| மீலியா துபியா (Melia dubia) (மலை வேம்பு) மீலியேசியே (Meliaceae) குடும்ப வகையை  சேர்ந்ததாகும். இதன் பழங்குடி இனங்கள் இந்தியா, தென் கிழக்கு  ஆசியா, ஆஸ்திரேலியாவில் உள்ளது. இவை விறகிற்காக சாகுபடி  செய்யப்படுகின்றது . மீலியா துபியா வேகமாக வளர்ந்து வரும் மர இனங்களில் ஒன்று.  மேலும் இது மகாநீம் அல்லது மலை வேம்பு என அழைக்கப்படுகிறது மற்றும் நடவிலிருந்து 6-7  ஆண்டுகளில் அறுவடை செய்ய தயாராகும். இந்த மரத்திற்கு, பிளைவுட் மற்றும் காகித  தொழிற்சாலைகளில் நல்ல தேவை உள்ளது. 
               இம்மரம் 20 மீ உயரம்,  9 மீட்டர் நீளம்,  மற்றும் 1.2 - 1.5 மீ  சுற்றளவு கொண்டது. பட்டை  அடர் பழுப்பு நிறமுடன்,  ஆழமற்ற, மெல்லிய, குறுகலான விரிசல்  கீற்றுகள் கொண்டது. இலைகள் இரு வரிகளுடயவை. மலர்கள் மணமான, பச்சை கலந்த வெள்ளை நிறமுடையது,  பழங்கள் முட்டை  அல்லது நீள்வட்ட வடிவத்த்தில்  5 அல்லது குறைவான விதைகளை கொண்டிருக்கும்.  
            பரவல்  
            இது வெப்ப மண்டல  ஈர இலையுதிர்க் காடுகளில் காணப்படுகிறது. சிக்கிம் இமயமலை, வட வங்காளம் மற்றும்  அசாம், ஒரிசாவின் காஸி  மலைகள், டெக்கான் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 1,500 - 1,800 மீ  உயரத்திலும் இம்மரங்கள் உள்ளன.  
            சுற்றுச்சூழல் தேவைகள்  
          இது எல்லா மண் வகைகளிலும் வளரும்.  வளமான மணல், களிமண் வகைகளில் சிறந்த வளர்ச்சி  காட்டுகிறது. நாற்றுகள் குறைவான உறைபனியை தாங்கி வளரும். தண்ணீர் தேங்கியுள்ள  இடங்களில் மரங்கள் வளர்வதில்லை.   |