வேளாண் வனவியல்  

கலைச்சொற்கள்:

மரபு வனம் அல்லாத நிலங்களில் அமைக்கப்படும் வனம் வளர்ப்பு பற்றியது

1.பண்ணைக்காடுகள்: பண்ணைக் காடுகள் வணிக ரீதியில் விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களில் மரங்களை வளர்ப்பதாகும். தேசிய வேளாண்மைத் திட்டக் குழு (1976) வரையறுத்தபடி பண்ணைகளைச் சுற்றிலும் (அ) கிராம நிலங்களில் பண்ணை சார்ந்த தொழில்களுடன் வன மரங்களை வளர்ப்பதாகும்.

2.விரிவாக்கக்  காடுகள்: மரபு ரீதியான காடுகளிலிருந்து வெகுதொலைவில் உள்ள பகுதிகளில், மரங்கள் மட்டுமே வளரக்கூடிய நிலப்பகுதிகளில் வனங்களை வளர்த்தெடுப்பதாகும். இவைகள் கீழ்க்காண்பவைகளை  உள்ளடக்கியது.

அ.கலப்புக் காடுகள்: இவ்வகைக் காடுகள் கிராமப்புறம் மற்றும் கிராமத்தின் பொது நிலங்களில் தீவனம் தரும் மரங்கள், தீவனப்புற்கள், பழ மரங்கள் கட்டை மற்றும் விறகு தரும் மரங்களை வளர்ப்பதாகும்.

ஆ.தடுப்புப் பட்டைகள்/  காற்று அரண்கள்: புயல் காற்று, சூரிய ஒளி மற்றும் பனிச் சரிவுகளுக்காக தடைகளை ஏற்படுத்துவதற்காக வரிசையாக மரங்கள் அல்லது புதர்களை வளர்ப்பதாகும்.

இ.நேரினை மரம் வளர்ப்பியல்: இம்முறையில் மிக வேகமாக வளரும் மரங்களை ஒரே நேர்க்கோட்டில் நடவு செய்து வளர்ப்பதாகும்.


3.அழிந்த வனங்கள் மீட்பு: இவ்வகைக் காடுகள் முற்றிலும் அழிந்த வனப்பகுதியாகும் விரைவான கவனம் செலுத்த வேண்டியவையாகும். சுற்றுச் சூழலியல் மேம்பாட்டிற்கினங்க, உள்ளூர் மற்றும் சுற்று வட்டார சமூக மக்களின் தேவைக்கேற்ப வளர்ப்பது மற்றும் மறுசீரமைப்பது ஆகும்.

4.பொழுது போக்குக் காடுகள்: இவை அழகிய மரங்கள் மற்றும் அழகிய புதர்களுடன் வளர்க்கப்படுகின்ற வனப்பகுதியாகும். இவை நகர்ப்புறம் சார்ந்த கிராமங்களை ஒட்டி ஏற்படுத்தப்படுகிறது. இவைகள் அழகியல் வனங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.