நோய் மேலாண்மை

அசாரிடாக்ட்டா இன்டிக்கா

குடும்பம் : மேலியேசி
தமிழ் பெயர் : வேம்பு
பயன்கள்:
எரிபொருள் : 4500 கிலோ கலோரி / கிலோ
தீவனம் : ஒரளவிற்குப் பயன்படுகிறது
வேறு பயன்கள் : மரக்கட்டைகள், காற்றுத்தடுப்பு, நிழல், வேப்பம் புண்ணாக்கு, உரம், தோல் பதனம், காய்கள் மற்றும் இலைகள் சிறந்த பூச்சி விரட்டியாகப் பயன்படுகிறது.   
விதைகள் சேகரிக்கும் நேரம் : ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு.
விதைகளின் எண்ணிக்கை / கிலோ : 1750 பழங்கள் அல்லது 4000 சுத்தமான விதைகள்
முளைத்திரன் : இரண்டு மாதங்கள். மண் பானைகளில் சேகரித்தால் ஆறு மாதங்கள் வரை முளைத்திரன் இருக்கும்.
முளைப்பு சதவீதம் : 50 %
விதை நேர்த்தி : விதைப்பதற்கு முன் விதைகளிலிருந்து கூழ் ஆகற்றுவதனால் முளைவிடுதல் அதிகரிக்கும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : புதிய விதைகள் தொட்டிகளில் நட வேண்டும். முளைப்பு ஒரு வாரத்தில் தொடங்கும். முதலாவதாக வேர்கள் வளரும் பின் தண்டுகள் வளரும். 15 செ.மீ x 3.5 செ.மீ இடைவெளியில் உள்ள விதைப்பாத்தியிலும் நடலாம். 50 % முளைப்பு சதவீதம் உள்ள நாற்றுகளை நடுவதனால் வேகமாக வளரும். உயரமான மரம் வேண்டுமானால், 1:1:1 தொட்டிக்கலவையைப் பயன்படுத்தி உயர் அடர்த்தி நடவு முறையில் நாற்றுகளை நடுவதனால் மரம் உயர்ந்து வளரும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016