வனவியல் தொழில்நுட்பங்கள்

பல்லுயிர்ப்பரவல் ஓர் கண்ணோட்டம்

முன்னுரை
உலக பல்லுயிர் தினம்
பல்லுயிர்பரவல் சட்டம் 2002 மற்றும் தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம், சென்னை
பல்லுயிர்பரவல் சட்டம் 2002ன் முக்கிய அம்சங்கள்

முன்னுரை
புவியில் வாழும் அனைத்து உயிர் வகைகளின் மொத்த தொகுப்பே பல்லுயிர்பரவல் எனப்படும். உலகின் மிகப்பெரிய பல்லுயிர் வளம் மிக்க 12 நாடுகளில் நம் இந்திய நாடும் ஒன்றாகும். உலகின் மொத்த நிலபரப்பில் 2.5 சதவீதம் உள்ள நம்நாட்டில், உலகில் காணப்படும் உயிர் வகைகளில் 7.8 சதவீதம் இங்கு காணப்படுகின்றது. மேலும் நம்நாடு பாரம்பரியம் மற்றும் கலாச்சார அறிவாண்மை மிக்கதாகும்.

1992, உலகின் பல்லுயிர்பரவல் மாநாட்டில் இந்தியா பல்லுயிர்பரவல் ஓப்பந்தம் நிபந்தனை 3 மற்றும் 15ன்படி, தேசிய சட்டத்திட்டத்திற்று உட்பட்டும் பரஸ்பர ஒப்பந்தத்தின்படியும் மக்கள் தங்கள் நாட்டின் உயிர்வளங்களை முறையாக பகிர்ந்து பயன்படுத்துவதற்கும் பிற நாடுகளும் இந்நாட்டு மரபியல் வளங்களை பெற வசதி செய்து தரவும் இக்கூட்டமைப்பு அறிவுறுத்துகிறது. பல்லுயிர்ப்பரவல் ஒப்பந்தம் நிபந்தனை 8(j))ன்படி, பாரம்பரிய அறிவாண்மை, செயல்முறைகள், புதிய யுக்திகள், மற்றும் சரிசம பகிர்வின் மூலம் நாட்டின் உயில் வளங்கள் பாதுகாப்பதிலும் நிலையான பயன்பாடு அடைவதிலும் அந்நாட்டு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

பல்லுயிர்பரவல் என்பது பல்வித நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் உள்ளடக்கிய பல்துறை சார்ந்த நெறிமுறையாகும். மத்திய அரசு, மாநில அரசுகள், தன்னாட்சி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற அனைத்துமே பல்லுயிர்பரவலின் பயனாளிகள் ஆவர். இந்தியா முக்கிய கொள்கையாக உட்புகுத்தி கொண்டிருந்த, முக்கிய சவாலாக விளங்கிய 'சரிசம பகிர்வு' பெறுதலின் நோக்கங்கள் பல்லுயிர்பரவல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.
பயனாளிகன் பங்கேற்புடன் பல்வித தீவிர ஆலோசனைகள் நடத்தியபிறகு, மத்திய அரசு கீழ்க்கண்ட முக்கியம்சங்களை உள்ளடக்கிய பல்லுயிர்ப்பரவல் சட்டத்தை 2002ம் வருடம் அமுலுக்கு கொண்டுவந்தது.

  1. நாட்டின் உயிர் வளங்கள் மற்றும் அதன் சார்ந்த அறிவாண்மையை பெறுவதற்காண சரிசம பகிர்வு முறையை ஒழுங்குமுறைப்படுத்துதல்.
  2. பல்லுயிர்பரவல் பாதுகாப்பும் நிலையான பயன்பாடும்.
  3. பல்லுயிர்ப்பரவல் சார்ந்த அந்நாட்டு மக்களின் பாரம்பரிய அறிவாண்மையை போற்றி பாதுகாத்தல்.
  4. பல்லுயிர் வளம் பாதுகாப்பு மற்றும் அதன் பயன்பாடு சார்ந்த பாரம்பரிய அறிவாண்மையைப் பெற்றுள்ள அந்நாட்டு மக்களுடன் இனைந்து பயனை பகிர்ந்து கொள்ளுதல்
  5. 'பாரம்பரிய பல்லுயிர்பரவல்' பகுதியாக அறிவிப்பதன் மூலம், சிலமுக்கிய இடங்களின் பல்லுயிர் வளத்தை முறையாக பாதுகாத்தலும் அப்பகுதியினை மேம்படுத்தலும்.
  6. அச்சுறுத்தப்படும் உயிர்வகைகளை பாதுகாத்தலும் மறுவாழ்வளித்தலும்.
  7. பல்வித நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் உள்ளடக்கிய தனிப்பட்ட குழுக்கள் அமைத்து பல்லுயிர்பரவல் சட்டத்தை அமுலாக்குதல்.

