தேனீ வளர்ப்பில் ராணி :  
        
          இவரது உண்மையான  பெயர்,  ஜோசபின் செல்வராஜ். இவருக்கு இருக்கும் சில புனைப் பெயர்களில்  ஒன்றான, 'ராணி தேனீ' என்கிற பெயர் தான்   இவருக்கு பெருமை அளிக்கின்றது என்று  கூறுகின்றார். ஜோசபின் செல்வராஜ் ஒரு தொழிலதிபர் மற்றும் ஒரு சமூக தொழில்முனைவோர்  ஆவார். இவரது குடும்பத்தில் நான்கு உறுப்பினர்கள் இருக்கின்றனர் (கணவர் மற்றும்  மூன்று குழந்தைகள்). “என் கணவர்,  மாதம் ரூபாய் 2000 சம்பளமாகப் பெற்று வந்த சமையத்தில்  குழந்தைகளைப்  பள்ளிக்கு அனுப்புவதற்கும் குடும்பத்தை  நடத்தவும் கடினமாக இருந்தது”  என்று ஜோசபின்  கூறுகின்றார். இவருக்கு, வரலாற்றில் பட்டம் வாங்கினவர். இவருக்கு ஆசிரியராகும் எண்ணம்தான்  மேலோங்கியிருந்தது. ஆனால் கிருஷி விக்யான் கேந்திரா (வேளாண் அறிவியல் நிலையம்)  மதுரையில் நடந்த மூன்று நாள் தேனீ வளர்ப்பு பயற்சி, இவரது வாழ்க்கையையே  மாற்றிவிட்டது.  
         
        வேளாண் அறிவியல் நிலையம் ஆதரவு:  
        
          "நான் தேனீ வளர்ப்பை  வேளாண் அறிவியல் நிலையத்தில் பயின்று சில கூடுதல் வருமானத்தை என் குடும்பத்திற்கு  ஆதரவு அளிக்க விரும்பினேன். நான் 2006 ஆம் ஆண்டு தேனீ வளர்ப்பைத் தொடங்கினேன்”  என்று ஜோசபின் கூறுகிறார். ரூ .5,000 கோடி முதலீட்டில், தேனீக்கள் வளர்க்க பத்து  பெட்டிகள் கொண்ட ஒரு அமைப்பில், ஜோசபின் தனது  வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தார். இன்று இவர், ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம்  ரூபாய் வரை சம்பாதித்து,  8,000 க்கும் மேற்பட்ட பெட்டிகளில் தேனீக்களை வளர்க்கின்றார்.  
          ஜோசபின்  தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களுக்கு தனது தேனை விற்பாத்து மட்டுமல்லாமல் நேரம்  கிடைத்தால் ஏராளமான கண்காட்சிகளிலும் பங்கேற்கிறார். இவர் தேனை, பெங்களூரு, கேரளா  மற்றும் மும்பை ஆயா இடங்களுக்கு வழங்குகிறார். சுமார் 6,000 பெட்டி தேனை விற்கிறார்.  இவரது பொருட்கள், சிறந்த தரமாக இருந்த போதிலும், ஜோசபின் ஏற்றுமதி செய்யக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். இவரது  பொருட்கள் இன்னும் இந்தியாவில் உள்ள பல இடங்களில் சேரவில்லை என்று கூறுகிறார். இவரது  தேன் பொருட்கள் இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கிடைக்கபெற உறுதி செய்ய  வேண்டும் என்று கூறுகின்றார்.  
          இவருக்கு கனரா  வங்கி, ரூ .10 லட்சம் கடன் வழங்குவதாக ஒப்புதல் தெரிவித்தது. இதனை வைத்து இவரது  வணிகத்தை விரிவாக்கம் செய்வது மட்டுமல்லாமல் இவரது தொழில் வளர இந்த பணத்தைப் பயன்படுத்த  முடியும் என்பதனால் ஜோசபின் அவர்களுக்கு ஒரு துணிகரமான பெரிய ஊக்கம் கிடைத்தது. ல்  கனரா வங்கியிடம் கடன் வாங்க செல்லும் பொழுது இவருக்கு பிரிகிடுக்காமலிருந்த கனரா  வங்கி தற்பொழுது இவருக்கென்று பெரிய அங்கீகாரம் தருகின்றது என்று பெருமையுடன்  கூறுகின்றார்.   
         
        ராணி  தேனீ விருது பெற்றார்:  
        
          - தமிழ்நாட்டில்  இருந்து ஜோசபின் செல்வராஜ், தேன் மற்றும் தேனீ வளர்ப்பு நன்மைகள் பற்றின  விழிப்புணர்வை பரப்புவதினால் இருபதாவது ஜானகிதேவி  பஜாஜ் புருஷ்கர்  2012 விருது ஜோசபின் செல்வராஜ் அவர்களுக்கு  வழங்கப்பட்டது. 
 
          - மேலும் தொடர்புக்கு: 
 
         
            http://agritech.tnau.ac.in/success_stories/sstories_farm_enter_2015_bee_keeping.html   |