வனவியல் முன்னுரை

வனவியல் பற்றிய ஒரு கண்ணோட்டம்

காடழிப்பு :
காடுகளாலான நிலத்தை அழிப்பதற்குப் பெயர்தான் காடழிப்பு என அழைக்கப்படுகிறது. இது, உலகம் முழுவதும் காணப்படும் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. இந்த பிரச்சனை குறிப்பாக வெப்ப மண்டலங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. காடழிப்பு என்பது காட்டுப்பகுதிகளை காடில்லாப்பகுதிகளாக மாற்றி மேய்ச்சல் நிலம், நகர்ப்புற பயன்பாடு மற்றும் வறண்ட நிலங்கள், தரிசு நிலங்கள் போன்றவாறு பயன்படுத்துவற்காகும்.
காரணங்கள்:
காடழிப்பிற்கான காரணங்கள் ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடும். விஞ்ஞானப்பூர்வமற்ற மரம் வெட்டுதல், விவசாய விரிவாக்கம், போர்கள், சுரங்கம் அமைத்தல், நகர மயமாக்குதல் போன்ற காரணங்கள் பொதுவானவை.
விளைவுகள்:
காடழிப்பின் காரணமாக மண் அரிப்பு, தாவரம் மற்றும் விலங்கு இனங்களின் அழிவு, புவி வெப்பமடைதல் ஆகியவை விளைவுகளாகின்றன.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016