த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: மல்லிகையில் புதிய தொழில்நுட்பங்கள்
மின்னணு நுகரும் கருவி
த.வே.ப.க - மல்லிகையில் ஆய்வு :

இந்த செயல்முறையானது கொல்கத்தாவிலுள்ள நவீன கணினி வளர்ச்சி மையம் (Centre for Development and Advanced Computing, C-DAC (Kolkata), மற்றும் கோவை வேளாண்பல்கலைக் கழகத்தில் உள்ள மலரியல் மற்றும் நிழ எழிலூட்டும் துறையில் உள்ள விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் 2013-2014-ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட மல்லிகை மலர் மாதிரிகளானது அதன் முக்கிய வகையான ஜாஸ்மின் சம்பக்(குண்டுமல்லி) பயன்படுத்தப்பட்டது. ஆராய்ச்சி காலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகை செடிகளிலிருந்து அதிகாலை சுமார் 5 முதல் 6 மணியளவில் மலர்கள் களத்திலிருந்து சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. மலர் மொட்டின் வெளித்தோற்றத்தின் அடிப்படையில் அறுவடை நிலையானது (Harvesting stage) வகைப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு அறுவடை நிலையின் போதும் அதன் நறுமணக்குறியீடு, எத்திலின் வெளியேறும் வீதம் (Ethylene emission rate) மற்றும் மலரின் சுவாச வீதம் (Respiraton rate) போன்றவை மின்னணு நுகரும் கருவியின் உதவியுடன் கண்காணிக்கப்படுகிறது.(காலை முதல் அந்திப்பொழுது வரை). இந்த ஆய்வினால் குண்டு மல்லிகையில் அறுவடை செய்வதற்கு உகந்த நேரம் மற்றும் அறுவடை செய்தபின் வாசனை மெழுகை பிரித்தெடுப்பதற்கு தகுந்த நேரத்தைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது. இதன்மூலம் தரமான மலர்களை உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைகளுக்கு அனுப்ப வழிவகை செய்யப்படுகிறது.

முடிவுரை :
இந்த மின்னணு நுகரும் கருவியை விவசாயிகள், மலர்களை சந்தைப்படுத்துவோர் மற்றும் வாசனை மெழுகு உற்பத்தியாளர்கள் எளிதாகப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருப்பதற்குத் தற்பொழுது ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின்னணு நுகரும் கருவியை விவசாயிகள், மலர்களை சந்தைப்படுத்துவோர் மற்றும் வாசனை மெழுகு உற்பத்தியாளர்கள் எளிதாகப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருப்பதற்குத் தற்பொழுது ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Updated on June, 2015
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015