  
          விதை ஆய்வு 
         
  விதை பரிசோதனை ஆய்வு என்பது விதையின் தரங்களான  புறத்தூய்மை, ஈர்பபதம், முளைப்புத் திறன் மற்றும் பிற இரக விதைகளின் கலப்பு போன்றவற்றை  ஆய்வு செய்து விவசாயிகளுக்க நல்ல தரமான விதைகள் கிடைக்கச்செய்வதே ஆகும். 
         
  விதையின் தரத்தை கட்டுப்பாடு செய்யும் முக்கிய  குவியம் விதை ஆய்வுக்கூடங்கள் ஆகும். கால வரையறைக்குள் விதை ஆய்வை மேற்கொள்வதன் மூலம்  விதைக்குவியல்களின் திறனைத் தெரிந்து கொள்ளலாம். 
         
  விதை உற்பத்தி செய்வோர், விற்போர் மற்றும்  உபயோகிப்போர் அனைவரும் விதை ஆய்வினை மேற்கொள்ளலாம். 
          விதை ஆய்வின் நோக்கம்  மற்றும் அவசியம் 
         
  குறைந்த தரம் வாய்ந்த விதைகளை நடவு செய்வதன்  மூலம் ஏற்படும் இடர்களை குறைப்பதே விதை ஆய்வின் நோக்கம் ஆகும். 
          
            
              - விதையின்       தரத்தை குறைக்கும்  காரணகளைக் கண்டறிதல்
 
              - நடவு       செய்வதற்கு ஏற்ற விதையின் தரத்தை உறுதி செய்தல்
 
              - விதையை       உலர்த்துதல் மற்றும் சுத்திகரிப்பு செய்தல் போன்றவற்றிற்கு தேவையான செய்முறையை       தீர்மானித்தல்
 
              - விதைகள்       தரங்கள் குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்டு உள்ளதைத் தீர்மானித்தல்
 
              - நுகர்வோர்       விதையின் தரத்தைக் கொண்டு பாரபட்சம் இன்றி அனைத்து குவியல்களின் விலையை தீர்மானித்தல்.
 
             
           
            
          உபயோகப்படும் விதைகளை ஆய்வுக் கூடங்களில்  சமர்ப்பித்து விதைகளின் தரத்தைத் துல்லியமாக கண்டறியும் ஆய்வு முடிவுகளைப் பெறுவதே  விதை ஆய்வின் பிரதான நோக்கம் ஆகும். 
          முக்கியத்துவம் 
          
            
              - விதை       ஆய்வின் முக்கியத்துவம் 100 வருடங்களுக்கு முன்பே நடவு செய்யும்பொழுது விதை தரத்தின்       முக்கியத்துவம் மூலம் உணரப்பட்டது.  இங்கிலாந்தில்       மற்றும் சில பகுதிகளில் காய்கறி விதைகளுக்குள் கல்தூசி கலப்படம் செய்து விற்கப்பட்டது. 
 
              - பயிர்       விளைவித்தலில் ஏற்படும் இடர்களை களைவதற்காகவே விதைத் தரம் கண்டறியும காரணிகளாக       தூய்மை, ஈரப்பதம், முளைப்புத் திறன், வீரியம் மற்றும் நலம் போன்றவற்றை பற்றிய       விதை ஆய்வின் விழிப்புணர்வு உணர்த்தப்பட்டது.
 
              - சான்று       விதையின் தரத்தை நடவு செய்தலின் போது உறுதிப்படுத்துவது.
 
              - விற்பனைக்கு       தயாராக உள்ள விதைக்குவியலின் தரத்தைக் கட்டுப்படுத்தும் காரணிகளை உறுதி செய்வது.
 
              - இந்தக்       காரணிகள், விதை ஈரப்பதம், முளைப்புத் திறன் மற்றும் வீரியம், புறத்தூய்மை மற்றும்       இனத்தூய்மை, விதை மூலம் பரவும் நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதல் போன்றவை ஆகும்.
 
              - வணிகத்தில்       ஈடுபடும் நிலையில், விதை ஆய்வின் விதிமுறைகளை ஐஎஸ்டிஏ நிறுவனம் (1985) விதித்து,       விதை ஆய்வின் கட்டாயத்தை உணர்தியது.
 
              - கீழே       விளக்கப்பட்டு விதை ஆய்வு முறைகள் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டது. ஏனெனில் நமது       நாட்டின் பயன்பாட்டின் உள்ள விதைகள் (செலாம் et al, 1967) அனைத்தும் தரமான விதையைச்       சார்ந்ததே ஆகும். (ஐஎஸ்டிஏ 1996).
 
              - நடவிற்கு       வைக்கப்பட்டுள்ள விதைக்குவியல்களிலிருந்து எடுக்கப்படும் விதை மாதிரியே ஆய்விற்கு       பயன்படுத்தப்படும். விதைக்குவியலை ஒப்பிடுகையில் விதை மாதிரியான அளவு மிகச் சிறியதே       ஆகும்.
 
