கொல்லி தெளிப்பதற்கு என்று தனியாக ஓர் தெளிப்பான் வைத்துக் கொள்ளவேண்டும். உலோகத்தினாலான தெளிப்பான்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. இம்முறை தவிர 20 கிலோ மணலுடன் களைக்கொல்லியை கலந்து சீராக தூவியும் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

களைக்கொல்லி 30 நாட்கள் வரை களைகளை கட்டுப்படுத்தும். பின்பு 45வது நாள் கைக்களை எடுத்து மண் அணைத்து களையைக் கட்டுப்படுத்தலாம். பருத்தியை நீண்ட வரிசைகளில் விதைக்கும் போது, விதைத்த 30-35 நாட்களில் கொண்டிக் கலப்பைக் கொண்டு ஊடுழவு செய்யவும். பத்து நாட்களுக்குப் பிறகு நாட்டுக் கலப்பை மூலம் சாலெடுத்துப் பிறகு பார் கலப்பை மூலம் பார் பிடிப்பது நன்கு கட்டுப்படுத்துவதுடன் குறைந்த செலவில் மண் அணைத்து உரமிடவும் வழிசெய்கிறது.

மேலுரமிடல்

  • இரகங்களுக்கு 50 சத தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து விதைத்த 45ம் நாள் இடவேண்டும்.

  • வீரிய ஒட்டு இரகங்களுக்கு மூன்றில் ஒரு பங்கை 45 ஆம் நாளும் மற்றொரு பங்கை 65 ஆம் நாளும் இடவேண்டும்.

மண் அணைத்தல்

விதைத்த 45 ஆம் நாள் பார் சாலை களைந்து பார் எடுத்துக்கட்டி செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல்

நாப்தலின் அசிட்டிலிக் அமிலம் 40 பிபிஎம் கரைசலை மொக்குவிடும் பருவத்தில் தெளிக்கவேண்டும். முதல் முறை தெளித்து ஒரு மாதம் கழித்து இரண்டாவது முறையாக 90ம் நாள் தெளிக்கவேண்டும். 40 மில்லி நாப்தலின் அசிட்டிக் அமிலத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்தால் 40 பிபிஎம் கரைசல் கிடைக்கும். இவ்வாறு செய்வதால் மொட்டுகள் உதிர்வது குறைக்கப்பட்டு காய்கள் அதிகம் பிடிக்க உதவுகிறது.

கோடை இறவையில் பின் விதைப்பு மேலாண்மை

கோடை இறவை (மாசிப்பட்டம்) பருத்திக்க (திருவில்லிப்புத்தூர் பகுதிக்கு) ஒரு சத பொட்டாஷ் கரைசலை விதைத்த 50 மற்றும் 70 நாட்களில் தெளிப்பதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.

நுனி கிள்ளுதல்

தழைச்சத்து உரங்கள் அதிகமாக இடுவதால் தேவைக்கு அதிகமாக உயரமாக வளர்ந்து விடுவதுண்டு. இதனால் செடிகள் அதிக பூச்சி நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். இச்சந்தர்ப்பங்களில் நுனி கிள்ளுதல் அவசியமாகிறது. இவ்வாறு செய்வதால் பக்கக் கிளைகள் உருவாகி பூக்களும், காய்களும் அதிக எண்ணிக்கையில் உண்டாகி காய்கள் உரிய காலத்தில் வெடிக்க உதவுகிறது. இரகங்களுக்கு 75-80ம் நாளில் 15வது கணுவிலும், ஒட்டு இரகங்களுக்கு 85-90ம் நாளில் 20வது கணுவிலும் தண்டின் நுனியை சுமார் 10 செ.மீ அளவுக்கு கிள்ளிவிடவேண்டும். காய்கள் திரட்சியாகவும், பருமானகவும் வரை 2 சத டி.ஏ.பி கரைசலை 45 மற்றும் 75ம் நாட்களில் தெளிக்கவேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்த உடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். மீண்டும் விதைத்த மூன்றாம் உயிர்த் தண்ணீர் கட்டவேண்டும். தேவைப்பட்டால் விதைத்த 10-15ம் நாள் இடைவெளி நிரப்பும் சமயத்தில் ஒருமுறை தண்ணீர் கட்டவேண்டும். 20 நாட்கள் கழித்து 15-20 நாளுக்கு  ஒரு முறை தண்ணீர் கட்டவேண்டும். நீர்ப்பாய்ச்சுதலை மண்ணின் ஈரம் காக்கும் தன்மை, மழை, செடியின் வளர்ச்சி முதலியனவற்றைக் கருத்தில் கொண்டு மாற்றி  அமைத்துக் கொள்ளலாம்.