உலக பல்லுயிர் தினம்
அனைத்துலக பல்லுயிர்ப் பெருக்க நாள் (உலக பல்லுயிர் தினம்) என்பது பல்லுயிர் பிரச்சினைகளை உற்றுநோக்க ஐ.நா வால் அறிவிக்கப்பட்ட சர்வதேச விடுமுறை தினமாகும். இது தற்போது மே 22 ல் கடைபிடிக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டு சுற்றுச்சூழல் கணக்கீட்டின் படி பல்லுயிர்பரவல் குறைவிற்கு காலநிலை மாறுதலே நேரடி முக்கிய கூறாக விளங்குகிறது. தற்போதைய காலநிலை மாற்றத்தின்  படி 2100 ல் வெப்பநிலையானது 1.4°C லிருந்து 5.8°C வரை உயர வாய்ப்பிருகிறது. இது பல்லுயிர்பரவல், இனப்பெருக்கம் நேரம் மற்றும் தாவரம் வளரும் பருவத்தில் மாற்றங்களை  ஏற்ப்படுத்தி  உயிரினங்கள் அழியும் விகிதத்தை உயர்த்துகிறது.

டிசம்பர் 29, அனைத்துலக பல்லுயிர்ப் பெருக்க நாளாக 1993 லிருந்து 2000 வரை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையி ன் இரண்டாம் குழு வால் கொண்டாடப்பட்டது. டிசம்பர் பிற்பகுதியில் வரும் மற்ற விடுமுறைகளை தவிர்க்க உலக பல்லுயிர் தினமானது மே 22 ஆக 1992 ல் நடந்த ரியோ புவி உச்சி மாநாட்டின் நினைவாக டிசம்பர் 2000 லிருந்து கடைபிடிக்கப்பட்டது.

பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்களும் காலநிலை மாற்றங்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் தற்சமயம் நாம் எதிர்கொள்ளும் அதிவிரைவான காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப பெரும்பாலான உயிரினங்கள் புதிய சூழ்நிலைகேற்ப தங்களை தயார்படுத்தி கொள்ளமுடியாமலும் அல்லது வாழ்விட துண்டாக்கதின் காரணமாக வாழ தகுதியுடைய இடத்திற்கு செல்ல முடியாமலும் உள்ளன. தற்போதைய கணக்கீட்டின் படி பத்து லட்சத்துக்கும் அதிகமான உயிரினங்கள் காலநிலை மாற்றத்தால் அழிய நேரிடலாம்.

அதே சமயம் உலக மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழலில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை பல்லுயிர்பரவல் குறைக்க உதவுகிறது. காலநிலை மாற்றத்தால் பல்லுயிர்பரவல் அச்சுறுத்தப்பட்டாலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க பல்லுயிர்ப் பெருக்க வளங்கள் உதவி செய்கிறது. காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறும், வாழ்விடங்களை பாதுகாக்கவும் பல்லுயிர்பரவலை பாதுகாத்தல் என்பது மிகவும் முக்கியமானதாகும். அதன்மூலம் பல்லுயிர் நீண்ட கால தழுவல், காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிரி தொடர்பு பற்றிய நமது புரிதல், தணிப்பு மற்றும் தழுவலுக்கான முழுமையாக ஒருங்கிணைந்த பல்லுயிர் பரிசீலனைகளை மேம்படுத்தலாம். இதுவே திட்டமும் ஆகும். வருங்கால சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள பல்லுயிர் இழப்பு  மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அச்சுறுத்தல்களை இணைந்தே தடுக்க வேண்டும். இது தான் உலக பல்லுயிர் தினம் கொண்டாட்டத்திற்கான முக்கிய செய்தி ஆகும். 

பல்லுயிர்பரவல் சட்டம் 2002ன் மூலமாக இந்தியாவின் உயிரி வளங்களை சரிசெய்யவும், பாதுகாக்கவும், நிலையாக பயன்படுத்தவும் இந்திய அரசாங்கத்தால் தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் 2003 ல் தொடங்கப்பட்டது. இது உலக பல்லுயிர் தின கொண்டாட்டத்தின் போது ஆண்டு முழுதும் நடந்த செயல்பாடுகளை பல்லுயிர் மாநாட்டில் சமர்பிக்க வேண்டும். உலக பல்லுயிர் தின த்தன்று நடந்த செயல்பாடுகளை தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணைய செயலாளரிடம் தெரிவிக்க தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.


