பட்டுப்புழு  வளர்ப்பு :  
        
          - “கிராமப்புற  பெண்கள்,  தங்கள் சக ஆண்களை ஒப்பிடும்போது ஞானத்திலும் திறமையிலும் அதிக  திறமை வாய்ந்தவர்கள். மேலும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் மற்றும் உதவி  வழங்கப்படுமானால், வெற்றிகரமான லாபத்தை ஈட்ட முடியும்”, என்கிறார்  திரு என் சக்திவேல், விஞ்ஞானி மற்றும் தலைவர், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், மத்திய பட்டு  வாரியம், ஸ்ரீவில்லிபுத்தூர், தமிழ்நாடு. 
 
          - "விவசாயத்திலிருந்து  வரும் வருமானம் மிகவும் குறைவாக இருப்பதனால் பல விவசாயிகள் வணிகரீதியாக ரியல்  எஸ்டேட்டிற்கு, அவர்களுடைய வயல்களை விற்கத்தொடங்கியுள்ள  இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ராமலிங்கபுறம்  என்கிற கிராமத்திலிருந்து திருமதி எஸ் ஆண்டாள் போன்ற பெண்கள், தங்கள் விவசாயம்  செய்தொழில் மூலம் 25000 ரூபாய் மூலம் பல பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிக்கொண்டு  வருகின்றார்” என்று ஆண்டாள் கூறுகிறார். 
 
          - "பாரம்பரியமாக,  திருமணத்திற்கு பிறகு நான் என் கணவரின் ஏழு ஏக்கர் நிலத்தை  கவனித்துக் கொண்டு வந்தேன். நான்கு ஆண்டுகளுக்கு முன், பட்டுப்புழு  துறை (DOS) அறிவுரையின்படி, நான்  மூன்று ஏக்கர் நிலத்தில் மல்பெரி சாகுபடி எடுக்க முடிவு செய்து ஒரு பட்டுப்புழு  வளர்ப்புக் கொட்டகையைக் கட்டினேன். அதிலிருந்து ஒரு மாத வருமானம் வந்தப்பிறகு எனக்கு  பட்டுப்புழு வளர்ப்பின் மேல் ஒரு ஈடுபாடு வரத் தொடங்கியது. 
 
          - இன்று நான் ஒரு  மாதத்திற்கு 20,000 ரூபாயை விட அதிகமாக  சம்பாதிக்கிறேன். என் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவும் ஒரு நல்ல மெட்ரிக்  பள்ளியில் என் குழந்தைகளை படிக்க அனுப்பவும்  என்னால் முடிகின்றது” என்று அவர் பெருமையுடன் கூறுகின்றார்.  "பட்டுப்புழு வளர்ப்பு வெற்றிகரமாக அமைவதற்கு காரணம், பட்டுப்புழு துறையாகும்.  பட்டுப்புழு துறை தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும், அதனை உருவாக்க சில மானியங்களும்  கொடுத்து விவசாயிகளை ஆதரிக்கிறது. உள்கட்டமைப்பு முடித்தவுடன் பட்டுப்புழு வளர்ப்பைத்  பல ஆண்டுகளாக தொடர்ந்து எடுத்துக் கொள்ள முடியும்” என்று திரு சக்திவேல்  கூறுகிறார். தற்போது அறுவடை புள்ளிவிவரங்களில், திருமதி  ஆண்டாள்,  சுமார் 250 கிலோ பட்டுக்கூடுகளை  அறுவடை செய்து ரூ 50,000 மொத்த வருமானம் அளவிற்கு நிகர  லாபம் கிடைக்கிறது. ஒரு பயிருக்கு (ஒரு பயிருக்கு ஒரு மாத காலம் அறுவடை) ரூ. 25,000 –   ரூ. 30,000 வரை லாபம் காணுகின்றார். விவசாயிகள் ஒரு வருடத்திற்கு 8-10 பயிர்களை  வெற்றிகரமாக அறுவடை செய்ய முடியும்.
 
          - இவரது பொருளாதார  வெற்றி, தெற்கு மண்டலத்தில் முன்னணி பட்டுப்புழு வளர்ப்பு வல்லுனராகத் திகழவைத்தது.  பட்டுப்புழுக்கள் தவிர, இவர், இவரது மல்பெரி தோட்டத்தில் சில ஊடுபயிரையும் சாகுபடி  செய்கின்றார். இதன்மூலம், களைகள் வளராமல்  தவிர்க்க உதவுகிறது. மல்பரி தோட்டத்திற்குத் தேவையான உள்ளீடுகள் வாங்குவது போன்ற  சுழலும் செலவுகளைச் சந்திக்க உதவுகிறது என்று கூறுகிறார். மத்திய பட்டு வாரியம்,  சமீபத்தில் தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத்தில் உள்ள  பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு  தொழில்நுட்ப ஆதரவைத் தர ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க  மையம் நிறுவப்பட்டது. தென் மாவட்டங்களில், விவசாயிகள் நவீன  தொழில்நுட்பங்களை ஏற்று பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட விவசாயிகள் ஆர்வமாக  உள்ளனர்.
 
          - இந்த மையம்யத்தில்,  கலப்பின பட்டுப்புழு ரகங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சர்வதேச தரம் பட்டு உருவாகும்.  அதனால் விவசாயிகள் உள்ளூர் ரகங்களை வளர்ப்படை விட அதிக வருமானம் பெற கலப்பு பட்டுப்புழுக்கள்  வகைகள் வளர்ப்பதில் கவனம் செலுத்துவது நல்லது என்று வலியுறுத்தப்படுகின்றது. திருமதி  ஆண்டாள் அவர்களுக்கு, கலப்பினப் பட்டுப்புழுக்களை வளர்க்கத் தொடங்கியவுடனே தான்  இந்த பட்டுப்புழு வணிகத்தில் வெற்றிக் கிடைத்தது என்று திரு சக்திவேல் கூறுகின்றார். 
 
          - தொழில்நுட்பங்களான  மேடையில் வளர்ப்பு,  மல்பெரி தண்டு அறுவடை அறுவடை மற்றும் உணவு முறை,  கூட்டை உருவாக்குதல் போன்றவை, பட்டு வாரியம்  மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன மூலம்,  வேலையாட்களின் தேவை குறைக்கிறது, தொழிலில் பெண்கள் எளிதாக வேலை பார்க்க முடிகின்றது. இப்போதைய நிலைமையில்  பட்டுப்புழு வளர்ப்பினால், திருமதி ஆண்டாள் போன்ற  கிராமப்புற பெண்கள் பயனடைகின்றனர். மேலும், கிராமப்புற சமூகத்தில் இருக்கும்  பெண்கள் உட்பட படித்த இளைஞர்களுக்கு சிறந்த சுயதொழில் வாய்ப்புகளை வழங்குகிறது.
 
          - மேலும்  தொடர்புக்கு, திரு. சக்திவேல், தொலைபேசி எண்: 98427 61789, மின்னஞ்சல்:  sakthivelcsb@hotmail.com, திருமதி ஆண்டாள் தொலைபேசி எண்: 93452 95731
 
          |