முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

தென்னையில் ஊடு பயிராக பப்பாளி, எலுமிச்சை

நடராஜன்
கோட்டைத்தலைவாசல்,
ஸ்ரீவில்லிபுத்தூர்.
தொடர்புக்கு : 89039 66576

தென்னந்தோப்பில் ஊடு பயிராக பப்பாளி, எலுமிச்சை பயிரிட்டு அதன் மூலம் அதிக மகசூல் கண்டு சாதனை படைத்து வருகிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி நடராஜன்.கோட்டைத்தலைவாசல் தெருவை சேர்ந்த இவர், கடந்த 23 ஆண்டாக விவசாயம் செய்து வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூரின் மேற்கே திருவண்ணாமலை பகுதியில் 50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 5ஏக்கர் தென்னந்தோப்பில், ஊடுபயிராக தைவான் நாட்டு ரெட்லேடி என்ற ரக பப்பாளியை பயிரிட்டுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு பயிரிட்ட பப்பாளி 9 மாதங்களில் நல்ல மகசூலை கொடுத்துள்ளது. ஒரு ஏக்கருக்கு 60 டன் பப்பாளி உற்பத்தியாகிறது.

இதை தேனி மாவட்டத்தை சேர்ந்த மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, கொச்சி, எர்ணாகுளம், தூத்துக்குடி துறைமுகங்கள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்புகின்றனர். இந்த பழங்கள் நல்ல சுவை கொண்டது. கெட்டு போகாது. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் என்கிறார் விவசாயி நடராஜன்.

அவர் கூறியதாவது: சரியான நீர் மேலாண்மை, உர நிர்வாகம், கண்காணிப்பு இருந்தால் பப்பாளி பயிரிட்டு நல்ல மகசூல் பெறலாம். உரம், மருந்து அடித்தல், வேலையாட்கள் கூலி என ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் வரை செலவிட்டு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டால் ஏக்கருக்கு ரூ. 5லட்சம் வரை லாபம் ஈட்டலாம்.
இன்றைய காலத்தில், விவசாயத்தை பொறுத்தவரை காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி யோசித்து பயிரிடவேண்டும். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நீர் மேலாண்மையை கடைப்பிடித்து அதிக மகசூல் ஈட்டலாம்,என்றார்.

Updated on September,2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015