             
           
            
          விதை ஆய்வுக்கூடங்களின்  பங்கு 
         
  விதை சான்றளிப்பு மற்றும் விதை தரக்கட்டுப்பாடு  முறைகளிள், விதை ஆய்வுக்கூடங்களின் பங்கு இன்றியமையாதது. உற்பத்தியாளர், நுகர்வோர்  மற்றும் விதைத் தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு, விதைத் தரத்தை பற்றிய விவரங்களை அளிப்பதே  இதன் நோக்கம் ஆகும். மேலும் குறைந்த தரம் வாய்ந்த விதைகளை நிராகரிக்க விதை ஆய்வுக்கூடங்களின்  முடிவுகள் உதவும். 
          விதை ஆய்வு  
          விதை ஆய்வு என்பது மிகவும் சிறப்பம்சம் மற்றும்  நுட்பம் வாய்ந்த பணியாகும். விதைத் தரக் கட்டுப்பாட்டில் ஒரு சீரிய முறையைக் கடைப்பிடிக்க,  விதை ஆய்வுக் கூடங்களில் கீழ்க்கண்ட பகுதிகள் செயல்படுகின்றன. 
          1. புறத்தூய்மை ஆய்வு செய்யும் பகுதி  
  இந்த   ஆய்வில்  இரண்டு காரணிகள் உட்படுகின்றன 
          
            
              - விதைக்குவியலின்       தூய்மையை ஆய்தல் மற்றும்
 
              - பயிரிடப்பட்ட       இரகத்தின் உண்மை நிலையை ஆய்தல்
 
             
            
              - ஈரப்பதம்       ஆய்வு செய்யும் பகுதி
 
              - முளைப்புத்திறன்       மற்றும் வீரியம் ஆய்வு செய்யும் பகுதி
 
             
           
          விதை ஆய்வுக் கூடங்களில்  மாதிரிகள் எடுத்தல் 
         
  விதை ஆய்வுக் கூடங்களில் சமர்ப்பிக்கப்படும்  மாதிரிகளை, கீழ்க்கண்ட முறைகளின் மூலம் ஆய்வு மாதிரிகள் தயார் செய்து ஆய்வுகளுக்கு  பயன்படுத்தவேண்டும். 
            
          விதைகளை கலக்குதல் மற்றும்  பிரித்தல் 
         
  சமர்ப்பிக்கப்படும் மாதிரிகளிலிருந்து, ஒன்றுபட்ட  ஒரு ஆய்வு மாதிரி கிடைக்கப் பெறுவதே கலக்குதல் மற்றும் பிரித்தல் போன்ற முறைகளின்  நோக்கம் ஆகும். 
          கலக்குதல் மற்றும் பிரித்தல்  முறைகள் 
          
            
              - கருவி       மூலம் பிரித்தல்
 
              - மேம்படுத்தப்பட்ட       பிரித்தல் முறை
 
              - தரம்       பிரித்தல் முறை
 
              - தொடர்பில்லா       குவளை முறை (Random Cup method) 
 
              - கரண்டி       முறை  (Spoon method)
 
             
           
          கருவி மூலம் பிரித்தல் 
         
  மெல்லிய மயிரிழைகளாலும், பூவடிச் செதில்களாலும்  சூழப்பட்ட விதைகள் தவிர்த்து மற்ற அனைத்து விதைகளுக்கும்  இம்முறை பொருந்தும். 
          நோக்கம் 
          
            
              - விதை       மாதிரிகளை கலப்படமற்றதாக்க வேண்டியது மற்றும் மாதிரியின் அளவை தேவைக்கேற்ப  குறைப்பதும் ஆகும்.
 
              - சமர்ப்பிக்கப்படும்       விதை மாதிரிகளை பிரிக்கும் கருவியில் செலுத்துவதன் மூலம் இரு பிரிவுகளாக்கி, மீண்டும்       அவற்றை ஒருங்கிணைத்து இரண்டாம் முறை மற்றும் மூன்றாம் முறை செலுத்துவதால் கலப்படமற்ற       மற்றும் சமச்சீரான பகுதிகளாக கிடைக்கப் பெறுவதும் ஆகும்.
 
              - பிரிக்கும்       கருவியில் செலுத்தி, ஒரு பகுதியை மட்டும் மீண்டும் தொடர்ந்து செலுத்துவதால் மாதிரியின்       அளவு குறைந்து ஆய்விற்கு தேவைப்படும் அளவில் கிடைக்கும்.
 