முளைக்கும் பருவம் : 1 முதல் 15 நாடகள் வரை
பயிர் வளர்ச்சி பருவம் : 16 முதல் 44 நாட்கள் வரை
பூக்கும் பருவம் : 45 முதல் 100 நாட்கள் வரை, டிசிஎச்பி 213 மற்றும் சுவின் 45 முதல் 87 நாட்கள் வரை எல்லா இரகங்களுக்கும்.
பயிர் முதிர்ச்சி பருவம் : 100 நாட்களுக்குப் பிறகு டிசிஎச்பி  213 மற்றும் 88 நாட்களுக்கு பிறகு அனைத்து இரகங்கள்.

பயிர் பருவங்கள் எண்ணிக்கை நீர் பாய்ச்சுதல் விதைத்த நாட்களுக்குப் பிறகு
செம்மண் களிமண்
முளைக்கும் பருவம் 1 விதைத்தவுடன் தண்ணீர் பாய்ச்சவேண்டும் விதைத்தவுடன் தண்ணீர் பாய்ச்சவேண்டும்.
  2 விதைத்த 5வது நாள் உயிர் தண்ணீர் விதைகள் நன்கு முளைத்து செடி வெளிவர விதைத்த 5வது நாள் உயிர் தண்ணீர் விதைகள் நன்கு முளைத்து செடி வெளிவர
பயிர் வளர்ச்சி பருவம் 1 விதைத்த 20 (அ) 21 நாட்கள் மற்றும் களையெடுத்த 3 நாள் பின்னர் விதைத்த 20 (அ) 21 நாட்கள் மற்றும் களையெடுத்த 3 நாள் பின்னர்
  2 விதைத்த 35 (அ) 36 நாளில் மீண்டும் தண்ணீர் பாய்ச்சுதல் விதைத்த 40வது நாளில் தண்ணீர் பாய்ச்சுதல்
பூக்கும் பருவம் அதிக அளவு தண்ணீர் பாய்ச்சுதல் வேண்டும். 1 48வது நாள் 55வது நாள்
  2 60வது நாள் 70வது நாள்
  3 72வது நாள் 85வது நாள்
  4 84வது நாள் 100வது நாள்
  5 96வது நாள் 100வது நாள்
பயிர் முதிர்ச்சி பருவம் தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்சுதல்வேண்டும்.   எல்லா இரகங்களுக்கும் எல்லா இரகங்களுக்கும்
  1 108வது நாள் 115 நாள்  
  2 120வது நாள் 130வது நாள்  
  3 130வது நாள்  
  4 144வது நாள்  
  5 150 நாட்களுக்குப் பிறகு நீர்ப்பாய்ச்சுதலை நிறுத்தவும்.  
பயிர் முதிர்ச்சி பருவம் தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்சுதல்வேண்டும்.   (சுவின், டிசிஎச்பி 213) (சுவின், டிசிஎச்பி 213)
  1 108வது நாள் 115 நாள்  
  2 120வது நாள் 130வது நாள்  
  3 130வது நாள் 145வது நாள்  
  4 144வது நாள் 160வது நாள்  
  5 160 நாட்களுக்குப் பிறகு நீர்ப்பாய்ச்சுதலை நிறுத்தவும்.  