பல்லுயிர்பரவல் சட்டம் 2002 மற்றும் தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம், சென்னை

மாநிலங்கள் தங்களுடைய சொந்த உயிரியல் வளங்களை பயன்படுத்திகொள்ளும்  இறையாண்மை உரிமைகளை அங்கீகரிக்கும் உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டில் (1992) இந்தியாவும் ஓர் உறுப்பினர். உயிரியல் பன்முகத்தன்மை மாநாட்டி ன் நோக்கங்க ளை உணர்ந்து உதவும் பொருட்டு இந்தியா பல்லுயிர்பரவல் சட்டம் 2002 (2003 ல் எண் 18) என்ற குடை சட்டத்தை உயிரியல் வளங்கள் பாதுகாப்பு  மற்றும் அதன் தொடர்புடைய அறிவு மற்றும் நிலையான செயல் முறையின் மூலம் அதற்க்கான வழிவகை செய்தல் ஆகிய நோக்கங்களுடன் இயற்றியது. 

பல்லுயிர்பரவல் சட்டம் 2002 (2003 ல் எண் 18) ல் பிரிவு 8 ன் கீழ் துணை பிரிவு 1, 4 ல் உள்ள அதிகாரத்தின்படி மத்திய அரசு தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையத்தை 2003 அக்டோபர் முதல் தேதியிலிருந்து நிறுவியது.

ஆணையத்தின் முக்கிய செயல்பாடுகள்
அ) பிரிவு 3,4 மற்றும் 6 ல் உள்ள நடவடிக்கைகளுக்கான நடைமுறை மற்றும் வழிமுறைகளை வழங்குதல் (வெளிநாட்டவர்கள் அனுமதி /வெளிநாடு வாழ் இந்தியர்களின் வெளிநாட்டு நிறுவனங்கள்)
i) உயிரியல் வளங்களை பெறுதல் (பிரிவு 3)
ii) ஆராய்ச்சியின் முடிவுகளை மாற்றுதல் (பிரிவு 4)
iii) சில கூட்டு ஆராய்ச்சி திட்டங்களின் விலக்கு (பிரிவு 5)

ஆ) இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல். சட்டத்தின் படி குறிப்பிட்ட பகுதிகள் பின்வருமாறு:
i) அழிவின் விளிம்பிலுள்ள இனங்களுக்கான அறிவிப்புகள்  (பிரிவு 38)
ii) உயிரியல் வளங்களுக்கான வெவ்வேறு பிரிவுகளின் களஞ்சியதுக்காக நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் (பிரிவு 39)
iii) சில உயிரியல் வளங்களுக்கான விலக்கு, பொதுவான பொருட்களின் வர்த்தகம் (பிரிவு 40)

இ) மாநில பல்லுயிர்ப்பரவல் குழு அமைக்க ஊக்குவித்தல்

ஈ) தகவல் மற்றும் ஆவணங்கள் கட்டமைத்தல் 

உ) வெகுஜன ஊடகங்கள் மூலம்  விழிப்புணர்வு உருவாக்குதல்
i) பணியாளர்கள் பயிற்சி
ii) அறிவுசார் உரிமைகளுக்கு தேவையான நடவடிக்கைகள்
பல்லுயிர்பரவல் சட்டம் 2002 மற்றும் இச்சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்படும் விதிகள், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் வடிவங்களுக்கான விவரங்களுக்கு, தயவுசெய்து இந்த இணையத்தை www.nbaindia.orgதேடவும்.


