|   | 
        காளான் படுக்கை  தயாரிக்கும் முறை 
           
          பொதுவாக சிப்பிக்  காளான் வளர்ச்சி வெளியே தெரியக் கூடிய பாலித்தீன் பைகளில், வளர்க்கப்படுகிறது. இந்த  பையின் அளவு 60 x 30 செ.மீ, 80 காஜ் தடிமனுடன் இருக்க வேண்டும். 
           
          செய்முறை: 
          
            
              - கிருமி நாசினி கொண்டு கைகளை நன்றாகக்  கழுவ வேண்டும்
 
              - பாலித்தீன் பைகளை எடுத்து அடி நுனியை  நூல் கொண்டு மேல் நோக்கி இருக்குமாறு கட்டி விட வேண்டும்
 
              - கிருமிநீக்கம் செய்யப்பட்ட வைக்கோலை  ஈரம்போக நிழலில் உலர்த்த வேண்டும்
 
              - நன்கு வளர்ந்த விதைப் படுக்கையை வெளியே  எடுத்து, அமிழ்த்தி 2 அரைப் பகுதிகளாக பிரிக்க வேண்டும் (ஒரு வித்துப் பையிலிருந்து  2 படுக்கைகள் தயார் செய்யலாம்)
 
              - பாலித்தீன் பையின் அடியில் 3” அளவு உயரத்திற்கு  வைக்கோலை நிரப்பி, ஒரு கையளவு காளான் வித்தை எடுத்து, வைக்கோல் படுக்கையின் மீது  தூவ வேண்டும்
 
              - இரண்டாவது அடுக்கு வைக்கோலை 5” உயரத்திற்கு  நிரப்பி, காளான் வித்தையும் மேற்சொன்னபடி நிரப்பவும்
 
              - 5 அடுக்கு வைக்கோல் மற்றும் காளான்  வித்துக்கள் வரும்  வரை இந்த முறையை திரும்ப  திரும்ப செய்ய வேண்டும்
 
              - படுக்கையை மெதுவாக அமிழ்த்தி, பின் நூலால்  இறுக்கமாகக் கட்ட வேண்டும்
 
              - காற்றோட்டத்திற்காக 6 துளைகள் இட வேண்டும்
 
              - கூரை வேயப்பட்ட அறையில் இந்த படுக்கைகளை  அலமாரி அமைப்புகளில் (அ) தொங்கும் நிலையிலோ அடுக்கவும்
 
              - அறை வெப்ப நிலை 22 – 250 செ  மற்றும் ஒப்பு ஈரப்பதம் 85 – 90% 
 
              - ஏதும் மாசுபட்டுள்ளதா என்று கண்காணிக்க  வேண்டும். அப்படி இருந்தால் அகற்றி விட வேண்டும்
 
              - அதேபோல், பூச்சிகள் ஈக்கள், வண்டுகள்,  கரையான்கள், ஏதும் தாக்கியிருந்தர், மாலத்தியான் 1 மி.லி / லிட்டர் நீரில் கரைத்து  தெளிக்க வேண்டும்
 
              - நன்றாக பரவிய விதைப் படுக்கையை வளரும்  அறைக்கு மாற்ற வேண்டும்
 
             
           
          
            
              விதைப்படுக்கைகள் தயாரிக்கும்  முறை  | 
             
            
               | 
             
            
              வைக்கோலை 5 செ.மீ  அளவுக்கு வெட்டுதல் 
                | 
             
            
               | 
             
            
              வைக்கோலை 4 – 5 மணி  நேரத்திற்கு ஊற வைத்தல்  | 
             
            
               | 
             
            
              படுக்கைகளை உட்செலுத்துவதற்கான  படுக்கை வித்து  | 
             
            
               | 
             
            
              பாலித்தீன் பை: 60  x 30 செ.மீ, 80 காஜ் தடிமன்   | 
             
            
               | 
             
            
              பையின் ஒரு முனையை  நூலைக் கொண்டு கட்டுதல்   | 
             
            
               | 
             
            
              வைக்கோலை 3” உயரத்திற்கு  பாலித்தீன் பையின் அடியில் நிரப்புதல்  | 
             
            
               | 
             
            
              காளான்  வித்துக்களைத் தூவுதல்   | 
             
            
               | 
             
            
              இரண்டாவது அடுக்கு வைக்கோலை 5” உயரத்திற்கு  நிரப்பி, காளான் வித்தையும்  நிரப்பவும்  | 
             
            
               | 
             
            
              ஐந்து அடுக்கு வரும்  வரை திரும்ப திரும்ப செய்தல்  | 
             
            
               | 
             
            
              மெதுவாக அழுத்தி, நூலைக்  கொண்டு பையை ஈட்டுதல்  | 
             
            
               | 
             
            
              6 காற்றோட்டத் துளைகள்  ஏற்படுத்துதல்  | 
             
            
               | 
             
            
              விபரங்கள் இடுதல்  | 
             
            
               | 
             
            
              தொங்கும் கயிறு முறை  | 
             
           
           
            முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள்: 
          
  
                - வித்து பரவும் அறையை இருட்டாக வைத்திருக்க  வேண்டும். இதனால் வித்துக்கள் வேகமாக வளரும்
 
                - எலி கொல்லியை குறிப்பிட்ட கால இடைவெளியில்  வைக்க வேண்டும்
 
                - நீரை மணல் அடுக்கின் மீது குறிப்பிட்ட  கால இடைவெளியில் தெளிக்க வேண்டும்
 
                - காளான் படுக்கைகளின் மீது பூச்சிக் கொல்லிகளை  தெளிக்கக் கூடாது
 
             
           
           | 
          |