குறிப்பு

  • வானிலையை அடிப்படையாகக் கொண்டு நீர் பாய்ச்சும் பொழுது பாசன நீர், நீராவிமானியின் விகிதாச்சாரம் 0.40 மற்றும் 0.60 ஆகிய முறைகளில் வளர்ச்சி மற்றம் காய்க்கும் காலங்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • மேலே கூறப்பட்ட நீர்ப்பாசன திட்டம் ஒரு வழிகாட்டியே, எனவே நீர்ப்பாசனத்தை காலநிலை மற்றும் மழைக்கு ஏற்ப மாற்றியமைக்கவேண்டும்.
  • மாற்றுச்சால் மற்றும் விடுசால் முறையில் நீர்ப்பாசனம் மேற்கொண்டு நீரில் தேவையை குறைக்கலாம்.

விடுசால் நீர்ப்பாசனம்

  • களி மற்றும் வண்டல் மண் வகைகளுக்கு ஏற்றது.
  • ஒன்றுவிட்ட சால்களை நிரந்தரமாக விட்டுவிடவேண்டும். அவைகளை அகலமான பாத்திகளாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
  • குறுகியகால பயிர்களான பயறுவகைப் பயிர்களை இவ்வகைப் பாத்திகளில் விதைக்கலாம். தனியாக நீர்ப்பாய்ச்ச வேண்டிய தேவை குறைகிறது.
  • இதன் மூலம் 500 நீர்த்தேவையை குறைக்கலாம்.

மாற்றுச்சால் நீர்ப்பாசனம்

  • ஒவ்வொரு முறை நீர்ப்பாய்ச்சும் போதும் பாதிச்சால்கள் (ஒன்றுவிட்டு ஒன்று) மட்டும் நீர்ப்பாய்ச்சப்படுகிறது.
  • நீர்ப்பாய்ச்சும் இடைவெளி குறைக்கப்படவேண்டும்.
  • அடுத்த முறை நீர்ப்பாய்ச்சும் போது மீதிப்பாதி (ஒன்றுவிட்டு ஒன்று) சால்களில் நீர்ப்பாய்ச்சவேண்டும்.
  • இதுவும் களி மற்றும் வண்டல் மண் வகைகளுக்கு ஏற்றது.
Cotton Cotton Cotton

தண்ணீர் தட்டுப்பாடு இருந்தால், கீழ்குறிப்பிட்டுள்ள முக்கிய வளர்ச்சிப் பருவங்களில் கண்டிப்பாக நீர்ப்பாய்ச்சவேண்டும்.

1. 40-45 நாள் (பூக்கும் பருவம்)                -           ஒருமுறை
2. 60-65ம் நாள் (காய்க்கும் பருவம்)          -           ஒருமுறை
3. 75-80ம் நாள் (காய் வளர்ச்சி பருவம்)    -           ஒருமுறை
4. 90-100ம் நாள் (காய் முதிர்ச்சிப்பருவம்) -           ஒருமுறை

மேற்கண்ட நான்கு பருவங்களிலும் குறைந்தது ஒரு முறை வீதம் ஆக மொத்தம் நான்கு முறை தண்ணீர் கட்டுவது மிக மிக அவசியம். தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள இடங்களில் மாற்றுச்சால் முறையில் (அதாவது ஒரு சால்விட்டு மறுசாலில்) மேற்கண்ட நான்கு பருவங்களிலும் நீர் பாய்ச்சுவதன் மூலம் சுமார் 50 சதம் அளவு  தண்ணீரை மிச்சப்படுத்த முடியும். வசதியுள்ள விவசாயிகள், குறிப்பாக வீரிய ஒட்டு இரகப்பருத்திக்கு சொட்டு நீர் முறையைக் கையாளலாம். பாத்திகளில் நடுவதைவிட சால்களில் நடுவது தண்ணீரை சிக்கனப்படுத்தும்.

அறுவடை

உயர்ந்த அளவில் விளைவிக்கும் பருத்தியை கட்டுக்கோப்பான அறுவடை  செய்வதும் கிடைத்த மகசூலும் தரம் பிரித்து தக்கவாறு சேமித்து பின்பு விற்பனை செய்வதும், பருத்திச் சாகுபடியின் இறுதிக் கட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான பணியாகும்.

