முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

விவசாயத்திலும் விஞ்ஞானி சாதனை

எம்.ஆபிரகாம்
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம், தொடர்புக்கு 98431 85444

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கல்லுவழியில் இயற்கை உரம் மூலம் பலா மரங்களை வளர்த்து, ஆண்டு தோறும் ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் சம்பாதித்து வருகிறார் விவசாயி எம்.ஆபிரகாம் அவர் கூறும்போது: கிராமத்தில் மா, பலா, தென்னை, கொய்யா உள்ளிட்ட பழ பண்ணை வைத்து, அதில் ஆடுகள் வளர்க்கிறேன். இதற்காக மா, பலா, தென்னை மரங்களுக்கு இடையே சொட்டு, தெளிப்பு நீர் பாசன கருவி மூலம் தண்ணீர் தெளித்து பசும்புற்கள் வளர்க்கிறேன். இவை ஆடுகள் மேய்ச்சலுக்கு பயன்படுகின்றன. ஆடு, கோழி கழிவுகளை மட்டுமே விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்துகிறேன்.

இங்கு 200 ஏக்கரில் 2,000 பலா மரங்களை நடவு செய்துள்ளேன். முதற்கட்டமாக வைத்த 500 பலா மரங்களுக்கு இயற்கை உரங்கள் போட்டு, சொட்டு, தெளிப்பு நீர் கருவி மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். பலா மரக்கன்றுகள் நட்ட 4 ஆண்டுக்கு பின் பழம் விளைச்சல் துவங்கியது. கடந்த 15 ஆண்டாக 500 மரங்களில் இருந்து மார்ச் முதல் ஜூன் வரை பலா பழம் விளைச்சல் இருக்கும். ஏக்கருக்கு 75 முதல் 150 மரங்கள் வரை நடவு செய்துள்ளேன். 
ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 100 முதல் 200 பழங்கள் விளையும். பழம் 10 முதல் 20 கிலோ எடை இருக்கும். வறண்ட சிவகங்கையில் நிலத்தடி நீருக்கு தட்டுப்பாடு நிலவியபோதும் இருக்கும் தண்ணீரை சேமித்து விவசாயம் செய்யும் நோக்கில் சொட்டு நீர் பாசனத்தில் சிங்கப்பூர் ஒட்டு, நாட்டு ரக பழங்கள் விளைகின்றன. பலா பழ விளைச்சல் மூலம் ஆண்டுக்கு ஏக்கருக்கு செலவு போக ரூ.1 லட்சம் கிடைக்கும், என்றார்.

Updated on June, 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015