பட்டுப்புழு வளர்ப்பு - செயல்பாடுகள்

முசுக்கொட்டை பரப்பளவை விரிவுபடுத்துதல்

 1. பட்டுப்புழு உற்பத்தி மற்றும் விநியோகம்
 2. கூட்டுப்புழு உற்பத்தி
 3. நூற்கப்படாத பட்டு நூல் உற்பத்தி
 4. வேலை வாய்ப்புப் பெருக்கம்
 5. அண்ணா அரசு பட்டு நூல் பரிமாற்றம் (அ) கழகம், காஞ்சிபுரம்
 6. தமிழ்நாடு பட்டு நூல் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம், டான்சில்க்.

அண்ணா அரசு பட்டு நூல் பரிமாற்றக் கழகத்தினால் பட்டுநூல் பிரித்தெடுக்கும் தொழில்துறையில் தனியாரின் பங்கு அதிகரித்துள்ளது. கூட்டுப்புழு பரிமாற்றச் சந்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் மூலம் இதைக் கண்கூடாகக் காணலாம். மேலும் இக்கழகத்தின் நடவடிக்கையால் இடைத்தரகர்களின் இடையூரின்றி பட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் நேரடியாகத் தொடர்புகொள்ள முடிகிறது. இதனால் உற்பத்தியாளர்களின் பட்டு நூல்களுக்கு உகந்த விலை கிடைக்கிறது.

அண்ணா பட்டு நூற்பாலையின் மூலமாக பட்டுநூல் உற்பத்தியாளர்களிடமிருந்து பட்டு இழைகள் பெறப்படுகின்றன. இவற்றை தமிழ்நாடு பட்டு நூற்பாளர்கள் கூட்டுறவுச் சங்கம் நூற்பாளர்களிடம் அளித்து நூற்கப்பட்ட பட்டு நூலாகப் பெறுகின்றன. இவற்றை கூட்டுறவு நெசவாளர்கள் கைத்தறி, காதி சர்வோதய சங்க நெசவாளர்களுக்கு விற்றுத் தருகின்றது. இவ்வாறு அண்ணா பரிமாற்ற சங்கத்திடமிருந்து அனைத்து பட்டு இழைகளையும் சேகரித்து தமிழ்நாடு பட்டு நூற்பாளர்கள் சங்கம் நூற்பாளர்களுக்கு அளிக்கிறது. இதனால் அவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதோடு, வியாபாரிகள் வாங்காத சமயத்தில் பட்டு இழைகள் வீணாகாமலும் பயன்படுத்த முடிகிறது.