இந்த விதத்தில் பருத்தி மற்ற எல்லா பயிர் வகைகளிலிருந்தும் முற்றிலும் மாறுபாடுகிறது. ஏனைய பயிர்க்ள அடுத்தடுத்து ஒன்று அல்லது இரண்டு தடவைகளில் அறுவடையாகி விடும்போது, பருத்தி அறுவடை செய்வது சுமார் நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை நீடிக்கப்படுகிறது. இது தற்சமயம் நம் நாட்டில் பயிரிடப்படும் எல்லா பருத்தி இரகங்களிலும் உள்ள ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகும்.

கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் எல்லா காய்களும் வெடித்து, ஒன்றிரண்டு தடவைகளிலேயே எல்லா பருத்தியையும் அறுவடை செய்வது இன்றைய பொருளாதார சூழ்நிலையில் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு குறிக்கோளாகும். ஆனால் இதற்கேற்றபடி வெகு குறுகிய காலத்தில் மகசூல் கொடுக்கக்கூடிய இரகங்கள் உருவாக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் பருத்தி புரட்டாசி பட்டத்தில், அதாவது குளிர் காலப்பயிராக பயிரிடப்படும்பொழுது, ஆடிக் கடைசி மற்றும் புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பட்டு தை மற்றும் மாசி மாதத்திலும் மாசிப் பட்டத்தில் விதைக்கப்படும் பொழுது ஆனி, ஆடி மாதங்களிலும் பருத்தி எடுக்கமுடியும். இந்த இரு பருவங்களிலும் நிலவும் பெரும்பாலும் மிகவும் உதவுகின்றன.

அறுவடைக்கான இந்த சூழ்நிலையை, குறிப்பாக பருத்திக் காய்கள் நன்கு வளர்ச்சியடைந்து, முதிர்ச்சி பெற்று, சீராக வெடித்து முழுப்பலனையும் கொடுக்குமளவுக்குப் பயன்படுத்தல் மிகவும் முக்கியம். நீண்டகால இரகங்களான சுவின், டி.சி.எச்.பி 213, மத்திய கால இரகமான எம்.சி.யு 5, எல்.ஆர்.ஏ 5166, எம்.சி.யு 12, எம்.சி.யு 13 மற்றும் இடைவிட இன்னமும் குறுகிய காலத்தில் விளைந்திடும் எம்.சி.யு 7, எஸ்.வி.பி.ஆர் 2 அவற்றின் வயதுக்கேற்றபடி, தகுந்த பருவங்களில் விதைத்து, மழையற்ற தெளிவான சூழ்நிலையில் எல்லாக் காய்களும் வெடிக்கும்படி செய்வது நல்லது.

பருத்திக் காய்களில் மேலிருந்து கீழாக லேசாக கீறல் தோன்றி, பின்பு சுமார் 2-3 நாட்களில் முழுவதுமாக நன்றாக மலர்ந்து வெடித்தபின் தான் பருத்தி எடுக்கவேண்டும். சரிவர வெடிக்காத காய்களிலிருந்து பருத்தி எடுக்கக்கூடாது. 120 நாளில்  தொடங்கி வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை வீதம் நான்கு முறை பருத்தி எடுக்கலாம். நன்கு மலர்ந்து வெடித்த காய்களில் உள்ள நான்கு, ஐந்து சுளைகளையும் கைவிரல்களை காய்க்கு பக்கவாட்டில் கொடுத்த லாவகமாக எடுக்கவேண்டும். ஒரு கையால் காய்களைப் பறித்து இன்னொரு கையால் பருத்திச் சுளைகளை எடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.

