மர பயிர்களுக்கான பூச்சி மேலாண்மை
தீக்குச்சி மரம்
தீக்குச்சி மர இலை உண்ணும் புழு – எலிக்மா நார்சிஸஸ்
பூச்சியின் விவரம்
 • புழு மஞ்சள் நிறத்தில் கருப்பு பட்டையுடன் இருக்கும்.
 • தாய் அந்துப்பூச்சி நடுத்தர அளவு கொண்டது. முன்னிறக்கைகள் சாக்லேட் பழுப்பு நிறத்திலும், மத்தியில் வெள்ளைப்பட்டையுடனும், ஓரங்களில் கருப்பு புள்ளிகள் கொண்டும் இருக்கும்.
 • பின்னிறக்கைகள் மஞ்சள் நிறத்திலும், வெளிப்புற ஓரத்தில் மூன்றில் ஒரு பங்கு கருப்பு பட்டையுடனும் இருக்கும்.

சேத அறிகுறி

 • புழுப்பருவம் சேதத்தை ஏற்படுத்துகிறது
 • இலை முழுவதையும் உண்ணும்

மேலாண்மை

 • மாலத்தியான் மருந்தை லிட்டருக்கு 1 மி.லி. என்ற அளவில் தெளிக்கவும்.
  தீக்குச்சி மர இலை பிணைக்கும் புழு – அட்டிவா ஃபேப்ரிசியெல்லா

தீக்குச்சி மர இலை பிணைக்கும் புழு – அட்டிவாஃபேப்ரிசியெல்லா

பூச்சியின் விவரம
தாய் அந்துப்பூச்சி மஞ்சள் நிறத்திலும், முன்னிறக்கைகளில் அடர் புள்ளிகள் கொண்டுமிருக்கும்.

சேத அறிகுறி

 • புழுப்பருவம் சேதத்தை ஏற்படுத்துகிறது.
 • இலைகளையும், குருத்துகளையும் பிணைக்கும்

மேலாண்மை

 • மாலத்தியான் மருந்தை லிட்டருக்கு 1 மி.லி. என்ற அளவில் தெளிக்கவும்.
தீக்குச்சி மர இலை உண்ணும் புழு
புழு  அந்துப்பூச்சி
சேத அறிகுற

 

தீக்குச்சி மர இலை பிணைக்கும் புழு
புழு  அந்துப்பூச்சி

Updated on November, 2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014