             
           
          கருவி மூலம் பிரித்தல்  வகைகள் 
          
            
                | 
              போயர்னர் பிரிக்கும்  கருவி 
         
  இந்தக் கருவியில் விதைகள் சேகரிக்கும் பாகமும்  (hopper), அதன் கீழ் ஒரு கூம்பும்,  விதைகளை  சம அளவில் பிரித்தெடுக்கும் தடுப்புத் தட்டு போன்ற பாகமும் (Battle) மற்றும் விதைகளை  சேகரிக்கும் குழாய் போன்ற பாகமும் (spout) இருக்கும். விதை சேகரித்துள்ள பாகத்தின்  அடியில் உள்ள தடுக்கிதழ் (Valve) திறந்தவுடன், விதைகள் கூம்பின் வழியாக கீழே விழுந்து  சம அளவில் பிரிக்கப்படும். பிரிக்கப்பட்ட விதைகள் அதன் கீழுள்ள குழாயில் சேகரிக்கப்படும்.  இந்த முறையில் உள்ள பாதகம் என்னவெனில் இதில் மாதிரியின் தூய்மை குறைந்து காணப்படும்.  | 
             
            
              மண் பிரிக்கும் கருவி 
    
  போயர்னர் கருவி போன்றே வடிவமைக்கப்படட்து  இது. வித்தியாசம் யாதெனில் இதில் உள்ள கான்கள் (channel) ஒரு வரிசையில் அமைந்திருக்கும்.  இதில் விதை சேமிக்கும் பாகத்தில் (hopper) கான்களும், விதை சேகரிக்கும் தட்டும் இருக்கும்.  இக்கருவி பெரிய அளவு விதைகளுக்கும், உமி உள்ள விதைகளுக்கும் பொருந்தும்.  | 
               | 
             
            
               | 
              சுற்றிப் பிரிக்கும்  கருவி (அ) காமெட் கருவி 
         
  மையவிலக்கு விசையின் கோட்பாட்டில் செயல்படுவது  இக்கருவி. மின் விசைத்தறி மூலம் சுற்றும் ஒரு இரப்பர் ஸ்பின்னர் (Rubber Spinners)  விதைகளை மையவிலக்கு விசையால் சமபகுதிகளை பிரிக்கப்பட்டள்ள தடுப்புத் தட்டில் விழச்  செய்யும். இப்படி விழுந்த விதைகளை குழாய் வழியாகச் சேகரிக்கவேண்டும்.  | 
             
           
          தொடர்பில்லா குவளை முறை 
       
ஆய்வு மாதிரியின் அளவு 10 கிராம் எடை தேவைப்படும்  உமி குறைந்த விதைகளுக்கு இம்முறை பயன்படும். (எ.கா.) பிராஸிகா வகைகள். ஆறு முதல் எட்டு  குவளைகளை ஆங்காங்கே தொடர்பில்லாமல் ஒரு தட்டில் வைக்கவேண்டும். விதைகளை கலக்கிய பின்  இந்தத் தட்டில் தூவவேண்டும்.  குவளைகளில் விழும்  விதைகளை சேகரித்து ஆய்வு மாதிரியாக அனுப்பவேண்டும். 
          மேம்படுத்தப்பட்ட பிரித்தல்  முறை 
         
  இந்த வகை கருவியில் ஒரு தட்டில்  சதுரக் குவளைகள் கொண்ட கட்டம் போன்ற அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும்.  விதைகளை இந்தக் கட்டங்களில் மேல்  தூவிய பின்  அந்த கட்டமைப்பு தூக்கினால் பாதியளவு விதைகளே தட்டில் விழுந்திருக்கும். சமர்ப்பித்த  மாதிரி விதைகளை சம பங்காக பாதியளவு குறைப்பதற்கு இந்த முறை ஏற்றதாகும். 
            
          கரண்டி முறை 
         
  ஒற்றை சிறிய விதைகள் கொண்ட பயிர்களுக்கு  இம்முறை பயன்படும். ஒரு தட்டு, கூர்முனைக் கரண்டி மற்றும் கரண்டி ஆகியவை தேவைப்படும்.  விதைகளை கலக்கிய பின் அந்தத் தட்டில் தூவவேண்டும். அதன் பின் அந்தத் தட்டை அசைக்காமல்  வைக்கவேண்டும். ஒரு கரத்தில் கூர்முனை கரண்டியையும்இ மற்றொரு கரத்தில் கரண்டியையும்  கொண்டு தட்டில் ஆங்காங்கே 5 இடங்களுக்கு குறையாமல் சிறிய விதைகளை சேகரிக்கவேண்டும்.  இம்முறையில் தேவைப்படும் அளவு ஆய்வு மாதிரியை தேர்வு செய்யலாம். 
          கரம் பிரித்தல் முறை 
         
  உமி உள்ள விதைகளுக்கு மட்டும் இம்முறை பொருந்தும்.  விதைகளை ஒரு இடத்தில் தூவி நன்கு கலந்த பின் சிறு குவியலாக வைக்கவேண்டும். இந்தக் குவியலை  இரு சம பங்காகப் பிரித்து, பின் அதன் ஒரு பங்கை நான்காக பிரித்து, பின் அதன் ஒரு பங்கை  எட்டு பகுதிகளாக பிரிக்கவேண்டும். இந்தப் பகுதிகளை ஒரு வரிசையில் சீரமைத்து அவற்றின்  மாற்றுப் பகுதிகளை (Alternative Portions) மட்டும் சேகரிக்கவேண்டும். இதனை மீண்டும்  மேற்கூறியது போல் பிரித்து தேவைப்பட்ட மாதிரி அளவை சேகரிக்கவேண்டும். 
          புறத்தூய்மை 
          தூய்மை ஆய்வு 
         
