த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: புதிய தொழில்நுட்பங்கள்

எளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்

முன்னுரை

இன்றைய காலகட்டத்தில் அதிக விளைச்சல் தரும் பயிர்களை பயிரிடும்போது அதிக அளவு ஊட்டச்சத்து தரும் உரங்களை அளிக்க வேண்டியுள்ளது .மண்ணின் மேற்பரப்பில் உரங்களைத் துவுவதால் பயிர்களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் களைச் செடிகளின் வளர்ச்சியும் பயிர்களைப் பாதிக்கும் வண்ணம் அதிகரிக்கின்றது.
பயிர் செய்யும் பொழுது உரச்சத்துகளின் பயன்பாட்டுத்திறனை அதிகரிக்க ஆழமாகக் குழி பறித்து இடும் முறைகள் சிறந்தவையாகும். இம்முறைகளைக் கையாள போதிய பணியாளர்களும், போதிய கருவிகளும் கிடைக்காததால் உழவர்கள் இவற்றை கடைபிடிப்பதில்லை. மேலும் உழவர்களுக்கு பயிர் விளைவிப்பதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உரங்கள், விதைகள், களைக்கொல்லிகள், பணியாளர்கள் ஆகிய அனைத்தும் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. இக்காரணங்களால் விளைச்சலை பெருமளவு அதிகரிக்க முடிவதில்லை.
இந்த நிலையில் ஊட்டங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க உழவர்கள் பயன் பெறும் பொருட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலுள்ள மண்ணியல் மற்றும் வேளாண் வேதியல் துறையினர் ஒரு புதுமையான விதை உர கட்டு என்கின்ற தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த விதை உர கட்டுகளைத் தொழிற்கூடங்களில் உற்பத்தி செய்து உழவர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்ய புதுடெல்லியிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் சென்னையிலுள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உடன் இணைந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயற்கை வள மேலாண்மை இயக்குனரகத்தில் இயங்கி வரும் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் இயந்திரங்கள் மூலம் விதை உர கட்டு தயாரிக்கும் திட்டத்தை 2011- 14 ஆண்டில் ரூ 30.91 இலட்சம் செலவில் செயல்படுத்தியுள்ளது.

மேலும் விபரங்களுக்கு கிழே உள்ள படங்களை கிளிக் செய்யவும்

  

விதை உர கட்டு- வடிவமைப்பு

 

ஆய்வுக் களம்


ஆதாரம்:
டாக்டர் கே. அருள்மொழிச்செல்வன்,
பேராசிரியர்,
மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3
தொலைபேசி: 0422 6611235
மின்னஞ்சல்: ssac@tnau.ac.in
Updated on November, 2015

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015