|   | 
        அறுவடை பின் சார் செயல்முறைகள் 
         
            முன்னுரை 
             
          காளான்களை உடனே உண்ணுவது நல்லது. இருந்தாலும்,  நடைமுறையில் அது சாத்தியமில்லாதது. அதிக வெப்பநிலையில் சேமிக்கும் போது பழுப்பு நிறமாகிவிடும்.  காளான்கள் அதிக அளவு சுவாசிக்கும். அதனால் சேமிப்பின்போது அதிகளவு கவனம் எடுத்துக்  கொள்ள வேண்டும். பொதுவாக பின்பற்றப்படும் சில முறைகள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன. 
           
          1.குளிர் சாதன பதப்படுத்துதல் /உடனடி  பொதிக் கட்டுதல் 
           
          அறுவடை செய்த காளான்களை உடனடியாக 25 காஜ்  தடிமனுள்ள ஒட்டைகள் உள்ள பாலித்தீன் பைகளில் அடைக்கவேண்டும். பையில் அடைத்த உடனேயே  அதை 50 செ. வெப்பநிலையில் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து சேமிக்க வேண்டும்.  இந்த முறை 3-5 நாட்கள் வரை தொடரும். இந்த முறையால் காளானின் சுவாசிக்கும் திறனைக்  குறைக்கலாம், நீர் இழப்பை குறைக்கலாம், மேலும், காளான் பழுப்பு நிறமாவதையும், கெட்ட  வாசனை வருவதையம் தடுக்கலாம். 
           
          2.உறைநிலை உலர்த்துதல் 
           
          காளான்களை துண்டாக்கி, 0.05% சோடியம்  மெட்டா பைசல்பேட் 2% உப்புக்கரைசலில் 30 நிமிடங்களுக்கு மூழ்கவைக்க வேண்டும். 2 நிமிடங்கள்  கொதிக்கும் நீரில் இட்டு, பின் குளிர வைக்க வேண்டும். அதன்பிறகு, -120செ.  ஒரு நிமிடத்திற்கு உறையவிட்டு -200செ. வெப்பநிலையில் சேமிக்க வேண்டும்.  இந்த முறையால் 3-4 மாதங்கள் வரை சேமிக்கலாம். 
           
          3.நீரகற்றம் செய்தல் 
           
          இந்த  முறையில் 3 படிகள் உள்ளன. அவை முன்நேர்த்தி, உலர்த்துதல், சேமித்தல் 
           
          அ.முன்நேர்த்தி 
          
            
              - காளானை       சுத்தப்படுத்தி, சுடுநீரில் 2 நிமிடங்கள் வைத்து நிறமிழக்கச் செய்து, 2 நிமிடங்கள்       குளிர்நீரில் மூழ்க வைக்க வேண்டும்
 
              - காளானை       0.2% பொட்டாசியம் மெட்டா பைசல்பேட் +1% சிட்ரிக் அமிலத்தில் வைத்து, பின் உலர்த்த       வேண்டும்
 
             
           
          ஆ.உலர்த்துதல் 
          
            
              - சூரிய ஒளியில்       உலர்த்துதல்: முன்னேர்த்தி செய்த காளானை திறந்த       வெளி சூரிய வெளிச்சத்தில் 1/10 அளவு எடை குறையும் வரை உலர்த்த வேண்டும். உலர்த்திய       பின், 3 மாதங்களுக்கு சேமிக்க வேண்டும்.        இருந்தாலும், பழுப்புநிறமாக மாறும், மற்றும் கடைசி தோன்றும் பொருளும்       அவ்வளவு நன்றாக இருக்காது.
 
              - பாய்வு உலர்த்தியில்       உலர்த்துதல்: முன்னேர்த்தி செய்த காளானை 600       செ. வெப்பநிலையில் 6-8 மணி நேரத்திற்கு உலர்த்த வேண்டும். இந்த முறையில் கடைசி       ஈரப்பத் நிலை 3-5% என்று இருக்கும். 
 
              - வெற்றிடத்தில்       உலர்த்துதல்: முன்நேர்த்தி செய்த காளானை 400       செ. வெப்பநிலையில் வெற்றிடநிலையில் உலர்த்த வேண்டும். இந்த முறையில் மிகத் தரமான       காளான் கிடைக்கும். ஆனால் பதப்படுத்த ஆகும். செலவு சற்று அதிகம்.
 
             
           
          4.உப்பிலிடுதல் 
           
            மொட்டுக்  காளானை அதிகளவில் பாதுகாக்கும் போது இந்த முறை பயன்படுகிறது. இந்த முறைக்காக காளான்களை  ஆரம்ப நிலையிலேயே அறுவடை செய்யவேண்டும். ஒரேமாதிரி அளவுடைய காளான்களை தேர்ந்தெடுத்து,  காம்புகள் பதப்படுவதற்கு முன் வெட்டி விடவேண்டும். 
             
            செய்முறை: 
          
            
              - காளான்களை       சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் அழுக்கு மற்றும் இதர வேண்டாத பொருட்கள்       அகற்றப்படும்
 
              - காளானை       2 நிமிடங்கள் சுடுநீரிலும் 2 நிமிடங்கள் குளிர்ந்த நீரிலும் மூழ்க வைக்க வேண்டும்
 
              - 3/4       அளவு கொள்ளவு உடைய கலன்களில் காளான்களை நிரப்பவேண்டும். (சுமாராக 220 கிராம்       காளான்கள் 1 எல்பி கலனில் அடைக்கலாம்).
 
              - 2%       உப்பு, 2% சர்க்கரை, 0.3% சிட்ரிக் அமிலம் கலந்த உப்புகரைசலை சேர்க்க வேண்டும்       (சேர்ப்பதற்குமுன், உப்புக் கரைசலை கொதிக்க வைத்து, வடிகட்டவேண்டும்) (சுமாராக       125 மிலி கரைசல் 1 எல்பி கலனுக்கு தேவைப்படும்)
 
              - கலனின்       மீது மூடியிட்டு, கலனை கொதிக்கும் நீர் (அ) நிராவியில் 80-850செ.       வெப்பநிலை அடையும் வரை வைக்க வேண்டும்
 
              - காற்றுப்புகாதவாறு       அடைத்த சில செய்ய வேண்டும்
 
              - கிருமிநீக்கம்       செய்தவுடனே கலன்களை சுத்தமான நீரில் இட்டு குளிர வைக்க வேண்டும்
 
              - உலர்துணி       கொண்டு துடைத்து, குளிர்ந்த உலர்வான இடத்தில் சேமிக்க வேண்டும். இந்த முறையால்       அதன் வாழ்வுகாலம் 12 மாதம் வரை நீடிக்கலாம்.
 
             
           
           | 
          |