பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சிகள்

பயிற்சிகள்

1973 ஆம் ஆண்டு, பட்டுப்புழு அலுவலர்கள் மற்றும் பட்டு வளர்க்கும் விவசாயிகள் அனைவருக்கும், பயிற்சி வழங்க, அரசு பட்டுப்புழு பயிற்சிப்பள்ளி ஹோசூரில் ஆரம்பிக்கப்பட்டது. 2005-06 ஆம் ஆண்டு, தமிழ்நாடு சங்க பதிவு விதி 1975 இன் கீழ் பட்டுப்புழு பயிற்சிப்பள்ளியானது பதிவு செய்யப்பட்டு, ‘தமிழ்நாடு பட்டுவளர்ப்பு பயிற்சி நிலையம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பட்டுத்துறை அலுவலர்கள் வழங்கும் பயிற்சிக்கு ஏற்றதும் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகளை தமிழ்நாடு பட்டுவளர்ப்பு பயிற்சி நிலையம் வாயிலாக பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு பட்டுவளர்ப்பு பயிற்சி நிலையத்தால் வழங்கப்படும் பாடங்கள்

 1. பட்டுவளர்ப்பு துறை அலுவலர்களுக்கு, மகசூலை மேம்படுத்தும் பயிற்சிகள் (ஆண்டுக்கு இரு முறை இனப்பெருக்கம் செய்யும் பட்டுப்புழு)
 2. முசுக்கொட்டை பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை மற்றும் முசுக்கொட்டைச் செடி சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி
 3. இளநிலை பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பங்கள்
 4. முதிர்நிலை பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பங்கள்
 5. பட்டுப்புழு நோய்கள் மற்றும் மேலாண்மை
 6. பகுதி II திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு இருமுறை இனப்பெருக்கம் செய்யும் பட்டுப்புழு வளர்க்கும் விவசாயிகளுக்கு பயிற்சிகள்
 7. மத்திய அரசுடன் செயல்படுத்தப்படும் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், புதிய பட்டுப்புழு வளர்ப்பாளர்களுக்கு பயிற்சிகள்.

பட்டுப்புழு முட்டை தொழில்நுட்ப ஆய்வகம், கோடத்தி, பெங்களூர் வழங்கப்படும் பயிற்சி பாடங்கள்

 1. பட்டுப்புழுவில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ
 2. பட்டுப்புழு தீவிர பயிற்சி
 3. சுயத்தொழில் மேம்பாட்டுத் திட்டங்கள்
 4. பிற குறுகிய கால (1-2 வாரங்கள்) செயல்திறன் மற்றும் தகுதி

பட்டுப்புழு பெண் வளர்ப்பாளர்களுக்கு பயிற்சித் திட்டங்கள்

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து மைசூர் மத்திய பட்டுவளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம், மனித வள மேம்பாட்டு திட்டத்தின கீழ், பட்டுப்புழு பெண் வளர்ப்பாளர்களுக்கு, பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு போக்குவரத்து, தங்கும் இடம், சாப்பாடு அனைத்தும் வழங்கி கீழ்க்கண்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

வ.எண்

பயிற்சிப் பாடத்தின் பெயர்

1.

சுற்றுச்சூழலுக்கு நண்பனான முறையில் முசுக்கொட்டையில் ஒருங்கிணைந்த சத்து மற்றும் நோய் மேலாண்மை முறைகள்

2.

இளம்புழு வளர்ப்பு

3.

இளம்புழு மற்றும் முதிர்புழு வளர்ப்பு

4.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத உயிரி பூச்சிக்கொல்லி உயிரி பூஞ்சாணக்கொல்லி மற்றும் தாவரப்பொருட்களை கொண்டு ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

5.

பட்டுத் தொழில்சாலை கழிவுகளை, நல்ல பொருள் மேலாண்மையினால், மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்

6.

பட்டுமுட்டை உற்பத்தி

7.

பட்டுப்புழு வளர்ப்பில் இயந்திரமாக்குதல் - பயிற்சி

 

   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2017