- 
              
தரமான,  பொன்நிறமான, மற்றும் நோய் தாக்காத நெல் வைக்கோலை சிறு துண்டுகளாக வெட்டி 4-5 மணிநேரம்  தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
             
            - 
              
 ஊறவைத்த  வைக்கோல் துண்டுகளை சுமார் ஒருமணி நேரம் கொதிக்கும் தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.
             
            - 
              
 அதிகமான  அளவில் காளான் படுக்கைகளை தயாரிக்கும் பொழுது ஊறவைத்த வைக்கோல் துண்டுகளை கொதிக்கும்  தண்ணீரில் வேக வைப்பதற்கு பதிலாக 100 லிட்டர் நீரில் 7.5 கிராம் கார்பன்டேசிம் மற்றும்  125 மில்லி லிட்டர் பார்மலின் கலந்த கலவையில் 16 மணி நேரம் ஊறவைக்கலாம். இவ் இரசாயன  முறையில் தொற்று நீக்கம்  செய்யப்பட்ட வைக்கோலில்  காளான் மகசூல் குறைவாகக் காணப்படும். எனவே இம்முறையை தவிர்ப்பது நல்லது.
             
            - 
              
வேகவைத்த  வைக்கோல் துண்டுகளை தண்ணீரை வடித்த பின் சுத்தமான சாக்கு படுதாவில் 65 சதவிகிதம் ஈரப்பதம்  வரும் வரை நிழலில் உலர்த்த வேண்டும்.
             
            - 
              
 இவ்வாறு  உலர்ந்த  வைக்கோல் துண்டுகளை 36 12 அங்குல  பாலித்தீன் பைகளில் வைக்கோல் மாற்றி விதை என்ற அடுக்கமுறை உருளை படுக்கைகளை தயார்  செய்ய வேண்டும். பாலித்தீன் பைகளில் மூன்று சிறு துளைகளை ஏற்படுத்த வேண்டும்.
             
            - 
              
 படுக்கைகள்  15 -20 நாட்களில் வெண்மை நிறம் அடைந்தவுடன் சம அளவுள்ள இரண்டு படுக்கைகளாக நடுவில்  வெட்டி விட வேண்டும்.
             
            - 
              
 ஒவ்வொரு  அரை படுக்கையின் மேல் சுமார் 1-2 செ. மீட்டருக்கு மேற்பூச்சு கலவையை சமமாக இட வேண்டும்.
             
            - 
              
 மேற்பூச்சு  கலவையை கீழ்கண்ட முறையில் தயாரிக்க வேண்டும்.
             
            - 
              
 மேற்பூச்சு  கலவையை தயாரிக்க கரிசல் மண் (கார அமில நலை 8.0 இருக்க வேண்டும்) இந்நிலை கொண்டு வர  சுண்ணாம்பு அதாவது கால்சியம் கார்பனேட் ஒரு கிலோ மண்ணிற்கு 10 கிராம் என்ற அளவில்  சேர்க்க வேண்டும். லேசாக தண்ணீர் தெளித்து மண்ணை 20 இராத்தல் அழுத்தத்தில் வெப்ப மூட்டியில்  ஒன்றறை மணி நேரம்  தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.  சூடு ஆறியபின் தொற்று நீக்கம் செய்த மண்ணை மேற்பூச்சுக்காக பயன்படுத்தலாம்.
             
            - 
              
 மேற்பூச்சு  கலவை இட்டபின் படுக்கைகளை பாலித்தீன் கூண்டிற்குள் வைத்து பராமரிக்க வேண்டும்.
             
            - 
              
 படுக்கையின்  மீது லேசான  தண்ணீர் தெளித்து வர வேண்டும்.  ஒரு வாரத்தில் வெண்மை நிற காளான் பூசண இழைகள் மேற்பூச்சு மண் உறையின் மேல் படரும்.
             
            - 
              
 அதன்பின்  ஒரு வாரத்தில் காளான் மொட்டுக்கள் தோன்றும். இவை வளர்ந்து ஒரு வாரத்தில் அறுவடைக்குத்  தயாராகிவிடும்.