| பாதையாகும் தொழில்நுட்பங்கள் | 
          
          
            | தொழில் நுட்பம்- 1 | 
          
          
            
              
                | பயிரின் பெயர் | 
                : | 
                ஆமணக்கு  | 
               
              
                | பயிரின் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் பெயர் / தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ப்பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்  | 
                : | 
                பயிர் ஊக்கியான கன்சார்ட்டியா (காஸ்டர் கோல்ட்) 0.05 %    (0.5 மி.லி. / 1 லிட்டர் தண்ணீரில்) 25th மற்றும் 60th நாளில் இலை வழியாகத் தெளித்தல் வேண்டும். காலை அல்லது மாலை நேரங்களில் தெளிப்பது அவசியமாகும். | 
               
              
                | இந்தத்தொழில் நுட்பம் பின்பற்றுவதால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்  | 
                : | 
                1. பெண் மலரின் எண்ணிக்கை 95 சதவிகிதத்திற்கு மேல் அதிகரிக்கிறது  
                  2. 2.90 % விதை உருவாகிறது. | 
               
              
                இடம் பொருந்துதல்  
                 1.மண்டலம்    
                     a) மாவட்டம்  | 
                : | 
                சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு , 
                  திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்                   | 
               
              | 
          
          
            
              
                  | 
                  | 
               
              
                | காஸ்டர் கோல்ட | 
                ஆமணக்கு பயிர்  | 
               
              | 
          
          
            | தொழில் நுட்பம்- 2 | 
          
          
            | பொட்டாசியம் குளோரைடுடன் விதை நிரப்பு செய்தல் | 
          
          
            
              
                | பயிரின் பெயர்  | 
                : | 
                ஆமணக்கு  | 
               
              
                | பயிரின் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் பெயர் / தமிழ்நாடு    வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ப்பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்  | 
                : | 
                மானாவாரியில்    ஆமணக்கைப் பயிரிடும் பொழுது 1% பொட்டாசியம் குளோரைடுடன் விதை நிரப்பு செய்தல். | 
               
              
                | பரிந்துரைகள் | 
                : | 
                ஆமணக்கு விதையை 1% பொட்டாசியம்    குளோரைடுடன்  (KCl)     மூன்று மணி நேரத்திற்கு விதை நிரப்புதல் செய்து,    பருவமழை தொடங்குவதற்கு  ஒரு    வாரத்திற்கு முன்பாக விதைத்தால் ஆமணக்கில்    நல்ல விதை மகசூல் கிடைக்கும்.  | 
               
              
                | இந்தத் தொழில் நுட்பம் பின்பற்றுவதால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்  | 
                : | 
                விதை நிரப்புதல் செய்வதால் விதையில் முளைப்புத்திறன் அதிகரிக்கிறது. மேலும், வறட்சியைத்தாங்கி    அளவான பயிர் எண்ணிக்கை காணலாம். | 
               
              
                இடம் பொருந்துதல்  
                 1.மண்டலம்    
                     a) மாவட்டம்  | 
                : | 
                சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு , 
                  திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்                   | 
               
              | 
          
          
            | தொழில் நுட்பம்- 3 | 
          
          
            | இரசாயனம் மற்றும் உயிரி மூலம் போர்ட்ரையோ டினியா சாம்பல் பூசணம் மேலாண்மை  | 
          
          
            
              
                | பயிரின் பெயர்  | 
                : | 
                ஆமணக்கு  | 
               
              
                | பயிரின் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் பெயர் / தமிழ்நாடு    வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ப்பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்  | 
                : | 
                இரசாயனம் மற்றும் உயிரி மூலம்  போர்ட்ரையோ    டினியா சாம்பல் பூசணம் மேலாண்மை  | 
               
              
                | பரிந்துரைகள் | 
                : | 
                25th    மற்றும் 60th நாட்கள் இடைவெளியில் கார்பென்டாசிம் 0.1 % இலை வழியாகத் தெளித்தால் போர்ட்ரையோ டினியா சாம்பல் பூசணத்தைக்     கட்டுப்படுத்தலாம்..  | 
               
              
                | இந்தத்தொழில் நுட்பம் பின்பற்றுவதால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்  | 
                : | 
                கார்பென்டாசிம் 0.1 % இலை வழியாகத் தெளித்தால் சாம்பல் பூசணத்தின் தாக்கம் முதன்மை மற்றும் இரண்டாம் பூக்கொத்தில் இதனுடைய தாக்கம் குறைவாகக் காணப்படும் மற்றும் விதை மகசூல் அதிகரிக்கும். | 
               
              
                இடம் பொருந்துதல்  
                  1.மண்டலம்  
                     a) மாவட்டம்  | 
                : | 
                சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு , 
                  திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்  | 
               
              | 
          
          
| தொழில் நுட்பம்- 4 | 
          
          
            
              
                | பயிரின் பெயர்  | 
                : | 
                ஆமணக்கு  | 
               
              
                | பயிரின் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் பெயர் / தமிழ்நாடு    வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ப்பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்  | 
                : | 
                ஆமணக்கில் வெங்காயத்தை    ஊடுபயிராக சாகுபடி செய்தல்  | 
               
              
                | பரிந்துரைகள் | 
                : | 
                இந்த    ஊடுபயிர் முறையில்(ஆமணக்கு, வெங்காயம்) 1:2 விகிதத்தில் ஒரு வரிசை ஆமணக்கு, இரண்டு    வரிசை வெங்காயம் நடலாம். வீரிய    ஆமணக்கு இடைவெளியானது1.5 5மீ.x 1.0 மீ. ஆகவும்    60x30x60  இடைவெளியானது 60 செ.மீ. இரண்டு புறம் ஆமணக்கு செடிக்கும் 30 செ.மீ. வெங்காய செடிக்கு விட்டு நடவு செய்ய வேண்டும். இந்த சாகுபடி முறையில் அதிக மகசூல் மற்றும் லாபமும் கிடைக்கும். | 
               
