நோய் மேலாண்மை
வனப் பயிர்களில் நோய் மேலாண்மை
புங்கை மரத்தின் நோய்கள்

புங்கை மரம் சில நோய்களால் பாதிக்கப்படுகின்றது.  நாற்றங்கால் நோய்கள் பற்றிய சுருக்கமான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
அ. இலைப்புள்ளி மற்றும் கருகல் நோய்:
புசிகலாடியம் புன்காமியே என்னும் நோய் காரணி இலைப்புள்ளி மற்றும் கருகல் நோயை புங்கையில் ஏற்படுத்துகிறது. இந்நோய் இலைகளில் கடுமையான குறைபாடுகள் ஏற்படுகிறது. மிக்ரோஸ்டோமா புன்காமியே இலைகளில் மஞ்சல்கலந்த தோற்றத்தை கொடுத்து வெள்ளை நிற புள்ளிகளை ஏற்படுத்துகிறது. மற்ற பூஞ்சைகளான ப்ஐலோகோரா புன்காமியே, ரோபிலடா மகடி, மற்றும் யூரோஹென்டேர்சோனியா புன்காமியே இலைப்புள்ளி நோயை ஏற்படுத்துகிறது. சேர்க்கோஸ்போரா புன்காமியே இலைகள், குருத்துகளில் மற்றும் காய்ககளில், இளம் நாற்றுகள் மற்றும் மரங்களில் கடுமையான சேதம் மற்றும் ஆரம்ப விளைவாக இலைகளின் மீது கருகல் புள்ளிகள் ஏற்படும். கட்டுப்படுத்தும் முறைகள்:
பவிஸ்டின் (0.1%) தெளிக்க நோய் குறைக்கப் பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆ. துருநோய்:
துரு பூஞ்சை, ரவநிலியா ஹோப்சோனி இலைகளின் அடிப்பகுதியில் தொற்றினை ஏற்ப்படுத்துகிறது. மற்றொரு துரு பூஞ்சை, ஆர்.ஸ்டிக்கா இலைகளை தாக்குவதாக அறியப்படுகிறது.
கட்டுப்படுத்தும் முறைகள்:
சார்ந்த பூசண கொல்லியை (0.05%) தூவல் அல்லது இலைத் தெளிப்பின் மூலம் கட்டுப்படுத்தலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
இ. சாம்பல் நோய்:
புங்கை நாற்றுகளில் சாம்பல் நோய் ஆய்டியம் பூஞ்சையால் ஏற்படுகிறது.
அறிகுகள்:
இலைகளின் மேற்பரப்பில் ஒழுங்கற்ற வெள்ளை திட்டுகளை உருவாக்குகின்றது. இந்த திட்டுகள் ஒன்றினைந்து சாம்பல் நிற வெள்ளை தோற்றத்தை இலை முழுவதும் ஏற்படுத்துகிறது. கடுமையான பாதிக்கப்பட்ட இலைகள் முழுமுதிர்ச்சி அடைவதற்கு முன்பே உதிர்ந்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
பெவிஸ்டின் (0.1%) இலை தெளிபின் மூலம் நோயை குறைக்கப் பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016