பட்டுப்புழு வளர்ப்பு - பயிற்சி

அலுவலர்கள் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவென ஒசூரில் 1973 ஆம் ஆண்டு அரசு பட்டுப்புழு வளர்ப்புப் பயிற்சிப்பள்ளி தொடங்கப்பட்டது.

இப்பயிற்சிப் பள்ளி 2005 – 2006 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு “தமிழ்நாடு பட்டுப்புழு வளர்ப்புப் பயிற்சி மையம்”  எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

விவசாயிகள், அலுவலர்களின் தேவைக்கேற்ப, நேரடி மற்றும் தொலைதூரப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

தமிழ்நாடு பட்டுப்புழு வளர்ப்புப் பயிற்சி மையத்தால் வழங்கப்பட்டு வரும் பாடப் பிரிவுகள்:

 1. உற்பத்தி மேம்பாட்டுப் பயிற்சி (6 மாத பயிர்களுக்கு) – அரசுத் துறை பணியாளர்களுக்கு மட்டும்
 2. முசுக்கொட்டை சாகுபடி, தொழில்நுட்பங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய்க்கட்டுப்பாடு
 3. இளம்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்
 4. வளர்ந்த பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்
 5. பட்டுப்புழுவில் நோய் மேலாண்மை
 6. 6 மாத பட்டுப்புழு வளர்ப்பாளர்களுக்கென பயிற்சி – பகுதி II திட்டத்தின் கீழ்
 7. புதிதாக பட்டுப் பூச்சி வளர்ப்புத் தொடங்கும் ஆரம்ப நிலை விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல்

மைசூரில் உள்ள மத்திய பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி மையத்தில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள்

 1. பட்டுப்புழு வளர்ப்பு – அரசுப் பணியாளர்களுக்காக
 2. பூச்சி மற்றும் நோய் மேலாண்மை - அரசுப் பணியாளர்களுக்காக
 3. பட்டுப் பூச்சி இனப் பராமரிப்பு - அரசுப் பணியாளர்களுக்காக

பட்டுப்புழு விதைத் தொழில் நுட்ப ஆய்வகம், கோடத்தை பெங்களூரில் அளிக்கப்பட்டு வரும் பாடப் பிரிவுகள்:

 1. விற்பனைக்கான (வணிகரீதியான) விதை உற்பத்தித் தொழில் நுட்பங்கள். தானிய பூர்ணம்
 2. கூட்டுப்புழு விதைப் பராமரிப்பு மற்றும் தனியான முட்டை உற்பத்தி - தானிய பூர்ணத்திற்காக
 3. அமில சிகிச்சை - தானிய பூர்ணத்திற்காக
 4. முட்டை பதப்படுத்தும் முறைகள்

மகளிருக்கான பயிற்சித் திட்டங்கள்

மத்திய பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி மையம் மகளிருக்காக பல மனித வள மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொழில் நுட்ப துறையுடன் இணைந்து “மகளிருக்கான பட்டுப்புழு தொழில் நுட்பம்” என்ற பெயரில் இத்திட்டங்களை வழங்கி வருகிறது. இப்பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து மகளிருக்கும் இலவச தங்கும் விடுதி, உணவு மற்றும் போக்குவரத்து கட்டணம் போன்ற சலுகைகள் அளிக்கப்படுகிறது.

வ. எண் பயிற்சி(பாட)ப் பிரிவின் பெயர் பயிற்சிக் காலம்
(நாட்கள்)
1 சூழ்நிலையுடன் இணைந்த முறையில் முசுக்கொட்டையில் ஒருங்கிணைந்த நோய் மற்றும் ஊட்டச் சத்துப் பராமரிப்பு 6
2 இளம் புழு வளர்ப்பு 8
3 கூட்டுப் புழு வளர்ப்பு 35
4 உயிரி – பூச்சிக் கொல்லிகள், உயிரி – பூஞ்சாணக் கொல்லிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கயுடன் இணைந்த முறையில் நோய் மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு 10
5 பட்டுப் புழு வளர்ப்பில் வெளிவரும் உப பொருட்களை மதிப்பூட்டல் செய்து வளங்களை சிறந்த முறையில் மேலாண்மை செய்தல் 6
6 சரியான அமைப்பு முறைகளைப் / உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஆட்குறைப்பு செய்தல் 6
7 பட்டுப்புழு விதை உற்பத்தி -
8 பட்டுப் புழு வளர்ப்பை இயந்திரமாக்கப் பயிற்சி அளித்தல் -
   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014