|   | 
    
       முக்கியத்துவம் 
சுத்திகரிப்பு  சாதனங்கள் 
சுத்திகரிப்புத்தளங்கள்  | 
      | 
      
      விதை மையம் 
        
       
      தோற்றம் 
         
      விதை அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப துறை மைல்கல் 
        
      தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விதை  தொழில் நுட்பத் துறை 1972 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிறகு அடிப்படை மற்றும் செயல்முறைச்  சார்ந்த ஆய்வில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டதால் இதனை 1998 ஆம் ஆண்டு விதை அறிவியல் மற்றும்  தொழில்நுட்பத் துறை என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்  கழகத்தில் மொத்தம் 48 விதை விஞ்ஞானிகள் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் பணிபுரிந்து  வருகின்றனர். இவர்கள் கல்வி, ஆராய்ச்சி, விதை உற்பத்தி மற்றும் விரிவாக்க பணிகளில்  ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் 16 பேர் அமெரிக்கா, சீனா, ஸ்வீடன், டென்மார்க், கனடா,  பிரிட்டன், பிலிப்பைன்ஸ் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் பயிற்சி பெற்றவர்கள். 
        
      கல்வி 
        
  விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை  முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பை வழங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் வேளாண்மை,  தோட்டக்கலை வனவியல், வேளாண் பொறியியல் மற்றும் தொழில் நுட்பவியல் பயிலும் இளங்கலை  மாணவர்களுக்கு கல்வி வழங்குகின்றது. 
        
           
       
            ஆய்வு 
         
  இந்த துறை விதை உற்பத்தி, சுத்திகரிப்பு,  பரிசோதனை, சேமிப்பு, விதை நலம் மற்றும் விதை துரிதப்படுத்துதல் போன்ற ஆய்வுகளை வேளாண்,  தோட்டக்கலை தீவனம் மற்றும் மர வகை செடிகளில் தீவிர ஈடுபாடுகளுடன் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த ஆய்விற்குத் தேவையான நிதியுதவியை நம் நாட்டினர், அகில உலகத்தினர் மற்றும் தனியார்  துறைகளிலிருந்து பெறப்படுகிறது. பயிற்சி மாநிலத்தில் வேளாண் பல்கலைக் கழகம், இந்திய  விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் துறை அலுவலர்கள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும்  விவசாயிகளுக்கு நடத்தப்படுகிறது. 
      
      விதைமைய உருவாக்கம்  
       
பல ஆராய்ச்சியாளர்களின் நல்ல முயற்சியினால்  கண்டுபிடிக்கப்பட்ட இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் விவசாயிகளுக்குச் சென்றடடையவில்லை.  இதற்கு முக்கிய காரணம் நல்ல தரமான விதைகள் இல்லாமைதான். இதனால் தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகம் விதை நுட்பச் செயல்பாடுகளை விரிவுபடுத்தி அதன்மூலம் விவசாயிகளுக்கு நல்ல  தரமான விதைகள் கிடைக்க வழி செய்துள்ளன. 
       
இந்திய விவசாய ஆராய்ச்சி மெகா விதைத் திட்டத்தின்  வேளாண் விதைகள் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்புத் துறையின் முதல் கூட்டம் ஜ¤ன் 27  - 28, 2006 அன்று புதுடெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் விதைக்கென்று தனிச்சிறப்பு  அலுவலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஆலோசனைபடி செயல்படுவார்  என்று வலியுறுத்தினர். மேற்கூறிய விதிமுறையின்படி விதைமையம் 27.10.2006 அன்று தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. 
        
      நோக்கம் 
      
        
          - தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து  விவசாயிகளுக்கும் மேம்படுத்தப்பட்ட இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் சென்றடையச்  செய்தல்.
 
          - பெரும்பான்மை பயிர்களின் விதை மாற்று வீதத்தை விரிவுபடுத்தி  உற்பத்தியை பெருக்குதல்.
 
          - நல்ல தரமான விதைகள் கிடைக்க மாநிலத்தில் தகுந்த இடங்களை  தேர்வு செய்தல்.
 
          - விதை உற்பத்திக்கான அதிகப்படுத்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை  கையாளுதல்.
 
         
       
      விதை மைய  பணிகள் 
      
        
          - விவசாயிகளின் தேவைக்கேற்ப விதை உற்பத்தியை அதிகரித்தல்
 
          - அதிக இனத் தூய்மை உள்ள வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்து  மாநில் அரசுக்கும் மற்றும் தனியார் விதை நிறுவனங்களுக்கு வழங்குதல்.
 
          - நல்ல தரமான விதைகளை விவசாய மக்களுக்கு வழங்குவதன் மூலம்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்ககலைக்கழகம் கண்டுபிடிக்கப்பட்ட இரகங்கள் மற்றும் இதர மேம்படுத்தப்பட்ட  இரகங்களை மக்கள் மத்தியில் பரப்புதல்.
 
          - சிறந்த வல்லுநர்களை பயன்படுத்தி நல்ல தரமான விதைகளை உற்பத்தி  செய்து தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் மிகப்பெரிய விதை உற்பத்தியாளராக விரிவுபடுத்துதல்.
 
          - தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக் கழகத்தின் வருமானத்தை உயர்த்துதல்.
 
         
       
                       | 
      | 
    
               முன்னுரை 
செÂல்படும் திட்டங்கள் 
விதை உற்பத்தி 
ப¢ற்சி 
விதை  ஆய்வு  |