காலை இளம் வெயில் நேரத்தில் பத்து மணிக்குள்ளாகவும், மாலை மூன்று மணிக்கு பின்புப் பருத்தி எடுப்பது நல்லது. நடுப்பகலில், வெப்பமான சூழ்நிலையில் எடுக்கப்படும் பருத்தியில், காய்ந்து ஒடிந்த புழவிதழ்களும், சருகுகளும் சேர்ந்து நல்ல பருத்தியோடு கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. மேலும் இந்தப் பச்சை காய்களை பின்பு வெயிலில் உலர்த்தி வெடிக்கச் செய்தோ அல்லது தடியால் அடித்து பருத்தியை காய்களிலிருந்து பிரித்து எடுப்பது இன்னும் புழக்கத்தில் இருந்து வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

தும்பும் தூசியும் இல்லாதபடி எடுக்கப்படும் சுத்தமான பருத்திச் சுளைகளை தனியாக ஒரு துணிப்பையிலோ அல்லது சாக்குப் பையிலோ வைத்துக் கொண்டு செடியிலிருந்து கிடைக்கும் தரம் குறைந்த (அ) கொட்டை பருத்தியை தனியாக இன்னொரு பையிலுமாக வைத்துக் கொள்ளவேண்டும். துணிப்பையில் சேமிப்பதால், பருத்தி மாசுபடாமல் சுத்தமாக இருக்கிறது. எடுத்த பருத்தியை, வயலில் மண் தரை மேல் கொட்டி வைப்பதோ, நாள் முழுவதும் சூரிய வெப்பத்தில் காயும்படி போட்டு விடுவதோ கூடாது. மரநிழலிலோ அல்லது பண்ணையைச் சேர்ந்த வீட்டு முற்றங்களிலோ, கெட்டியான மண் (அ) சிமெண்டு தரையில் பருத்தியை அம்பாரம் போட்டு. பின்பு விற்பனைக்கு முன் நல்ல பருத்தி, கொட்டைப் பருத்தி, கொட்டைப் பருத்தியை மறுபடியும் தரம் பிரித்து. சாக்குப் பைகளில் தைத்து விற்பனைக்கு அனுப்பவேண்டும்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் எங்கெங்கு பருத்தி தரம் பிரிக்கும் வசதிகள் உள்ளனவோ அவற்றை பருத்தி விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தரக்கட்டுபாட்டுக்கு உட்படுத்தப்பட்ட பருத்திக்கு தனி மதிப்பும், கூடுதல் விலையும் உண்டு.

மானாவாரி பருத்திக்கான சாகுபடிக் குறிப்புகள்

பருவமும் இரகங்களும்

புரட்டாசியில் 375 மி.மீ வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது, மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி ஆகிய பகுதிகளுக்கு எல்.ஆர்.ஏ 5166 (அ) எஸ்.வி.பி.ஆர் 2 (அ) கே.சி.2, கே.சி.3 இரகங்களை தேர்வு செய்யலாம். புரட்டாசியின் பின்பகுதி மற்றும் ஐப்பசி மாதங்களில் மழை பெறும் இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் கே 11 மற்றும் கே.சி இரகத்தை தேர்வு செய்யலாம்.

மானாவாரிக்கேற்ற நிலப்பண்பாடு

நிலம் தயார் செய்தல்

  • முன் பருவப் பயிர் அறுவடை முடிந்தபின்பு உடனே நிலத்தை உழுது தயார்  செய்யவேண்டும்.
  • நிரந்தரதமான அகலப்பாத்தி ஆழச்சாலைக் கையாளலாம்.

கோடை உழவு

மழை நீரைத்  தேக்கி தன்னுள் வைத்துக்கொள்ளும் அதிகரிக்கும் பொருட்டு கோடை உழவு செய்தல் மிக அவசியம். இது நீரை சேமிக்க உதவுவது மட்டுமன்றி களைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கோடை உழவு செய்யும்போது நிலத்தின் சரிவுக்கு குறுக்காக உழவு செய்யவேண்டும். எனவே, வழிந்தோடி வீணாகும் நீர் தடுக்கப்பட்டு உட்கிரகிக்கப்படுகிறது.

