நோய் மேலாண்மை
வனப் பயிர்களில் நோய் மேலாண்மை
மெலினா ஆர்போரியா

அ. தூர் அழுகல் நோய்:
தூர் அழுகல் நோய், புசேரியம் ஆக்சிஸ்போரம் என்ற பூஞ்சானால் ஏற்படுகிறது. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஒரு மாத நாற்றுகளைத் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறி:
தாக்கியப் பகுதிகளில் நீர் தோய்ந்த அழுத்தம் காணப்பட்டு பின்னர் அது கருமையான ப்ரவுன்  நிறத்தில் மாறி கடைசியில் காய்ந்து செத்து விடும். 
கட்டுப்பாட்டு முறைகள்:
0.2 % பெவிஸ்டின் அல்லது டைத்தேன் எம்- 45 கரைசலைக் கொண்டு மாதத்திற்கு ஒரு முறை மண்ணை நனைத்தால் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆ. போரியா வேர் அழுகல் நோய்:
வட வங்காளத்திலும் அஸ்ஸாமிலும், போரியா ரைசோமார்பா என்பது மெலினா ஆர்போரியாவின் வேர் ஒட்டுண்ணி.
அறிகுறி:
களிமண் இருக்கும் இடங்களில் இந்த நோய் அதிகமாகப் பரவுகின்றது. அது பிரவுன் நிறத்தில் கனசதுரம் அளவிற்கு வேர் அழுகலை உண்டாக்கும். இதனால்  நுனிக்கருகல் ஏற்பட்டு முற்றிலுமாக மரம் செத்து விடும்.
இ. வேர் அழுகல் மற்றும் கழுத்தழுகல் நோய்:
ஸ்க்லீரொடியம் ரால்ப்சி என்ற பூஞ்சானால் இந்த நோய் வருகிறது. இந்த நோய் கேரளத்தில் 1 – 2 மாத வயதிலான நாற்றுகளில் தாக்குவதாக கண்டறியப்படுகிறது.
அறிகுறி:
இலைகள், வெளிறிய நிறத்தில் காணப்படுவது மட்டுமல்லாமல் இலைகள் உதிர்ந்து நாற்றுகள் செத்து விடும்.
கட்டுப்பாட்டு முறைகள்:
பெவிச்டின் (0.2%)  அல்லது டைத்தேன் எம் 45 கலவையைக் கொண்டு மாதத்திற்கு ஒரு முறை மண்ணை நனைத்தால் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்.
ஈ. இலைப் புள்ளி நோய்:
அஸ்ஸாம் மற்றும் கேரளாவில் சியூடோசெர்க்கோஸ்போரா ராஞ்சிட்டா என்ற பூஞ்சான் தாக்குகிறது. மத்திய பிரதேசத்தில் டேப்டோசெரியா மெலினே இலைப் புள்ளி நோயையும் இளந்தளிர்களின் நுனிக் கருகல் நோயையும் தாக்குகிறது. கேரளாவில்,  போமா டிராப்பிக்கா, ஆல்டேர்னேரியா லெட்டர்னேட்டா, மேக்ரோபோமினா பேசியோலினா  மற்றும் காரினிஸ்போரா கேஸிக்கோலா ஆகியப் பூஞ்சான்கள் இந்த நோயைத் தாக்கும் காரணியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறி:
இலைகள், வெளிறிய நிறத்தில் காணப்படும்.
கட்டுப்பாட்டு முறைகள்:
0.2 % பெவிஸ்டின் அல்லது டைத்தேன் எம்- 45 கரைசலைக் கொண்டு மாதத்திற்கு ஒரு முறை மண்ணை நனைத்தால் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்.
உ. இலை மற்றும் தண்டு கருகல் நோய்:
க்ளோமெரெல்லா சிங்குலேட்டா நிலையில் உள்ள கொல்லீட்டோடிரைக்கம் மற்றும் புசேரியம் சொலானி ஆகியப் பூஞ்சான்கள் இந்த நோயைத் தாக்கும் காரணியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் மே மற்றும் ஜூன் மாதங்களில் வருவதாக கூறப்படுகிறது.
அறிகுறி:
முதலாவதாக இலைகளில் திட்டுகள் காணப்பட்டு பிற்பாடு நாற்றுப்பண்ணையில் வளரும் நாற்றுகள் முற்றிலும் செத்து விடும். தாக்கப்பட்ட மரங்களின் தண்டுகள் மற்றும் இலைகள் காய்ந்து விடும். புசேரியம் சொலானி என்ற பூஞ்சான் இலைகள் மற்றும் தண்டுகள் வேகமாகக் காய்வதற்குக் காரணியாகத் திகழ்கிறது.
 கட்டுப்பாட்டு முறைகள்:
பெவிஸ்டின் கலவையை இரண்டு முறை இடுவதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்.
ஊ. சாம்பல் நோய்
பில்லாக்டினா சப்பல்ட்டா மெலினா என்ற நோய்க்கிருமியால் இந்த நோய் ஏற்படுகிறது.
அறிகுறி:
இலைகளின் அடிப்பாகத்தில் புள்ளிகள் தோன்றும். அதற்கு மேலிருக்கும் இலைப்பகுதிகளில் மங்கிய மஞ்சள் நிறம் தோன்றும். 
எ. போமா தண்டழுகல் நோய்:
போமா நேபுலோசா என்ற நோய்க்கிருமியால் இந்த நோய் ஏற்படுகிறது. கேரளாவில் மாதங்களான நாற்றுகளில் இந்த நோய் தாக்குகிறது. மிகவும் நேருக்கமாக நட்டப்பட்ட நாற்றுகளில் இந்த நோய் அதிகமாகப் பரவுகிறது.
அறிகுறி:
தாக்கப்பட்ட நாற்றுகள் வேகாமாக் காய்ந்து செத்து விடும். உயிரிழந்த தண்டுகளிலும் பூசன வித்துக்கள்  நோய் முத்தினப்பிறகு, அநேக கரு இல்லாத விதைக் குடுவைகள் ஒழுகி வெளியே வரும்.
கட்டுப்பாட்டு முறைகள்:
பாதிக்கப்பட்ட நாற்றுகளைப் பிடுங்கி எரிய வேண்டும். நீர் பாய்ச்சுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். டைத்தேன் எம்.45  இலை வழி, வாரத்திற்கு ஒரு முறை இட வேண்டும். 
ஏ. பிளவை நோய்:
தைரோநெக்டிரியா சியூடோடிரிக்கா மற்றும் ஹென்டர்சோனுலா டாருலோய்டியா ஆகிய நோய்க்கிருமிகள் தண்டு பிளவை நோயைத் தாக்குகின்றன.
அறிகுறி:
இந்த நோய்க்கிருமிகள் தண்டுகளில் தாழ்விடத்தையும் காய்தலையும் உண்டாக்கி அனேக கொனிடியாக்கள் உருவாகி நிரந்தர பிளவையை ஏற்படுத்தும். கடைசியில் தண்டுகள் பிளந்து தோல் உரிந்து காணப்படும்.
ஐ. போமோப்சிஸ் நுனிக் கருகல் நோய்:
மத்தியப் பிரதேசத்தில், இளந்தளிர்களின் நுனிக் கருகல் நோய் போமோப்சிஸ் என்ற நோய்க்கிருமியால் ஏற்படுகிறது. கேரளாவில், தண்டு பிளவை நோயை போமோப்சிஸ் மெலினா என்ற நோய்க்கிருமியால் ஏற்படுகிறது. 

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016