  விதையின் தூய்மையை நிர்ணயிக்கும் அங்கங்களான,  தூய விதைகள், பிற இரக விதைகள், களை விதைகள் மற்றும் கல், கசடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதே  புறத்தூய்மை ஆய்வு ஆகும். 
          நோக்கம் 
          சமர்ப்பிக்கப்படும் விதை மாதிரியானது புறத்தூய்மை  தரங்களின் வரையறைக்கு உட்பட்டு உள்ளதை ஆய்வு செய்வதே இதன் நோக்கம் ஆகும். 
          செய்முறை 
          ஆய்வு மாதிரி 
         
  சமர்ப்பிக்கப்படும் மாதிரியிலிருந்து எடுக்கப்படும்  ஆய்வு மாதிரியை விதை ஆய்விற்கு உபயோகப்படுத்தவேண்டும். ஆய்வு மாதிரியை ஒரு பகுதியாகவோ,  (அ) இரு துணைப் பகுதிகளாக பிரித்து ஒரு குறிப்பிட்ட எடை விதையை ஆய்விற்கு எடுத்துக்  கொள்ளவேண்டும். 
          ஆய்வு மாதிரியான எடை 
         
  ஆய்வு மாதிரிகள் மற்றும் அதன் அங்கங்களின்  எடையளவு எந்தத் தசமதானதத்தை (Decimal places) கொண்டமைய வேண்டும் என்பது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.           
          
            
              
                ஆய்வு மாதிரியின் எடை (கி)  | 
                தசமதானத்தின் எண் அளவு  | 
                உதாரணம்  | 
               
              
                <1  | 
                4  | 
                0.7534  | 
               
              
                1-9.999  | 
                3  | 
                7.534  | 
               
              
                10-99.99  | 
                2  | 
                75.34  | 
               
              
                100-999.9  | 
                1  | 
                753.4  | 
               
              
                > 1000  | 
                0  | 
                7534  | 
               
             
           
          தூய்மை செய்தல் 
          ஆய்வு மாதிரியை தேவைப்பட்ட எடை அளவிற்கு  எடுத்த பின்னர் அதனை பின்வரும் அங்கங்களாக பிரிக்கவேண்டும். 
          
            
              - தூயவிதை
 
              - பிற       இரக விதை
 
              - களை       விதை மற்றும்
 
              - கல்,       கசடுகள்
 
             
           
          தூய விதை 
         
  ஆய்விற்கு அனுப்பியவர் குறிப்பிட்டுள்ள விதையே  தூய விதையாகும். அந்த சிற்றினத்திற்குட்பட்ட அனைத்து தாவர இரகங்களும், இதில் அடங்கும்.  முதிராத வளர்ச்சிக்குன்றிய, சுருங்கிய, நோயுற்ற மற்றும் முளைத்த விதைகளும் தூயவிதைகளே  ஆகும். உடைந்த விதைகள் அதன் மூலவிதை அளவில் பாதிக்கு மேல் இருந்தால் தூய விதையாக கருதப்படும். 
         
  ஆயினும் அது லெக்யூமினேசே மற்றம் க்ரூஸிபெரே  (Legumninosae and Cruciferae) குடும்பங்களுக்கு உட்படாது. ஏனெனில் அவைகளின் விதை மேலுறை  (Seed Coat) பிரிந்த பின் கசடுகளாக கருதப்படுகின்றன. 
          பிற இரக விதைகள் 
         
  மற்ற பயிர் விதைகள் பிற இரக விதைகள் என்ற  கருதப்படுகின்றது. 
          களை விதை 
         
  விதைச் சட்டத்தின் படி நச்சுக்கள் என்று  வரையறைக்கப்பட்டவையும், களைச்செடிகள் என்று அறியப்பட்டவையும் களை விதைகளாகும். 
          கசடுகள் 
          விதை போன்ற அமைப்பு கொண்டவை, தண்டு பகுதிகள்,  இலைகள், மண், கல், கனி உறை, பூக்காம்பு செதில், உமி, உமிச்சிலம்பு மற்றும் பூக்காம்புகள்  ஆகியவை கசடுகளாகும். 
          விதையைத் தூய்மை செய்யும்  முறை 
         
  விதைகளை சலித்து பின்னர் காற்று மூலம் பதர்  நீக்கும் கருவியில் (Seed blower) செலுத்திய பின் விதைத் தூய்மை பகுப்பாய்வு பலகையில்  (Priority Board) வைக்கவேண்டும். அதன் பின் பிற இரக விதைகள், களை விதைகள் மற்றும் கசடுகளை  அடையாளம் கண்டு பிரித்து அவற்றின் பெயரையும், அளவையும் குறிப்பிடவேண்டும். 
            