தொழு உரம் இடுதல்

மண்ணின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு தொழு உரம், மக்கிய குப்பை (அ) ஆடு மாடுகள் கிடைபோடுதல் ஆகியவற்றை முறையே செய்யவேண்டும். ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் இடுவதால், மண்ணின் அங்ககத் தன்மை நிலை நிறுத்தப்பட்டு பருத்தியின் விளைச்சலையும் அதிகமாகப் பெறலாம். இப்படி  இடுவதன் மூலம் மண்ணின் நீர் சேமிப்புத் திறனும் அதிகரிக்கின்றது.

  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நுண்உரக் கலவையை @ 7.5 ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும்.

உர அளவு

மண் பரிசோதனைப்படி உரம் இடவேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரையின்படி உரமிடவேண்டும்.

இரகங்கள் உர அளவு (கி / எக்டர்)
தழை மணி சாம்பல்
கருங்கண்ணி இரகங்கள் 20 0 0
கம்போடிய இரகங்கள் 40 20 40

சிபாரிசு செய்யப்பட்ட தழைச்சத்தில் பாதியையும் முழு அளவும் மணிச்சத்தை அடியுரமாகவும் இடவேண்டும். மீதித் தழைச்சத்தை 25-30 நாட்களுக்குள் மழை பெய்த பிறகு மேலுரமாக இடவேண்டும். இடுபொருள் செலவைக் குறைக்க அசோஸ்பைரில்லம் அசோட்டோபாக்டர் என்ற நுண்ணுயிர் கலவையை எக்டருக்கு 2000 கிராம் அளவில் இட்டு இரசாயன உரத் தேவையைக் குறைக்கலாம்.

நுண்ணூட்டக்கலவை இடுதல்

வேளாண் துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணூட்டக் கலவையை 12.5 கிலோ சுமார் 50 கிலோ மணலுடன் கலந்து விதைச் சாலில் தூவவேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நுண்உரக் கலவையை எக்டருக்கு 7.5கிகி  ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக்கலவை மற்றும் தொழுவுரம் சேர்த்து தகுந்த வெப்பநிலையில் ஒரு மாதம் நிழலில் உலர்த்தவும்.

மானாவாரி பி.டி பருத்தியில் மகசூலை அதிகரித்தல் மற்றும் சிவப்பாதலைக் குறைத்தல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்உரக்கலவை (இரகங்களுக்கு எக்டருக்கு 7.5 கிகி மற்றும் பி.டி பருத்தி எக்டருக்கு 10 கிகிராமை ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்க வேண்டும்) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பி.ஜி.ஆர் இலைத் தயாரிப்பு 1.5% அடர்வு காய் உருவாகும் பருவத்தில் தெளிக்க வேண்டும் அதனுடன் பரிந்துரைக்கப்பட்ட தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை விதை பருத்தியின் மகசூலை அதிகரிக்க மற்றும் இலை சிவப்பாதவை குறைக்க அளிக்கவும்.

விதையளவு

பஞ்சு நீக் கிய விதைகள் எக்டருக்கு 15 கிலோவும், பஞ்சு நீக்கப்படாத விதைகள் 20 கிலோவும் தேவைப்படும். ஊடுபயிராக உளுந்து மற்றம் பச்சைப்பயிர் பயிரிடுவதாக இருந்தால் எக்டருக்கு 10 கிலோ தேவைப்படும். தட்டைப்பயிறுடன் பயிரிடுவதாக இருந்தால் 7.5 கிலோ போதுமானது. நிலத்தை நன்றாக உழுதபின் 150 செ.மீ அகலத்திற்கு மேட்டுப் பாத்திகள் அமைத்து அதன் பக்கவாட்டில் 30 செ.மீ அகலமும் 30-60 செ.மீ ஆழமும் உள்ள சால்களை அமைக்கவேண்டும். இதன் மூலம் மண்ணின் ஈரம் அதிக காலம் பராமரிக்கப்பட்டு பயிர் செழித்து வளர ஏதுவாகின்றது. இயலவில்லையெனில் சாதாரண சால் முறையைக் கடைபிடிப்பது சிறந்தது. விதை நேர்த்தி, இறவைப் பயிருக்கு செய்தது போலவே, மானாவாரிப் பயிருக்கு செய்யவேண்டியது அவசியம்.

