மர பயிர்களுக்கான பூச்சி மேலாண்மை

காட்டாமணக்கு

பப்பாளி மாவுப்பூச்சி –பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ்
பூச்சியின் விவரம்

  • சிறிய மற்றும் மிதமான அளவில் மஞ்சள் நிறத்தில் உள்ள பூச்சிகளின் மீது மாவு அல்லது மெழுகு போன்ற முடி இருக்கும்

சேத அறிகுறி       

  • புழு மற்றும் மாவுப்பூச்சி சாற்றை உறிஞ்சி வாழக்கூடியவை
  • தாக்கப்பட்ட இலைகள் சுருங்கியும் சுருண்டும் காணப்படும்
  • பூச்சிகள் தேன்சுரப்பை வெளிப்படுத்தும்.
  • எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்
  • பூசணத்தால் தாக்கப்பட்ட பகுதிகள் கறுப்பு நிறமாக மாறும்.

மேலாண்மை

  • பார்த்தீனியம் களையை அகற்ற வேண்டும்.
    அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணியை விடுவதின் மூலம் ப்ப்பாளி மாவுப்பூச்சியினைக் கட்டுப்பத்தலாம்
  • ஒரு லிட்டர் தண்ணீரில் புரொபனோபாஸ் 2 மி.லி.(அல்லது) குளோர்பைரிபாஸ் 5 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

 

 

மாவுப்பூச்சியின் சேத அறிகுறிகள்       

 

Updated on November, 2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014