            
          கணிப்பு 
         
  நான்கு அங்கங்களையும் தேவைப்பட்ட தசமதான  அளவு எடை போடவேண்டும். ஒவ்வோர் அங்கங்களையும் கீழ்க்காணும் சூத்திரம் மூலம் கணக்கிடவேண்டும். 
                                              ஒவ்வோர்  அங்கத்தின் எடை 
                     அங்கங்களின் சதவீதம்     =                                                      x 100                                  
       அனைத்து அங்கங்களின் கூட்டு எடை 
  மூலவிதைகள் எடைக்கூடியோ, குறைந்தோ காணப்பட்டாலும்,  அனைத்து அங்கங்களின் கூட்டு சதவீத எண் ஒரு சதவீதத்திற்கு மேல் இருந்தாலும் மறு ஆய்வு  மேற்கொள்ளவேண்டும். 
          பிரதி ஆய்வு 
          விதைத் தரத்தின் எல்லைக்கோட்டு அளவு முதல்  ஆய்வின் முடிவுகளுக்கு சமமாக இருக்குமாயின், மேலும் ஒரு பிரதி ஆய்வு நடத்தி இரு ஆய்வு  முடிவுகளின் சராசரியை எடுத்துக்கொள்ளவேண்டும். 
          நிலக்கடலையில் தூய்மை  ஆய்வு 
  நிலக்கடலை காய்களில் ஆய்வு மேற்கொள்ளலாம்.  ஆய்வு மாதிரியின் அளவு 1000 விதைகள் ஆகும். 
          உமியில்லா விதைகள் கணக்கீடு 
         
  சூரியகாந்தி மற்றும் நெல் போன்றவைகளில்  உமியில்லா விதைகள் கணக்கீடு வேண்டும்.  தூயவிதைகளில் 400 விதையிலிருந்து உமியில்லா விதைகளை கணக்கிடவேண்டும். 
                                              உமியில்லா  விதையின் எண்ணிக்கை  
               உமியில்லா விதையின்  சதவீதம்    =                                     x 100 
                                                   400 
          விதை முளைப்புத் திறன்  ஆய்வு 
          முளைப்புத் திறன் ஆய்வுகள் தூய விதைகளில்  இருந்து மேற்கொள்ளவேண்டும். குறைந்தபட்சம் 400 விதைகளில் இருந்து, 4 முறை 100 விதைகள்  எடுப்பதும் அல்லது 8 முறை 50 விதைகள் திரும்ப எடுப்பதும் அல்லது 16 முறை 25 விதைகள்  திரும்ப எடுப்பதும் ஆகும். இவ்வாறு எடுப்பது விதைகளின் அளவு மற்றும் கொள்கலன் அளவைப்  பொருத்தே அமையும். 
         
  இந்த ஆய்வுகள் விதை முளைப்பிற்கு சாதகமான  சூழ்நிலைகளான ஈரப்பதம், தட்பவெப்பநிலை, ஊடகம் மற்றும் ஒளி அளவு போன்றவற்றில் மேற்கொள்ளப்படும்.  விதை முன் நேர்த்தி எதுவும் தேவையில்லை. 
          தேவையான பொருட்கள் 
          ஊடகம் 
         
  ஊடகமானது விதைகளுக்கு தேவையான ஈரப்பதத்தை  வழங்குவதுடன் அவை மேற்பரப்பில் முளைப்பதற்கான சாதகமான சூழலையும் உருவாக்குகிறது. பொதுவாக  உபயோகப்படும் ஊடகங்கள், மணல், விதைகள் முளைப்பதற்குரிய தாள் மற்றும் மண் ஆகும். 
          1. மணல் 
         
  மணல் துகள்கள் பெரியதாகவும் இல்லாமல் மிகச்  சிறியதாகவும் இல்லாமல் இருக்கவேண்டும். மணல் துகள்களாவது 0.80 மிமி சல்லடையில் கடந்து  வருவதாகவும் 0.55 மிமி சல்லடையில் கடக்காமலும் இருக்கவேண்டும். 
          நச்சுத் தன்மை 
          மணலில் எந்தவித நச்சும் நோய் பரப்பும் கிருமிகளும்  இருத்தல் கூடாது. அப்படி ஏதேனும் கண்டறியப்பட்டால் அம்மணலை ஆவியில் வேக வைத்து  (Autoclave) கிருமி நீக்கம் செய்யவேண்டும். 
          முளைக்க வைக்கும் தட்டு 
          மணலை ஊடகமாக உபயோகிக்கும் பொழுது இவ்வகைத்  தட்டுக்கள் பயன்படும். துத்தநாகம் அல்லது எஃகுவினால் செய்யப்பட்ட அத்தட்டுகளின் பொதுவான  அளவு 22.5x22.5x4 செ.மீ ஆகும். 
            
          விதைகளை ஊன்றும் முறைகள் 
          மணலினுள் விதை (ம) 
         
  ஈரமணிலின் மீது விதைகளைத் தூவி பின் அதன்  மேல் 1-2 செ.மீ வரை மணலைத் தூவவேண்டும். 
            
