இதர மர வகைகள் ::தைலமரம்

யூகலிப்டஜ் மரி்டுசியே (Myrtacea) குடும்ப வகை மரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தயாகமாகக் கொண்டது. தைலமரங்கிளல் 700-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மி.மீ லிருந்து 1500 மி.மீ வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும் இயல்புடையவை. தைல மரம் விரைவாகவும்,  உயரமாகவும் (20 முதல் 50 மீ வரை) வளரக்கூடியது. மேலும் 2 மீ சுற்றளவு வரை வளரக்கூடியது. வறண்ட மற்றும் சமவெளிப்பகுதிகளில் வளரும் யூக்கலிப்டஸ் டெரிடிகார்னிஸ், யூக்கலிப்டஸ் கமால்டுலென்ஸிஸ் ஆகிய வகைகள் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மிகவும் ஏற்றவை.

தைலமரம்

 


நிலத்தைத் தேர்ந்தெடுத்தல்:

  • மண்ணின் ஆழம் 1.0மீ-க்கு குறைவாக உள்ள நிலத்தைத் தவிர்க்க வேண்டும்.
  • அதிக உவர் மற்றும் களர் நிலங்களைத் தவிர்க்க வேண்டும்
  • மண்ணின் அமிலகாரத்தன்மை 6-லிருந்து 8 வரை இருக்க வேண்டும்.
  • அதிக மண் அரிப்பு மற்றும் நீர் தேக்க நிலங்களைத் தவிர்க்க வேண்டும்.
தைல மர இலைகள்
தைலம் மரப் பட்டைகள்

 

நாற்றங்கால் வளர்ப்பு முறைகள்

தைல மர நாற்றுக்களை விதைகள் மூலமாகவும், விதையில்லா இனப்பெருக்கம் (Vegetative propagation) வழிமுறையான குச்சிகள் (கன்றகப் பெருக்கம்-Cloning) மூலமாகவும் உற்பத்தி செய்யலாம்.

மகசூல் நான்கு முதல் ஐந்து வருடங்களில் தைலமரம் அறுவடை செய்யப்படும். நல்ல மண் வளம், நீர் வசதியுள்ள இடங்களில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் கிடைக்கும். இதன்மூலம் ஒரு ஏக்கருக்கு 4-5 ஆண்டுகள் இடைவெளியில் ரூ.75,000/- வரை வருவாய் பெறலாம்.

தைலமர நாற்றுகள்
தைலமரத் தோட்டம்

தைலமரத்தின் வணிகப்பயன்பாடு

காகிதம், காகிதக்கூழ், துகள் அட்டைகள், மொத்த அட்டைகள் தயாரிக்கும் பணிகளுக்கும் பெரிதும் உகந்த மரம் .

இம்மர எரிபொருள், கரித்துண்டுகள் தயாரிக்கவும் எளிய மற்றும் கனமான கட்டுமானப்பணிகளுக்கும், இரயில்வே தண்டவாளக் கட்டைகள், பாலங்கள் கட்டுவதற்கும், குச்சிகளாகவும் பயன்படும்.

இலைகளிலிருந்து பெறப்படும் நீர்மம் பூச்சி எதிர்ப்புத்தன்மையுடையதால் உயிரியல் பூச்சி எதிர்ப்புகள் தயாரிக்கப்பயன்படுகின்றன.

தொடர்புக்கு
முதல்வர்,  
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்,
கோயமுத்தூர் -  641301.
தொலைபேசி: 04254 - 222398, 04254 – 220460
அலைபேசி: 9443505843, 9489056727
மின்னஞ்சல்: deanformtp@tnau.ac.in

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024.