2008 – 2009 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சேவைகள்

 1. V 1, S 36  போன்ற அதிக விளைச்சல் தரும் இரகங்களை பயிரிட வலியுறுத்துதல்.
 2. V 1  போன்ற முசுக்கொட்டை இரகங்கள் எங்கும் கிடைக்கும் என்ற தகவல்களையும் மற்றும் பயிரிடு முறைகள் பற்றிய ஆலோசனைகளையும் விரிவாக்க அலுவலர்கள் விவசாயிகளுக்கு வழங்குகின்றார்கள்.
 3. பட்டு புழு வளர்ப்பு மையங்கள் ஒவ்வொன்றும் காற்றழுத்த தெளிப்பான்களை (மக்களிடையே) அறிமுகப்படுத்துகின்றன. இதனால் நோய்த்தொற்றில்லாத தரமான இலைகளை (முசுக்கொட்டை) பெறலாம். அதோடு தெளிப்பான்கள் பற்றிய விழிப்புணர்வு பட்டுப்புழு விவசாயிகளிடையே அதிகரிக்கும்.
 4. தரச் சங்கம் (தர மன்றங்களின்) உறுப்பினர்களின் திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த, ஆராய்ச்சி மையங்களினால் உருவாக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படும் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காட்டப்படுகிறார்கள். இதனால் நன்கு உற்பத்தி செய்து, அதிக லாபம் பெறும் பட்டுப்புழு வளர்ப்பாளர்களுடன் இந்த உறுப்பினர்கள் கலந்துரையாடுவதன் மூலம் பல புதிய உத்திகளைக் கற்றுக் கொள்கின்றனர்.
 5. பட்டு நூல் நூற்பாளர்களுக்கு உபபொருட்களை மதிப்பூட்டல் செய்வதற்கு முன்பு செய்யப்படவேண்டிய பதப்படுத்தும் முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்படுகின்றது.
 6. ஆண்டிற்கு இரண்டு தலைமுறைகள் காணும் பட்டுப்பூச்சிகளின் வாழ்கைமுறைகளைப் பற்றி முறையாக அறிந்து, அவற்றைக் கையாளுவதற்கு ஏற்ற பயிற்சியும் அனுபவ அறிவும் அளிக்கப்படுகிறது.
 7. பட்டுப்புழு வளர்ப்பு மகளிருக்கு ஏற்ற ஒரு நல்ல தொழிலாக இருப்பதால், பல சிறப்புப் பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மகளிரின் பங்களிப்பை அதிகரிக்க, அதிக மகசூல் தரும் முசுக்கொட்டை இரகங்கள் சாகுபடி, பட்டுப்புழு வளர்ப்பு, முசுக்கொட்டை வளர்ப்பிற்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல், தனி வளர்ப்பு அறைகள் அமைத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட கருவிகளை வாங்கிப் பயன்படுத்துதல் என அனைத்து அம்சங்களிலும் தனிப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
 8. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பட்டுப்புழு வளர்ப்பில் அவர்களுக்கென சிறப்புச் சலுகை அளிக்கப்படுகிறது.
 9. நீர் ஆதாரம் குறைவாக உள்ள பகுதிகளிலும் கூட பட்டுப்புழு வளர்ப்பை செம்மையாகச் செய்ய சொட்டுநீர்ப் பாசனம் போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 10. விவசாயிகளுக்கும் பட்டுநூல் நூற்பாளர்களுக்கும் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வ. எண் திட்டத்தின் பெயர் திட்டத்தின் கூறுகள் மானியம் / சலுகைகள் / நபர் ஒன்றுக்கு 
1 மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் அ. நாற்று மானியம் ரூ. 1375
    ஆ. வளர்ப்புக் குடில் ரூ. 5000
    இ.அடிப்படை வளர்ப்பு வசதிகள் ரூ. 3000
2. மேற்குத் தொடர்ச்சிமலை மேம்பாட்டுத் திட்டம் அ. நடவு மானியம் ரூ. 3000
    இ.அடிப்படை வளர்ப்பு வசதிகள் ரூ. 30000
3. மேம்பாடு ஊக்குவிப்புத் திட்டம் அ. சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தல் ரூ. 15000
    ஆ. கூட்டுப்புழு உற்பத்தியை அதிகரிக்க தனிக்குடில் அமைத்தல் ரூ. 25000
    இ. நவீன வளர்ப்பு உபகரணங்கள் வாங்குதல் ரூ. 30000
4. அனைத்துத் திட்டங்கள் முட்டையிடுபவை ஆகும் செலவைப் பொறுத்து அளிக்கப்படுகிறது.

பட்டுப்புழு வளர்ப்புத் துறையின் கீழ் ஆலோசனை பெற்று,  நிதி ஆண்டின் ஆரம்பத்தில் பட்டுப்புழு வளர்ப்பைத் தொடங்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மானியங்கள் வழங்கப்படும். விவசாயிகளும், பட்டு நூல் நூற்பாளர்களும் அப்பகுதியில் / மாவட்டத்தில் உள்ள தொழில் நுட்ப உதவி கண்காணிப்பாளர் அல்லது உதவி இயக்குநரைச் சந்தித்து தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014