          மணல் மேல் விதைத்தல்  (ம.மே) 
          விதைகளை மணலின் மேற்புறம் வைத்து விதைக்கவேண்டும் 
          இடைவெளி 
          விதைக்கும் போது அனைத்து பக்கங்களிலும்,  நன்கு இடைவெளி கொடுப்பதால் விதைகள் தனித்தும், தடையின்றி நோய் பரவாமல் வளரவும் சாதகமாக  இருக்கும். விதையின் விட்ட அளவில், 1 முதல் 5 முறை பெருக்கி இடைவெளி கணக்கிடப்படவேண்டும். 
          நீர் 
          விதைகளின் அளவைப் பொருத்து மணலிற்கு நீர்  பாய்ச்சும் அளவு கணிக்கப்படும். சோளம் தவிர்த்து மற்ற தானிய வகைகளுக்கு மண்ணின் நீர்ப்பிடிப்பு  திறனில் 50 சதவீதம் நீர்ப்பாய்ச்சவேண்டும். பெரிய விதைக் கொண்ட பயிறு வகைகளுக்கும்  சோளத்திற்கும் நீர் பிடிப்புத்திறனில் 60 சதவிகிதம் நீர்ப்பாய்ச்சவேண்டும். 
           
          தாள் 
           
          பொதுவாக  உபயோகிக்கப்படும் ஊடகங்கள் வடிதாள், உறிஞ்சு தாள் (அ) துவாலை ஆகும். இந்தத் தாள்களுக்கு  நீரை மேல் நோக்கி (30 மிமீ உயரம் / நிமிடம்) உறிஞ்சும் (Capillary Movement) தன்மை  இருக்கவேண்டும். நச்சுத்தன்மை மற்றும் பூஞ்சான் அல்லது பாக்டீரியா கிருமிகள் இல்லாமல்  இருக்கவேண்டும். ஆய்வின் போது ஈரப்பதத்தை காக்கும் தன்மை பெற்றிருக்கவேண்டும். இந்தத்  தாள்களின் நய அமைப்பானது விதைகளில் இருந்து முளைக்கும் செடிகளின் வேர்கள் அவற்றின்  மேலாக வளருமாறு இருக்கவேண்டும். 
          வகைகள் 
              தாள்களில் மேல் விதைத்தல்  (தா.மே.) 
          விதைகளை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஈரப்பதமான  வடிதாள்கள் அல்லது உறிஞ்சுதாள்களின் மீது வைத்துப் பின்னர் அவற்றை கண்ணாடித் தட்டுக்களில்  வைத்து மூடியிட்டு முளைப்பு அறைகளில் வைக்கவேண்டும். முளைப்பிற்கு ஒளி தேவைப்படும்  விதைகளை இம்முறை மூலம் ஆய்வு செய்யலாம். 
            
            
            
           
           
          தாள்களுக்கு இடையில்  (தா.இ.) 
          இரு தாள்களின் இடையில் விதைகளை வைத்துப்பின்  அவற்றை துவாலை போல சுருட்டிக்கொள்ள வேண்டும். இவற்றை முளைப்பதற்கு முளைப்பு அறைகளில்  மேல் நோக்கி வைக்கவேண்டும். 
          
          
            
                | 
                | 
                  | 
             
            
              Germination  paper  | 
               Seeds germinated on paper  | 
              Roll  towel method   | 
             
           
            
          
            
              
                பயிர்  | 
                ஊடகம்  | 
                தட்பவெப்பம்  | 
                முதல் கணக்கெடுப்பு    நாள்  | 
                இறுதி கணக்கெடுப்பு    நாள்  | 
                முன் நேர்த்தி  | 
               
              
                நெல்  | 
                தா.இ, 
                  ம.மே  | 
                20-30  | 
                5  | 
                14  | 
                50 டிகிரி வெப்பத்தில் ஊறவைக்கவும். நைட்ரிக்    அமிலம் 24 மணி நேரம்  | 
               
              
                சோளம்  | 
                தா.இ, 
                  ம  | 
                20-30  | 
                4  | 
                7  | 
                   | 
               
              
                கம்பு  | 
                தா.இ, 
                  ம.மே  | 
                20-30  | 
                3  | 
                7  | 
                பொட்டாசியம் நைட்ரேட் 0.2 சதவிகிதம்    (2-3 மணி நேரம்) குளிர் நிலையில்  | 
               
              
                மக்காச்சோளம்  | 
                தா.மே, 
                  தா.இ  | 
                20-30  | 
                4  | 
                10  | 
                   | 
               
              
                துவரை  | 
                தா.இ, 
                  ம  | 
                20-30  | 
                4  | 
                6  | 
                   | 
               
              
                பச்சைப்பயிறு  | 
                தா.இ, 
                  ம  | 
                20-30  | 
                5  | 
                8  | 
                   | 
               
              
                உளுந்து  | 
                தா.இ, 
                  ம  | 
                30  | 
                4  | 
                7  | 
                   | 
               
              
                சுண்டல்  | 
                தா.இ, 
                  ம  | 
                20-30  | 
                5  | 
                8  | 
                   | 
               
              
                பட்டாணி  | 
                தா.இ, 
                  ம  | 
                20  | 
                5  | 
                8  | 
                   | 
               
