பட்டுப்புழு வளர்ப்புத் திட்டங்கள்

மத்திய பட்டு வளர்ச்சிதுறை உதவியுடன் தமிழ்நாடு பட்டுவளர்ச்சி துறை 2015 – 16 ஆண்டு கீழ் வரும் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டங்கள் பட்டு வளர்ப்பு துறையில் ஈடுபட்டிருக்கும் தொழீல்முனைவொர் கீழ் வரும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து பட்டு தொழிலை மேம்படுத்துகிறது.

 • உயர் விளைச்சல் தரும் மல்பெரி வகைகள் நடுதல்
 • மல்பெரி தோட்டத்தில் சொட்டுநீர் பாசன முறையை அமைத்தல்
 • பட்டுபுழு வளர்ப்பிற்காக தனியான கொட்டகை அமைத்தல்
 • பட்டுப்புழு வளர்ப்பிற்கான மேம்பட்ட உபகரணங்களை வாங்குதல்   
 • நுண் இளம்பட்டு புழு வளர்ப்பு மையங்கள் நிறுவுதல்
 • பட்டுப்புழுவிற்க்கென பல்துறை மருந்தகம் நிறுவுதல்
 • பட்டு விவசாயிகளய் மற்றும் இருதலைமுறை பட்டு உற்பத்தியாளர்களுக்கு தரமான விதை மற்றும் பட்டு வளர்ப்பிற்கான பொருட்களை வழங்குதல்
 • பல்முனை நூற்பு எந்திர ஆலைகள் / கொட்டகை நூற்பு ஆலைகள் நிறுவுதல்
 • மல்பெரி சாகுபடி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்குதல்
 • பட்டு நூற்பு துறையில் ஈடுபட்டிருக்கும் பட்டு நூற்பு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குதல்
 • பட்டுப்புழு பயிர் மற்றும் சொத்துக்களுக்கான காப்பீடு செய்தல்

மேற்கூறியுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.797.48 லட்ச ரூபாய் மாநில திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்துள்ளது.

I. மாநிலத் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் உதவி பெரும் விவசாயிகள் கீழ்க்கண்ட தகுதிகளைக் கொண்டிருக்கவேண்டும்.
a.   விவசாயிகள் அதிக மகசூல் மல்பெரி வகைகள் நடவு செய்திருக்க வேண்டும்.
b. விவசாயிகள் இருதலைமுறை பட்டுப்புழு இனங்களை பயன்படுத்த வேண்டும்.
c.     விவசாயிடம் சொந்த நிலம்,  போதுமான  நீர் ஆதாரம் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பில் அனுபவம் ஆகியவை பெற்றிருக்க வேண்டும்.
d. குறிப்பிட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தொழில்நுட்ப சேவை மையத்தின் துறை ஊழியர்கள் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

வ.எண் திட்டம் செயல்பாடு அலகு செலவு (ரூ / ஏக்கர்) பயனாளியின் பங்கு (ரூ.) மொத்த மானியம் (ரூ.) குறிப்புகள்
1. அதிக மகசூல் பெரும் மல்பெரி வகைகள் 14,000 3,500 10,500 அனைத்து புதிய விவசாயிகளும் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை மானியம் பெறலாம்
2. சொட்டுநீர் பாசன முறையை அமைத்தல் 30,000 - 30,000 பெரிய விவசாயிகளும் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை மானியம் பெறலாம் (மானியம் ரூ. 22500 / ஏக்கர்)
3. பட்டுப்புழு வளர்ப்புக்கான கொட்டகை கட்டுமானம்
  கொட்டகை நிலை - I 2,75,000 1,92,500 82,500 -
  கொட்டகை நிலை - II 1,75,000 87,500 87,500 -
  கொட்டகை நிலை - III 90,000 27,000 63,000 -
4. பட்டுப்புழு வளர்ப்புக்காக மேம்படுத்தப்பட்ட உபகரணங்களான கொள்முதல் 70,000 17,500 52,500 -

II. எஸ்.டி மற்றும் பி.எஸ்.யப் -யின் கீழ் அனுமதிக்கப்பட்ட திட்டங்கள், 2015-16

வ.எண் திட்டம் செயல்பாடு அலகு செலவு (ரூ ) பயனாளியின் பங்கு (ரூ.) மொத்த மானியம் (ரூ.)
1. பட்டுப்புழு பயிர் மற்றும் சொத்துக்களுக்கான காப்பீடு செயல் அளவு (கலப்பினம்) 149.00 / 100 Dfls 14.90 134.00
2. பட்டுப்புழு பயிர் மற்றும் சொத்துக்களுக்கான காப்பீடு செயல் அளவு (சி.எஸ்.ஆர்்) 164.00 / 100 Dfls 16.40 147.60
3. இருதலை முறை பட்டுக்கூடு நூற்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை 10 / Kg 10 10
4. இருதலை முறை பட்டு உற்பத்திக்கான ஊக்கத்தொகை 100 / Kg 100 100

III  மத்திய திட்டங்களுடன் மத்திய பட்டு வாரியம், 2015-16

வ.எண் திட்டம் செயல்பாடு அலகு செலவு (ரூ ) பயனாளியின் பங்கு (ரூ.) மொத்த மானியம் (ரூ.)
1. பயனாளியின் அதிகாரம் வழங்கல் திட்டம் 7000 - 7000
2. முற்காப்பு நடவடிக்கைகள் Lump sum - 139.74 lakhs
3. இளம்புழு வளர்ப்பு மையங்கள் நிறுவுதல் 10,00,000 2,00,000 8,00,000
4. பட்டுப்புழுவிற்க்கென பல்துறை மருந்தகம் நிறுவுதல் 1,40,000 28,000 1,12,000
5. பலமுனை பட்டு நூற்பு அலகுகள் 14,85,600 1,60,600 13,25,000

 

   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014