த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: பெண்களும் விவசாயமும்

பண்ணைத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உடை

பூச்சிக்கொல்லிகள் மற்றும் கரிம தூசி வெளிப்பாடு ஆகியவை சிறு மற்றும் குறு விவசாயிகளில் காணப்படும் மிக முக்கியமான தொழில்சார் அபாயங்கள் ஆகும். இந்த தொழில்சார் அபாயங்களை மேற்கொள்ள பாதுகாப்பு ஆடை அல்லது ஆடை பாகங்கள் பிரத்தியேகமாக வடிவமைத்து எந்த அளவிற்கு அது பொருந்தக்கூடிய ஒன்றாக இருக்கின்றதா என்று பரிசோதனை செய்யப்படுகின்றது. இவ்வாறு வடிவமைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட ஆடைகள், உடலுக்கு எந்த ஒரு சிக்கலையும் உருவாக்காமல் வேலை பார்க்கும் பொழுது எந்தவித பிரச்சனையையும் ஏற்பதுதாமல் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வடிவமைக்கப்பட்ட ஆடைகளை உடுத்தி வேலை பார்ப்பதனால் சுகாதார ஆபத்துகள் குறைந்து வேலைத் திறனை அதிகரித்துள்ளது.

ஆடை பேட்டை மற்றும் நீர் ஆதார துணியைக் கொண்ட பைஜாமா (பஞ்சுப்பொருட்கள் உள்ளே வைத்து தைத்தல்), இரசாயனங்களை எதிர்க்கும் செயற்கை சுவாசக் கருவி, கண்ணாடிகள், விளையாட்டு ஷூக்கள் மற்றும் அறுவை சிகிச்சைக் கையுறைகள் ஆகியவை பாதுகாப்பான ஆடைகளாக விளங்குகின்றன. தானியங்களைப் போரடிக்கும் பொழுது, பாதுகாப்பான ஆடைகளான மேல் உடைகள் (ஆண்களுக்கு), முழுக்கை கமீஸ் (பெண்களுக்கு), அலகு முகமுடி, கண்ணாடிகள் மற்றும் விளையாட்டு ஷூக்கள் ஆகியவற்றை அணியவேண்டுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016