பல்லுயிர்பரவல் சட்டம் 2002 ன் முக்கிய சிறப்பம்சங்கள் :
பிரிவு 3: அனைத்து வெளிநாட்டு உறுப்பினர்களும்  தேசிய உயிரியல் வளங்களை பெறுவதற்கு தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையத்திடமிருந்து  ஒப்புதல் பெற வேண்டும்.
பிரிவு 4: இந்திய தனிநபர்கள் / நிறுவனங்கள் , அறிவு / ஆராய்ச்சி மற்றும் பொருள்களை வெளிநாட்டவர்களுக்கு  மாற்றும் முன் ஒப்புதல் பெற வேண்டும்.
பிரிவு 5: அரசு உதவி செய்யும் கூட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கான வழிமுறைகள்.
பிரிவு 6: இந்தியாவிலிருந்து பெறப்பட்ட உயிரியல் பொருள் மீது நடத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அதற்க்கான அறிவு சமந்தப்பட்ட அறிவுசார் உரிமைகளுக்கு விண்ணப்பிக்கும் முன் தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையத்திடமிருந்து  முன் அனுமதி பெற வேண்டும்.
பிரிவு 7: மாநில வளமார் வாரியங்களிடமிருந்து  வணிக நோக்கங்களுக்கான  உயிரியல் பொருள்களை  பெறுவதற்கு இந்தியர்கள் முன் அறிவிப்பு வழங்க வேண்டும். அதை மாநில வளமார் வாரியங்கள் கட்டுபடுத்தும்.
பல்லுயிர் பரவல் உற்பத்தியாளர்கள் மற்றும் சாகுபடியாளர்கள், இந்திய மருத்துவ பயிற்சி அமைப்பில் பங்குகொள்வோர் மற்றும் உள்ளூர் மக்கள் விலக்கு.
பிரிவு 8: தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் நிறுவுதல், அதன் தொகுப்பு.
பிரிவு 13: தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையத்தின் குழுக்கள்.
பிரிவு 18: தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையத்தின் பணிகள் மற்றும் அதிகாரங்கள்.
பிரிவு 19: தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையத்தின் ஒப்புதல்.
பிரிவு 21: தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையத்தால் சமத்துவ நன்மை தீர்மானித்தல்.
பிரிவு 22: மாநில பல்லுயிர்பரவல் வாரியங்களை ஏற்படுத்துதல்.
பிரிவு 23: மாநில பல்லுயிர்பரவல் வாரியங்களின் செயல்பாடுகள்.
பிரிவு 24: மாநில பல்லுயிர்பரவல் வாரியங்களின் அதிகாரங்கள்.
பிரிவு 26: தேசிய பல்லுயிர்பரவல் நிதி.
பிரிவு 32: மாநில பல்லுயிர்பரவல் நிதி.
பிரிவு 36: மத்திய அரசு பல்லுயிர் பாதுகாப்புக்கான  தேசிய உத்திகள் , திட்டங்களை உருவாக்குதல்.
பிரிவு 36: (1A):  பல்லுயிர் பாதுகாப்பு சீராக்க நடவடிக்கைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
பிரிவு 36: (3)(i):  பல்லுயிர் சார்ந்த வளர்ச்சி திட்டங்களின் பாதிப்பு மதிப்பீடு.
பிரிவு 36: (3)(ii):  மரபணு மாற்றப்பட்ட உயிரினத்தின் வெளியீட்டை முறைப்படுத்துதல்.
பிரிவு 36: (4):  பாரம்பரிய அறிவுகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள்.
பிரிவு 37: பல்லுயிர் பாரம்பரிய தளங்கள்.
பிரிவு 38: அழிவின் விளிம்பிலுள்ள இனங்களுக்கான அறிவிப்புகள்.
பிரிவு 39: களஞ்சியங்களுக்கான பதவி.
பிரிவு 40: சாதாரணமாக வர்த்தகம் செய்யப்படும் பொருள்களுக்கு  சட்டத்தில் இருந்து விலக்கு.
பிரிவு 41: உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் பல்லுயிர் மேலாண்மை குழுக்களை அமைத்தல்.
பிரிவு 42: உள்ளூர் பல்லுயிர் நிதி.
பிரிவு 52A: தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம்   மற்றும் மாநில பல்லுயிர்பரவல் வாரியங்களின் முடிவுகளை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தல்.
பிரிவு 53B: தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம்   மற்றும் மாநில பல்லுயிர்பரவல் வாரியங்களின் ஆணைகள்  சிவில் நீதிமன்றத்திற்கு இணையாக இருத்தல்.
பிரிவு 55: அபராதங்கள்- 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் அபராதம் அல்லது  சேதம் ஏற்படட்ட அளவிற்கு அபராதம்.
பிரிவு 59: மற்ற சட்டத்தின் கூடுதல் ஏற்படுத்தும் விளைவுகள்.
பிரிவு 61: குற்றங்களை கவனித்தல்.
பிரிவு 62: விதிகளை  உருவாக்க மத்திய அரசிற்கு அதிகாரம்.
பிரிவு 63: விதிகளை  உருவாக்க மாநில அரசிற்கு அதிகாரம்.
பிரிவு 64: ஒழுங்குமுறை படுத்தும் அதிகாரம்  .
பிரிவு 65: சிரமங்களை நீக்கும் அதிகாரம்.