              
                | இந்தத்தொழில் நுட்பம் பின்பற்றுவதால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்  | 
                : | 
                இந்த சாகுபடி முறையில் களைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். களைக்கொல்லிகள் மற்றும் பயிர்ப்பாதுகாப்பு    இரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைத்து ஒரு பாதுகாப்பான சூழ்நிலை அமைக்க முடிகிறது.    மேலும் களை எடுப்பதற்கு நேரிடும் செலவைக் குறைத்து அதிக லாபம் ஈட்டலாம்.  | 
               
              
                இடம் பொருந்துதல்  
                  1.மண்டலம்  
                     a) மாவட்டம்  | 
                : | 
                சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு , 
                  திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்  | 
               
              | 
          
          
            
              
                  | 
                  | 
               
              
                | ஆமணக்கில்  ஊடுபயிராக வெங்காயம்  | 
                 
              | 
          
          
            | தொழில் நுட்பம்- 5 | 
          
          
            
              
                | பயிரின் பெயர்  | 
                : | 
                மரவள்ளி கிழங்கு  | 
               
              
                | பயிரின் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் பெயர் / தமிழ்நாடு    வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ப்பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்  | 
                : | 
                மரவள்ளி கிழங்கில்    செதில் பூச்சி கட்டுப்படுத்துதல்  | 
               
              
                | பரிந்துரைகள் | 
                : | 
                நடவுக்க 15 நிமிடம் முன்பாக இந்த மரவள்ளி கரணையை டைமெத்தோயேட் @ 2 மி.லி./ லிட்டர் + கார்பென்டாசிம் 2 கிராம் / லிட்டரில்    ஊற வைத்து, பின்பு    நடவு செய்ய வேண்டும். | 
               
              
                | இந்தத்தொழில் நுட்பம் பின்பற்றுவதால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்  | 
                : | 
                கரணை நேர்த்தி மூலம், நடவுக்குப் பயன்படுத்தும் கரணைகளோடு ஒட்டிக்கொண்டிருக்கும் செதில் மற்றும்    மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.  | 
               
              
                இடம் பொருந்துதல்  
                  1.மண்டலம்  
                     a) மாவட்டம்  | 
                : | 
                தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மண்டலங்களும்  
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் | 
               
              
                
               
              | 
          
          
            
               
              
                  | 
               
              
                | மரவள்ளி கரணை நேர்த்தி | 
               
              | 
          
          
            | தொழில் நுட்பம்- 6 | 
          
          
            
              
                | பயிரின் பெயர்  | 
                : | 
                மரவள்ளி கிழங்கு  | 
               
              
                | பயிரின் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் பெயர் / தமிழ்நாடு    வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ப்பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்  | 
                : | 
                நுண்ணூட்ட  சத்து குறைபாடு    மேலாண்மை  | 
               
              
                | பரிந்துரைகள் | 
                : | 
                1 % பெர்ரஸ் சல்பேட் + 0.5 % துத்தநாக சல்பேட், 60 மற்றும் 90 வது நாட்களில் இலை வழியாகத் தெளித்தல் வேண்டும். | 
               
              
                | இந்தத்தொழில் நுட்பம் பின்பற்றுவதால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்  | 
                : | 
                நுண்ணூட்ட சத்து குறைபாட்டை அகற்றலாம். மேலும் மகசூல் குறைவைத் தவிர்க்கலாம்.  | 
               
              
                இடம் பொருந்துதல்  
                  1.மண்டலம்  
                     a) மாவட்டம்  | 
                : | 
                தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மண்டலங்களும்  
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் | 
               
              | 
          
          
            
              
                  | 
                  | 
               
              
                | நுண்ணூட்ட  சத்து குறைபாடு  | 
                 
              | 
          
          
            | தொழில் நுட்பம்- 7 | 
          
          
            
              
                | பயிரின் பெயர்  | 
                : | 
                மரவள்ளி கிழங்கு  | 
               
              
                | பயிரின் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் பெயர் / தமிழ்நாடு    வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ப்பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்  | 
                : | 
                மரவள்ளி கிழங்கில் மாவுப்பூச்சி மேலாண்மை  | 
               
              
                | பரிந்துரைகள் | 
                : | 
                மாவுப்பூச்சியைக்    கட்டுப்படுத்த 1 ஏக்கருக்கு(100 எண்கள்)    பப்பாயா மாவுப்பூச்சி ஒட்டுண்ணி விடலாம்.  | 
               
              
                | இந்தத்தொழில் நுட்பம் பின்பற்றுவதால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்  | 
                : | 
                இந்த மாவுப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தி மற்றும்    மகசூலை அதிகரிக்கலாம்.  | 
               
              
                இடம் பொருந்துதல்  
                  1.மண்டலம்  
                     a) மாவட்டம்  | 
                : | 
                தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மண்டலங்களும்  
                  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் | 
               
              | 
          
          
            
              
                  | 
                  | 
               
              
                | மரவள்ளி கிழங்கில் மாவுப்பூச்சி | 
                 
              | 
          
          
            ஆதாரம்: முனைவர்  S.மாணிக்கம்   
              பேராசிரியர்  மற்றும் தலைவர், 
              மரவள்ளி  மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம்  
              ஏதாப்பூர்,   
              பீ.ஜி.பாளையம்(அஞ்சல்) – 636119 
              சேலம்  மாவட்டம்  
              தொலைபேசி  : 04382-221901/ 293526 
              arsyethapur@tnau.ac.in
              
             | 
          
          
            |   |