              
                தட்டைப்பயிறு  | 
                தா.இ, 
                  ம  | 
                20-30  | 
                5  | 
                8  | 
                   | 
               
              
                ஆமணக்கு  | 
                தா.இ, 
                  ம  | 
                20  | 
                7  | 
                14  | 
                   | 
               
              
                நிலக்கடலை  | 
                தா.இ, 
                  ம  | 
                20-30  | 
                5  | 
                10  | 
                   | 
               
              
                சூரியகாந்தி  | 
                தா.இ, 
                  ம  | 
                20-30  | 
                4  | 
                10  | 
                   | 
               
              
                எள்  | 
                தா.மே  | 
                20-30  | 
                3  | 
                6  | 
                   | 
               
              
                பருத்தி  | 
                தா.இ, 
                  ம  | 
                20-30  | 
                4  | 
                12  | 
                ஓடுகளை எடுக்கவேண்டும்  | 
               
              
                கத்தரி  | 
                தா.மே, 
                  தா.இ  | 
                20-30  | 
                7  | 
                14  | 
                எத்திரல் (25 பிபிஎம்) 48 மணி நேரம்  | 
               
              
                தக்காளி  | 
                தா.மே, 
                  தா.இ  | 
                20-30  | 
                5  | 
                14  | 
                   | 
               
              
                மிளகாய்  | 
                தா.மே, 
                  தா.இ  | 
                20-30  | 
                7  | 
                14  | 
                சுடுநீர் 85 டிகிரி நிமிடம்  | 
               
              
                வெண்டை  | 
                தா.இ, ம  | 
                20-30  | 
                4  | 
                21  | 
                   | 
               
              
                வெங்காயம்  | 
                தா.மே, 
                  தா.இ  | 
                15-20  | 
                6  | 
                21  | 
                KNO3  | 
               
              
                காரட்  | 
                தா.மே, 
                  தா.இ  | 
                20-30  | 
                7  | 
                14  | 
                KNO3  | 
               
              
                முள்ளங்கி  | 
                தா.மே, 
                  தா.இ  | 
                20-30  | 
                4  | 
                10  | 
                குளிர்நிலை  | 
               
              
                காலிபிளவர்  | 
                தா.மே  | 
                20-30  | 
                5  | 
                10  | 
                குளிர்நிலை, KNO3   | 
               
              
                சாம்பல் பூசணி  | 
                ம  | 
                30-35  | 
                5  | 
                14  | 
                   | 
               
              
                பாகல்  | 
                தா.இ, 
                  ம  | 
                20-30  | 
                4  | 
                14  | 
                   | 
               
              
                சுரைக்காய்  | 
                தா.இ,ம  | 
                20-30  | 
                4  | 
                14  | 
                   | 
               
             
           
          முளைக்க வைக்கப்பயன்படும்  கருவிகள் 
          முளைப்பு அறை 
          இந்த அறையில் பல்வேறு பயிர்களுக்கு தேவையான  தட்பவெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்தி விதை முளைப்பை ஏற்படுத்தலாம். 
          பெரிய அளவு முளைப்பு  அறைகள் 
          ஆய்வு செய்பவர் உள்ளே நடந்து செல்லும் வசதி  கொண்ட பெரிய அளவு அறைகள் இவை. இங்கும் மேற்கூறியது போன்று தட்பவெப்பநிலை மற்றும்  ஈரப்பதத்தை கட்டுக்குள் வைக்கலாம். அதிக அளவில் தற்போது பயன்படுத்தப்படுவது இந்தக்  கருவி தான். 
          
            
          விதை எண்ணும் கருவி 
          விதைகளின் எண்ணிக்கை மற்றும் விதைக்கும்  இடைவெளிக்காகப் பயன்படும் கருவி இது. இதில் இரு தட்டுக்கள் இருக்கும். கீழ்தட்டு அசைக்க  முடியாததாகவும் மேல் தட்டு அசையக் கூடியதாகவும் இருக்கும். இரு தட்டுகளிலும் சம எண்  துவாரங்கள் இருக்கும். அதாவது 50/100 விதை மாதிரியை எடுத்து, மேல் தட்டில் வைத்து நகர்த்தும்பொழுது,  தட்டுக்களின் துவாரங்கள் நேர்கோட்டில் அமைந்து விதைகள் ஊடகத்தில் விழுந்து விடும். 
            
          வெற்றிட விதை எண்ணும்  கருவி 
         
  இதில் ஒரு மேல் பகுதியும், குழாய் பகுதியும்  மற்றும் சுவர் போன்ற பகுதியும் இருக்கும். 50 அல்லது 100 துவாரங்கள் கொண்ட தட்டுப்பகுதி  மேல் பகுதியில் இணைந்திருக்கும். வெற்றிடம் ஏற்பட்டால் விதைகள் தட்டில் ஒட்டிக்கொள்ளும்,  வெற்றிடம் காற்று நிரப்பினால் விதைகள் தட்டிலிருந்து ஊடகத்தில் விழுந்துவிடும். 
            
