நோய் மேலாண்மை

பிர்மியானா கொலரேட்டா

குடும்பம் : ஸ்டெர்ல்குலியேசி
தமிழ் பெயர் : மலம்பருத்தி
பயன்கள்:
தீவனம் : சுமார்
வேறு பயன்கள் : அலங்கார மரமாகப் பயன்படுகிறது.
விதைகள் சேகரிக்கும் நேரம் : ஜூலை – ஆகஸ்டு
விதைகளின் எண்ணிக்கை / கிலோ : 1000 விதைகளுக்கும் மேல்
முளைத்திரன் : மூன்று மாதங்கள் வரை
முளைப்பு சதவீதம் : 60 %
விதை நேர்த்தி : குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும்
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பாலித்தொட்டியில் நட வேண்டும். நாற்றுகள்  ஏழாம் நாளிலிருந்து முளைக்கத் தொடங்கும்.  பின்பு, ஆறு மாத வயதுள்ள நாற்றுகளை  13 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில்  நட வேண்டும். ஆறு மாதங்களில் நான்கு அடி வளர்ந்து விடும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016