அளவுக்கும்  அதிகமான அறுவடை: 
        
          - இருபத்து ஏழு  வயதுள்ள எஸ். மல்லிகா, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி கிராமத்தில்  ஐந்து ஏக்கர் நிலத்தில் சாமந்திப்பூ சாகுபடி செய்து ரூ.50,000 வரை சம்பாரித்துள்ளர். இந்த வருடம், வெறும் 1000  சதுர மீட்டர் பரப்பளவில் ரூ. 3 லட்சம் வரை வருமானத்தை  எதிர்பார்த்துள்ளார். இவர், தேசிய தோட்டக்கலை மிஷகுக்குத்தான் (NHM) நன்றி தெரிவிக்கின்றார். 
 
          - இத்திட்டத்தின்  கீழ், அரசு, மானியங்கள் மற்றும் விவசாயிகளுக்கு சிறிய நாற்றங்கால் பண்ணைகள்  மற்றும் தோட்டங்கள் அமைத்து பழங்கள், காய்கறிகள், மலர்கள், வாசனைத் தாவரங்கள்  மற்றும் இதர தாவரங்களை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்ப்பதற்கு உதவி  தருகின்றது.  இத்திட்டத்தின் முயற்சி  மூலம், விவசாயிகளுக்கு, 50 % மானியம்  தரப்படுகின்றது.  இதைவைத்து விவசாயிகள்,  ஒரு உலோக அமைப்பில் பாலித்தீன் ஷீட்களைக் கொண்டு கட்டுப்படுத்தப்பட்டச் சூழலை  அமைத்து வருடம் முழுவதும் அதிக விளைச்சலைக் கொண்டு வர முடியும் என்று  கூறுகின்றனர். 
 
          - திருமதி. மல்லிகா,  ரூ. லட்சத்திற்கு பசுமைக் குடில் அமைத்தார். இது அமைப்பதற்கான பாதி செலவை அரசு  ஏற்றுக்கொண்டது. மீதம் உள்ள பணம், ஏழு ஆண்டு கால கடன் வாங்கி குடிலை அமைத்தார். 
 
          - மானியம் தருவதோடு  மட்டுமல்லாமல், தேசிய வங்கி மற்றும்நபார்டு வங்கி, சிறு தொழில் மேம்பாட்டு வங்கி  ஆகியவற்றின் மூலம், அறுவடைக்கு முன்னும் பின்னும் தேவையான பணத்தைப்  பெற்றுக்கொள்ளலாம். ரூ. 1,100 கோடியில்,  தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ. 96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மத்திய அரசும், 85 % மீதமிருக்கும் செலவீடுகளைப்  பார்த்துக்கொள்கின்றது.
 
          - கிருஷ்ணகிரியிலிருக்கும்  இரண்டு மாநில தோட்டக்கலை பண்ணைகளில் விவசாயிகளுக்கென்று தொழில்நுட்ப அறிவும்,  தரமான விதைகளும் அளிக்கப்படுகின்றன. கூடுதலாக, தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக் கழகத்தின்  மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூரில், நவீன பயிர் இனப்பெருக்க முறைகள் பற்றின  பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்குகின்றனர். 
 
          - இந்த வளாகத்தில்,  மாதிரி நான்கு ஹெக்டேர் அளவிலான நாற்றாங்கால் பண்ணையை, தேசிய தோட்டக்கலை மிஷன்  மூலம் அமைத்துள்ளனர். இது போன்ற நாற்றங்கால் அமைக்க தேசிய தோட்டக்கலை மிஷன்,  விவசாயிகளுக்கு மானியம் தருகின்றது. மேலும், விவசாயிகளுக்கு, அரசு நிரணயித்த  விலையில் விதைகளை வழங்குகின்றனர். 
 
                  |