விதைப்பு

நிலத்தில் விதைகளை குறிப்பிட்ட ஆழத்தில் விதைக்கும்பொழுது பயிர்களின் முளைப்புத்திறன் அதிகரித்து பயிரின் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. பருத்தி விதையை 5 செ.மீ ஆழத்தில் விதைக்கவேண்டும். கொரு என்ற விதைப்பான் (அ) டிராக்டரின் மூலம் விதைக்கக்கூடிய உழவு விதைப்பான் கொண்டும் விதைக்கலாம்.

பயிர் இடைவெளி

தனிப்பயிராக இரகங்களையோ வீரிய ஒட்டு இரகங்களையோ சாகுபடி செய்யும் போது வரிசை இடைவெளியாக 45 செ.மீ செடிகளுக்கு இடையே 15 செ.மீ அளவும் விடவேண்டும்.

ஊடுபயிர் சாகுபடி செய்யும் போது ஓர் இரட்டை வரிசை பருத்தியை அடுத்து இரண்டு வரிசை பயறுவகை பயிர்கள் ஊன்றப்படுகின்றன. இதனால் பருத்தி செடியின் எண்ணிக்கை குறைவதில்லை.

இரகங்கள் பருத்திக்கான இடைவெளி (செ.மீ)
இரட்டை வரிசைக்குள் இரு இரட்டை வரிசைக்கிடையில் செடிகளுக்கு இடையில்
கே.11, எல்.ஆர்.ஏ 5166, எஸ்.வி.பி.ஆர் 2 30 60 15

பயறு வகைகளுக்கு 30 × 10 செ.மீ இடைவெளியில்  ஒவ்வொரு இரட்டை இடைவெளியில் விதைக்கலாம். ஏ.பி.கே 1 என்ற உளுந்து இரகம் இதற்கு உகந்ததாகும்.

அமில விதை நேர்த்தி

இறவைப் பயிருக்கு செய்தது போலவே

பஞ்சு நீக்கிய விதைகளில் பூஞ்சாணக் கொல்லி நேர்த்தி

இறவைப் பயிறுக்கேற்றாற் போலவே

விதைப்பு

  • பலபயன் கருவியால் விதைப்பு மற்றும் உரமிடலை ஒரே சமயத்தில் செய்யலாம்.
  • கூம்பில் உரக்கலவையை இட்டு நிரப்பி இயக்கவேண்டும்.
  • மூன்று நபர்களைப் பயன்படுத்தி இருவர் பருத்தியையும் ஒருவர் பயறுவகை விதைகளையும் இடவேண்டும்.

குறிப்பு

பருத்தி மற்றும் பயறு வகை விதைகளை 5 செ.மீ ஆழத்தில் கரிசல் மண்ணில் விதைக்கும்  போது குறைந்த மழையால் அவை பாதிக்கப்படுவதில்லை. அதிக மழை பெய்யும் போது மட்டுமே நீர் இந்த ஆழத்திற்கு இறங்கி விதைகள் முளைக்கின்றன.

இடைவெளி நிரப்புதல்

ஒவ்வொரு இடைவெளியிலும் 3-4 விதைகளை விதைக்கவேண்டும்.

செடி களைப்பு

ஒரு குத்துக்கு இரண்டு செடிகளை விட்டு, விதைத்த 15 ஆம் நாள் செடிகளை களைத்து விடவேண்டும். பயறுவகை செடிகளை விதைத்த 20 ஆம் நாள் தட்டைப்பயறுக்கு 20 செ.மீ மற்றப் பயிர்களுக்கு 15 செ.மீ அளவில் விட்டு களைந்து விடவேண்டும்.

