காளான்களை  தாக்கும் பூசண நோய்கள் 
             
              1.வேற்று  நிற பூசணங்கள் 
             
                          அறிகுறிகள்  
             
          காளான் படுக்கையில் வெண்மை நிறக்  காளான் பூசணத்தை தவிர பசுமை நிறத்தில் ஆஸ்பர்ஜில்லஸ், டிரைக்கோடெர்மா, பெனிசிலியம்,  வெளிர் பச்சை நிறத்தில் கிட்டோமியம், கருமை நிறத்தில் ரைசோபஸ் தோன்றும். 
          சுகாதாரமற்ற முறையில் காளான்  படுக்கை தயாரித்தல் மற்றும் குடிலை சரியாக பராமரிக்காததால் இந்நோய் காணப்படும். நோய்  காரணிகள் வேகமாக வித்துப் பெருக்கம் செய்து பண்ணை முழுவதும் பரவிவிடும். 
           
          கட்டுப்படுத்தும்  முறைகள் 
          
            
              - பூசண  வளர்ச்சி நிறைவடையாத படுக்கையில் சிறு புள்ளிகளாக வேற்று பூசணங்கள் தென்பட்டால் அந்த  இடத்திலுள்ள வைக்கோல் துண்டுகளை வெட்டி எடுத்தபின் அந்த இடத்தில் 0.05 சத மேன்கோசெப்  பூசணக் கொல்லியை நனைத்து பஞ்சினால் நன்றாக துடைக்க வேண்டும்.
 
              - படுக்கையின்  பெரும் பகுதி பாதிக்கப்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும்.
 
             
           
          2.நியூரோஸ்போரா  தீப்பூசணம் 
             
              நோய்  மற்றும் நோயின்  
               
            அறிகுறிகள் 
             
            படுக்கையில் தீயின் நிறத்தில்  பூசணங்களை தொங்கிக் கொண்டிருக்கும் மிகவும் சுகாதாரமற்ற சூழலின் சூழ்நிலைகள் மற்றும்  படுக்கை தயாரிப்பினால் தோன்றும். 
             
            கட்டுப்படுத்தும்  முறைகள் 
             
            இந்நோயை அழிப்பது மிகவும் கடினம்  எனவே நோய் தாக்கிய படுக்கையை அகற்றி எரித்து விட வேண்டும். 
             
            3.கடுகு  போன்ற பூசண இழை முடிச்சுகள் 
             
            நோய்  மற்றும் நோயின்  
             
            அறிகுறிகள்  
             
            ஸ்கிளிரோசிம் ஒரைசே எனும் பூசணம்  காளான் படுக்கையில் கடுகு போன்ற பூசண இழை முடிச்சகளாக தோன்றம். மேலும் காளான் பூசண  வளர்ச்சி திட்டு திட்டாக காணப்படும்.
            வைக்கோலை நன்றாக பதப்படுத்தாமல்  படுக்கை தயாரித்தல் இந்நோய் தாக்குதல் காணலாம். 
             
            கட்டுப்படுத்தும்  முறைகள் 
             
            நோய் தாக்கிய படுக்கைகளை அப்புறப்படுத்த  வேண்டும். 
             
            4.மஞ்சள்  திட்டு நோய் 
             
            நோய்  மற்றும் நோயின்  
             
            அறிகுறிகள் 
             
            பால்காளானில் மேற்பூச்சி மண்ணில்  ஆரம்பத்தில் மஞ்சள் திட்டுக்களாக தோன்றும், பூசணம் பின் காய்ந்து கூட்டம் கூட்டமாக  குச்சிகள் போன்ற வளர்ச்சி காணப்படும். மேற்பூச்சு மண்ணில் அதிக ஈரப்பதம் இருந்தால்  இந்நோயை காயலாம். 
             
            கட்டுப்படுத்தும் முறைகள் 
             
            மேற்பூச்சு மண்ணின் மீது அதிக  ஈரப்பதம் இருக்காதவாறு பராமரிக்க வேண்டும். 
            நோய் தாக்கிய படுக்கைகளை அப்புறப்படுத்த  வேண்டும். 
             
            5.  இளஞ்சிவப்பு நோய் 
             
                        அறிகுறிகள் 
             
            பால்காளானில் புதிதாக டாக்டிலியம்  டென்ட்ராய்ட்ஸ் எனும் பூசணம் நோய் ஏற்படுத்துகின்றது. மேற்பூச்சு மண்ணில் ஆரம்ப நிலையில்  அப்பூசணம் காளான் பூசணம் மாதிரி படரும். பின் காளான்களின் மேல் படர்ந்து காளான்களின்  தண்டுக்குள் உட்பகுதியில் இளஞ்சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். 
            மேற்பூச்சு மண்ணை சரியான முறையில்  தொற்று நீக்கம் செய்யாவிட்டால் இந்நோய் பண்ணை   முழுவதும் பரவி காளான்களை அழுகசெய்துவிடும். இந்நோய் தோன்றி 2-3 நாட்களில்  தீவிரம் அடைந்து காளான்கள் அனைத்தும் அழுகிவிடும். 
             
