வனவியல் தொழில்நுட்பங்கள்
நாற்றங்கால் தொழில்நுட்பம்
பயனாளிகள்

விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள், மாநில வன மேம்பாட்டு நிறுவனங்கள், வனம் சார்ந்த நிறுவனங்கள், அரசு-சாரா நிறுவனங்கள் போன்றவைகள் ஒருங்கிணைக்கப்படாத நாற்றங்கால்களை அமைக்கலாம்.

இனங்களை தேர்வு செய்தல்

உள்ளூரில் நல்ல வரவேற்புள்ள / தேவைக்கேற்ப திட மரங்கள், விறகு, தீவனம், பழங்கள், மரம் அல்லாத வனப் பொருட்கள் மற்றும் அழகு அம்சம் கொண்ட இனங்களின் ஆரோக்கியமான நாற்றுகளை நாற்றங்கால் அமைத்துத் தரலாம்.

நாற்றங்கால் தொழில்நுட்பம்

0.25 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதியில் 1.25 லட்சம் நாற்றுகள் வளர்ப்பது லாபகரமாக கருதப்படுகின்றது. கடன் வாங்குபவரின் பிரிவு, கொள்திறன் மற்றும் நாற்றங்காலின் தேவைக்கேற்ப நாற்றங்கால் பரப்பளவு அதிகரிக்கப்படும். சரியான வடிகால் வசதிக்காக நாற்றங்கால்கள், சீரான சரிவு நிலங்களில் அமைக்க வேண்டும். களை எடுத்தல் மற்றும் உழுதல் மூலம் நிலம் தயார் செய்யப்படும். முதலில் நாற்றங்கால்கள் படுக்கைகளில் வளர்த்து பின்னர் தொட்டிகளில் வளர்க்கப்படும். நாற்றங்காலிற்கு நிரந்தர நீர் ஆதாரம் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்ப நிலை மற்றும் செலவை குறைக்க இது உதவும். 100m x 25m அளவு கொண்டு செவ்வக வடிவில் அமைக்க வேண்டும்.


10மீ x 10மீ (10 ச.மீ) அளவு கொண்ட பத்து விதைப்புப் படுக்கைகளை அமைக்க வேண்டும். இந்நிலையில், 1:12 விகிதத்தில் படுக்கைகள் தேவைப்படும். அதாவது ஒவ்வொரு படுக்கைக்கும் முறையாக 12 படுக்கைகள் தேவைப்படும். 120 படுக்கைகளிலிருந்து 1.25 இலட்சம் நாற்றுகளை வளர்ந்து, அவற்றிலுள்ள 1.20 இலட்சம் நாற்றுகளை நெகிழி உரைகளில் மீதமிருக்கும் 5000 நாற்றுகள் வேர் நாற்றுகளாக வளர்க்கப்படும்.


குறிப்பிட்ட காலத்திற்கு நாற்றங்காலிலுள்ள நாற்றுகளுக்கு குறைவான அளவு நீர் அளித்தல் மற்றும் அவைகள் சூரிய வெளிச்சத்திற்கு பல்வேறு நேரத்திற்கு வெளிப்படுத்துவதன் மூலம் நாற்றுகளை கடினப்படுத்துதல்; இவ்வாறு செய்கையில் நாற்றுகளை வயலில் நடவு செய்தபின், பாதகமான சூழ்நிலைகளையும் அவை தாங்கி வளர உதவி செய்யும். நாற்றங்கால்கள் தற்காலிகமானவைகள் மற்றும் அவை ஐந்து வருடங்கள் வரை இருக்கும். கோடை கால மாதங்களில் நெகிழி விரிப்புகள் அல்லது நிழல் வலைகள் கொண்டு நிழல் வழங்கப்படும். மூங்கில் பாய்களைக் கொண்டு நிழல் வழங்கப்படும். கம்பியைக் கொண்டு பகுதி முழுவதும் சுவர் போல் அமைத்து பாதுகாப்பு கொடுக்கலாம்.