நோய் மேலாண்மை

கிவோட்டியாரோட் லெரிபார்மிஸ்

குடும்பம் : யூபர்பியேசி
தமிழ் பெயர் : கொட்டைத் தனக்கு
பயன்கள்:
எரிபொருள் : நல்ல எரிபொருள்
தீவனம் : ஏற்றதல்ல
வேறு பயன்கள் : பொம்மைகள், அழகு சாதனப் பொருட்கள், சிற்பக்கலைகள் ஆகியவை இம்மரத்தை வைத்து செய்யலாம். உராய்வைப் போக்கும் எண்ணையை இம்மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கலாம்.   
விதைகள் சேகரிக்கும் நேரம் : டிசம்பர் – பிப்ரவரி
விதைகளின் எண்ணிக்கை / கிலோ : 387 / கிலோ
முளைத்திரன் : ஆறு மாதங்கள் வரை
முளைப்பு சதவீதம் : 43 %
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பாலித்தீன் பைகளில் நட வேண்டும். நாற்றுகள்  ஏழாம் நாளிலிருந்து முளைக்கத் தொடங்கும்.  பின்பு, ஆறு மாத வயதுள்ள நாற்றுகளை  13 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில்  நட வேண்டும். ஆறு மாதங்களில் நான்கு அடி வளர்ந்து விடும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016