நோய் மேலாண்மை

அல்பீசியா அமரா

குடும்பம் : மைமோசிடே
தமிழ் பெயர் : துறிஞ்சி
பயன்கள்:
எரிபொருள் : நல்ல எரிபொருள்
வேறு பயன்கள் : மரப்பட்டை, வேளாண் கருவிகள் செய்வதற்குப் பயன்படுகிறது. காயவைத்து அரைத்து வைத்த இலைகள், முடியிலிருக்கும் எண்ணையை நீக்கப் பயன்படுகிறது. அரைத்து வைத்த பொடியை அரப்பு எனக் கூறப்படுகிறது.  
விதைகள் சேகரிக்கும் நேரம் : நவம்பர் – ஜனவரி
விதைகளின் எண்ணிக்கை / கிலோ : 15000
முளைத்திரன் : ஆறு மாதங்கள் வரை
முளைப்பு சதவீதம் : 30 %
விதை நேர்த்தி : விதைகளை கொதி நீரில் ஒரு நிமிடம் மூழ்கடித்து பின் குளிரவைத்து குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : 1. முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நாற்றாங்கால் பாத்தியில் நட வேண்டும். விதைகள் நட்ட மூன்றாம் நாளிலிருந்து முளைக்கத் தொடங்கும். 6 மாதங்களில் நடுவயலில் நடுவதற்கு தயாராகிவிடும்.   
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016