            கட்டுப்படுத்தும்  முறைகள் 
           
          
            
              - நோய்  வராமல் தடுக்க மேற்பூச்சு கலவையை வெப்பமூட்டியில் 20 இராத்தல் அழுத்தத்துடன் ஒன்றறை  மணிநேரம் கண்டிப்பாக தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.
 
              - நோய்  தாக்கிய படுக்கைகளை அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும்.
 
              - பால்காளான்  கூண்டில் தலை மற்றும் சுவர், கூரை பகுதிகளை 0.1 சதம் கார்பன்டேசிம் தெளிக்கவும். பதினைந்து  நாள் இடைவெளியில் காளான் கூண்டில் பொட்டாசிம் பெர்மாங்கனேட், பார்மலின் (21) கொண்டு  புகைமூட்டம் செய்த பின் படுக்கைகளை வைக்கவும்.
 
             
           
           
            பாக்டீரியா நோய் 
             
                          அறிகுறிகள் 
             
            நோய் தாக்கி படுக்கைகளில் காளான்  பூசணம் வளர்ச்சியின்றி திட்டத் திட்டாக பிசுபிசுப்பாக துர்நாற்றத்துடன் காணப்படும்.  மேலும் இப்படுக்கைகளை காளான் ஈக்கள் முட்டையிழுவதால் நோய் அதிக அளவில் பரவும். 
            காளான் படுக்கை தயாரிக்கும் போது  வைக்கோளில் அதிக ஈரப்பதம் இருந்தால் இந்நோய் தாக்கும். மேலும் காளான்களின் மேல் அதிக  ஈரப்பதம் இல்லாதவாறு பராமரிக்கவும். 
             
            கட்டுப்படுத்தும்  முறைகள் 
           
          
            
              - தரமான  மஞ்சள் நிறமடையாத காளான் வித்துக்கள் உபயோகிக்கவும் வைக்கோலில் ஈரப்பதம் 65 சதத்ததிற்கு  மேல் இருக்கக்கூடாது.
 
              - படுக்கைகளின்  மேல் குளோரின் கலந்த தண்ணீரை (10 லிட்டர் தண்ணீர்க்கு 2 கிராம் பிளிச்சிங் பவுடரை  கலக்கவும்) அல்லது ஸ்டேப்பட்ரோமைசின் சல்பேட் அல்லது அக்ரிமைசின் போன்ற பாக்டீரியா  கொல்லிகளை 10 லிட்டர் தண்ணீருக்கு 1-1.5 கிராம் என்ற அளவில் கலந்து காளான் மொட்டுக்களின்  மேல் தெளிக்கலாம்.
 
              - நோய்  தாக்கிய படுக்கைகளை அகற்ற வேண்டும்.
 
             
           
           
          காளானைத்  தாக்கும் பூச்சிகள் 
             
            காளான்களில் அதிகமாக காளான் ஈக்களான  போரிட் மற்றும் சியாரிட் இனங்கள் மற்றும் காளான் சிலந்திகளின் தாக்குதல் காணப்படும். 
             
            1.காளான்  ஈ 
             
            அறிகுறிகள் 
             
            காளான் குடிலுக்கு வெளியே தண்ணீர்  தேங்கி இருத்தல் மற்றும் மாட்டுத் தொழுவம் அல்லது குப்பைக் குழி அருகில் இருந்தால்  காளான் ஈக்கள் அதிக அளவில் இனபெருக்கம் செய்து காளான் படுக்கைகளில் முட்டைகள் இடும்.  அதிலிருந்து வெண்மை நிறபுழுக்கள் தோன்றி காளான் பூசண இழைகளை தின்பதால் திட்டுத்திட்டான  காளான் பூசண வளர்ச்சி கட்டுப்படுத்தும் முறைகள் 
          
            
              - ஈக்கள்  நுழையாவண்ணம் காளான் பண்ணையிலுள்ள சன்னல்களில் 35 காஜ் அளவிலான கம்பி வலைகள் பொருத்த  வேண்டும்.
 
              - காளான்களின்  மேல் படாதவாறு டைக்ளேர்வாஸ் 10 லிட்டர் தண்ணீருக்கு 6 மி.லி அல்லது மாலத்தியான் 10மி.லி  கலந்து தெளிக்கவும்.
 
             
           
          2.காளான்  சிலந்தி 
             
              அறிகுறிகள்  
             
            காளான்களில் மஞ்சள் அல்லது பழுப்பு  நிறகுழிகள் காணப்படும். உற்று நோக்கினால் அதில் மிகவும் சிறிய பூச்சிகள் தென்படும்.  வெப்பநிலை 15º செ.க்கு  கீழ் குறையும் போது இப்பூச்சிகள் அதிக அளவில் பெருகிக்  காளான்களைத் தாக்கும். 
            கட்டுப்படுத்தும் முறைகள் 
          
            
                - டைக்கோபால்  (0.1சதம்) அல்லது நனையும் கந்தகம் (0.1 சதம்) போன்ற மருந்துகளை கூரை மற்றும் மர அடுக்குகளின்  மேல் தெளிக்க வேண்டும்.
 
                - இப்பூச்சிகள்  தாக்கிய படுக்கைகளை அப்புற படுத்த வேண்டும்.
 
             
                      
                     |