பட்டுப்புழு வளர்ப்பு -நோக்கங்கள்

கீழ்க்காண்பவை பட்டுப்புழு வளர்ப்புத் துறையின் நோக்கங்கள் ஆகும்.

  1. பட்டுப்புழு வளர்ப்பாளர்களை அதிக உற்பத்தியும் வருமானமும் பெற அதிக விளைச்சல் தரும் முசுக்கொட்டை இரகங்களைப் பயிர் செய்யுமாறு வலியுறுத்துதல்.
  2. பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, முசுக்கொட்டை வளர்ப்பு போன்ற பயிற்சிகளை ஆர்வலர்களுக்கு அளித்தல்
  3. பட்டுப்புழு வளர்ப்பதற்கென தனி வளர்ப்புக் கூடம் அமைத்தல், மேம்படுத்தப்பட்ட தரமான உபகரணங்களை வாங்குவதில் விவசாயிகளுக்கு  உதவி செய்தல்
  4. பட்டுப்புழு வளர்ப்பாளர்களுக்கு நோய் தாக்கமில்லாத தூய விதைகளை அளித்தல்
  5. நோய் தாக்கங்களைப் பற்றி முன்கூட்டியே அறிந்து தக்க சமயத்தில் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் அதிக கூட்டுப்புழு உற்பத்தியை பெற விவசாயிகளின் திறமையை ஊக்கப்படுத்த வேண்டும்.
  6. பட்டு நூல் பிரித்தெடுக்கும் அமைப்புகளைத் தனியார் துறையில் அமைக்க உதவுதல்
  7. முசுக்கொட்டைப் வளர்ப்பிற்கு சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தேவையான ஆலோசனைகளை வழங்குதல்
  8. பட்டுப்புழு வளர்ப்பாளர்களையும் , பட்டு நூல்  நூற்டிடிபாரையும் கூட்டுப்புழுக்களை ஒழுங்கு முறைக் கூடத்திற்கு சென்று வாங்கவோ விற்கவோ வலியுறுத்துதல்.
  9. புதிதாகக் கண்டறியப்பட்ட பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் நுட்பங்களைப் பின்பற்ற விவசாயிகளை அறிவுறுத்துதல்.

 

   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014