நோய் மேலாண்மை
வனப் பயிர்களில் நோய் மேலாண்மை
அறிமுகம்
  • காடுகளிலிருந்து நாம் பல்வேறு வகையான பயன்களைப் பெறுகிறோம். விறகுகள், மரக்கட்டைகள், தீவனங்கள் மற்றும் பல பொருட்களைப் பெறுகிறோம். அதோடு காடுகள் நீர் மற்றும் மண் வளத்தைப் பாதுகாக்கவும், வனவிலங்குகளுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகவும் திகழ்கின்றன. வனவியல் துறை காடுகளில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும், அவற்றைப் பாதுகாப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • மலைத்தோட்டப் பயிர்கள் மற்றும் நாற்றங்கால் பயிர்களின் உற்பத்தியையும், வளர்ச்சியையும் நோய்கள் அதிகளவு பாதிக்கின்றன. இவ்வாறு நோய்த்தாக்குதலினால் தரம் மற்றும் மரங்களின் எண்ணிக்கையும் குறைகிறது. நோய்த்தாக்கம் ஏற்படும்போது அதிக அளவிலான மரக்கன்றுகள் அழிந்து விடுகின்றன அதோடு பாதிக்கப்பட்ட கன்றுகள் நட்டபின்பு வளரவும் இயலாதாகையால் சரியான திட்டங்களைச் செயல்படுத்த இயலாது. எனவே தரமான நாற்றுகளைப் பெற நாற்றங்காலில் முறையான பூச்சி மற்றும் நோய்த்தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும்.
  • பல்வேறு காரணிகள் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலுக்குக் காரணமாக அமைகின்றன. சரியான முறைகளை சரியான நேரத்தில் கையாளுவதன் மூலம் நோய்த்தாக்கம் ஏற்படாதவாறு பாதுகாக்கலாம். பூஞ்சான் கொல்லி உபயொகம். பழமையான தடுப்பு முறைகள், உயிர்கட்டுப்பாட்டு முறைகள், உயிர் உரம் போன்றவற்றின் மூலம் நோய்த்தாக்குதலை ஒரளவு தவிர்க்க முடியும்.
வேம்பு அல்பீசியா மெலினா புங்கம் தேக்கு

டால்பெர்ஜியா ஐலான்தஸ் அட்ரோகார்பஸ் டெர்மினேலியா
முடிவுரை :
தேர்ந்தெடுக்கப்பட்ட மரபணு ரீதியில் அதிசிறந்த விதைகள் மற்றும் நோய் எதிர்ப்பு நடவு பொருட்கள், வெற்றிகரமான வனவியல் சார் திட்டங்களுக்கு மிகவும் அத்தியாவசியமாகத் திகழ்கின்றன. உருவாகும் நோய் பிரச்சனைகளை சமாளிக்க மற்றும் பாதகமான சுற்றுச்சூழல் காரணிகளை மேற்கொள்ள இவை உதவுகின்றன. எனவே, விதைக்கரணிகளின் மரபணுக்களைத் தொடர்ந்து செம்மைப்படுத்துவதன் மூலம் மரபியல் வேற்றுமைக் கொண்ட தொகைகளை அதிகப்படுத்த இயலும். இதன் மூலம், நோயில்லா விதைகளை உருவாக்க முடியும்.        
Reference:
Pathological Problems of Economically Important Forest Tree Species in India – An Overview, V. Mohan Division of Forest Protection, Institute of Forest Genetics and Tree Breeding, Coimbatore.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016