களைக்கட்டுப்பாடு

பருத்திக்கு புளுகுளோரின் என்ற களைக் கொல்லியை எக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் நீருடன் கலந்து தெளித்தலின் மூலம் முதல் 25 நாட்களுக்குள் களைகளை தடுக்கலாம். பின்பு 30 (அ) 40வது நாளில் களைக் கொத்தியைக் கொண்டோ (அ) தந்துலு கலப்பையைக் கொண்டோ இரண்டாவது முறையாக களைகளை அப்புறப்படுத்தவேண்டும்.

இலைவழி தெளித்தல்

பயிர்  வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு கிலோ யூரியாவை 1 லிட்டர் தண்ணிரில் கலந்து 45 மற்றும் 65 நாட்களில் இலைகளில் தெளிக்கவேண்டும்.

பயிரிடை நேர்த்தி

விதைத்த 30 மற்றும் 45 ஆம் நாட்களில் நீண்டதகடுக்கத்தி கலப்பை கொண்டு உழுவது செடி வளர்ச்சி உகந்ததாகிறது. களையைக் கட்டுப்படுத்த மட்டுமன்றி நீரைச் சேமிக்கவும் உதவுகிறது. மண்ஈரம் காக்கும்பொருட்டு மண் போர்வை அமைத்து பயிர் வறட்சியில் வாடுவதைத் தடுக்கலாம். இதற்காக கசிவுநீர் மற்றும் பயிர்க் கழிவுகளைப் பயன்படுத்தலாம்.

பயிர் வினையியல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் காட்டன் ப்ளஸை ஏக்கருக்கு 2.5 கிகி 200லி தண்ணீரில் கலந்து இலைத் தெளிப்பாக அளிப்பதன் மூலம் பூ உதித்தல் குறைகிறது, காய் வெடித்தல் அதிகரிக்கிறது, விதை பருத்தி மகசூல் அதிகரிக்கிறது மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மையை அளிக்கிறது.

அறுவடை

குளிர்கால இறவைப் பருத்தியில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளையே கடைபிடிக்கவும்.

பயிர் பாதுகாப்பு

ஆதாரம்:

  1. இந்தியாவில் Bt பருத்தி மற்றும் Non-Bt பருத்தி பொருளியல் விபரம்
    வசந்த் P. காந்தி & N.V. நம்பூதிரி,
    விவசாயம் மேலாண்மை மையம்,
    enthia மேலாண்மை நிறுவனம், அகமதாபாத்

  2. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த Bt மற்றும் non –Bt பருத்தி விவசாயிகள் வாழ்வாதார மதிப்பீடு
    சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (EMPRI)
    வன, சூழலியல் & சுற்றுச்சூழல் துறை,
    Hasiru பாவனா, Doresanipalya வன வளாகம்,
    பெங்களூர் 560 078, இந்தியா.

  3. Bt பருத்தி -கேள்வி பதில்கள்
    K.R. கிராந்தி,
    இயக்குனர்,
    மத்திய பருத்தி ஆராய்ச்சி, நிறுவனம்,
    நாக்பூர் பருத்தி முன்னேற்றம் இண்டியன் சொசைட்டி (ISCI க்கு),
    மும்பை இந்திய பருத்தி முன்னேற்றம் (ISCI) , மும்பை

  4. Bt பருத்தி மற்றும் non-Bt பருத்தி பொருளியல் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு
    ஜன ஒர்ப்ஹல்
    தோட்டக்கலை பொருளியல் நிறுவனத்தின்
    வணிக, நிர்வாகம் மற்றும் பொருளியல் பிரிவு
    Hannover பல்கலைக்கழகம், ஜெர்மனி

  5. இந்தியாவில் சமூக-பொருளாதார மற்றும் Bt பருத்தி பண்ணை நிலை தாக்கம் 2002-2010
    பாகீரதன் சவுத்ரி
    கடம்பினி காட்டெருமை
    அக்ரி உயிரி தொழில்நுட்ப பயன்பாடுகளில் கையகப்படுதுதலில் சர்வதேச சேவை--(ISAAA)
 

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021

Fodder Cholam