          அச்சுப் பலகை 
          பிளாஸ்டிக் / மரத்தினாலான இந்தப் பலகையில்  50 அல்லது 100 துவாரங்கள் இருக்கும். இதில் குமிழ்கள் சம இடைவெளியில் ஒரே நீள அளவில்  அமைந்திருக்கும். மணலின் மேல் இப்பலகையை வைத்து அச்சு ஏற்படுத்தினால் விதைகளுக்கு விதைக்கத்  தேவையான ஒரு சீரான ஆழமும் இடைவெளியும் கிடைக்கும். 
            
          முளைப்புத்திறன் பரிசோதனை  / ஆய்வு 
          முளைப்புத்திறனை பின்கண்ட  முறைகளில் ஆய்வு செய்யலாம். 
          
            
              - இயல்பான       நாற்றுக்கள்
 
              - இயல்பற்ற       நாற்றுக்கள்
 
              - கடின       விதைகள்
 
              - முளைக்காத       விதைகள்
 
             
           
          முக்கியப் பாகங்களின் வளர்ச்சியைக் கொண்டு  ஐஎஸ்டிஏ மேற்கூறிய வகைகளை நாற்றுக்களில் வகுத்துள்ளது. 
          இயல்பான நாற்றுக்கள் 
          இயல்பான நாற்றுக்கள் என்பவை அதற்கு சாதகமான  சூழ்நிலைகளான மண், நீர், தட்பவெப்பநிலை மற்றும் ஒளியின் தூண்டுதலால் இயல்பான செடிகளாக  வளர்ச்சி பெறுபவை ஆகும். 
          இயல்பான நாற்றுக்களின்  பண்புகள் 
          
              
           
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
          
            
              - நன்கு       வளர்ச்சி பெற்ற ஆதார வேருடன் கூடிய வேர்ப்பகுதி இருக்கவேண்டும். கிராமினே குடும்பத்தைச்       சேர்ந்த பயிர்களில் நடுத்தர வேர் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
 
              - விதையிலை       நிலத்தில் தங்கி முளைக்கும் பயிர்களில், நன்கு வளர்ந்த விதையிலை மேல் தண்டும்,       விதையிலை நிலத்தின் மேல் முளைக்கும் பயிர்களில் நீண்ட வளர்ந்த விதையிலை கீழ்த்தண்டும்  இருக்கவேண்டும்.
 
              - விதையிலைகள்       ஒரு விதையிலைத் தாவரங்களில் ஒன்றும், இரு விதையிலைத் தாவரங்களில் இரண்டும் வளர்ச்சி       பெற்றிருக்கவேண்டும்.
 
              - க்ராமினே       பயிர்களில் நன்கு வளர்ச்சி பெற்ற குருத்து உறை இருக்கவேண்டும்.
 
              - இருவிதையிலைத்       தாவரங்கயின் நன்கு வளர்ந்த முளை குருத்து இருக்கவேண்டும்.
 
              - சிறு       குறைகளுள்ள, கீழ்க்கண்ட நாற்றுக்களும் இயல்பான நாற்றுக்களாக கருதப்படும்.
 
              - ஆதார       வேர் பாதிப்படைந்திருந்தாலும், இடைநிலை வேர் நன்கு வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.       லெக்யூமினேசே (பேசியோலஸ், பட்டாணி, கிராமினே (சோளம்), குக்குர்பிட்டேசே (வெள்ளரி)       மற்றும் மால்வேசியே (பருத்தி).
 
              - முக்கியப்       பாகங்களில் சிறிது வளர்ச்சி குன்றியிருந்தாலும் உணவு  மற்றும் நீர் கடத்தும் திசு நல்ல வளர்ச்சி       பெற்றிருக்கவேண்டும்.
 
              - நாற்றுக்கள்       நோய் தாக்குதலுக்கு ஆளாயிருந்தாலும், கிருமிகளின் இருப்பிடம் மூலவிதைகளிலிருந்து       இருக்கக்கூடாது.
 
             
           
          இயல்பற்ற நாற்றுக்கள் 
         
  சாதகமான சூழ்நிலைகளான மண், நீர், தட்பவெப்பம்  மற்றும் ஒளி அமைந்திருந்தாலும், இவ்வகை நாற்றுக்கள் நன்கு வளர்ச்சியடையாமல் இருக்கும். 
            
            
            
            
            
            
            
            
            
          இயல்பற்ற நாற்களின் வகைகள் 
          
            
              - சிதைந்த       நாற்றுக்கள்
 
              - வளர்ச்சி       குன்றிய நாற்றுக்கள்
 
              - அழுகிய       நாற்றுக்கள
 
             
           
          சிதைந்த நாற்றுக்கள் 
          இவ்வகை நாற்றுக்களில் முக்கியப் பாகங்களில்  ஏதாவது ஒன்று வளர்ச்சி பெறாமலோ அல்லது சிதைந்திருந்தாலோ இயல்பான வளர்ச்சியை பெற்றிருக்காது.  நூற்றுக்கள் விதையிலை இல்லாமலே, உடைந்தோ, பிரிந்தோ, புள்ளிகளுடன் காணப்பட்டாலோ,  ஆதார வேர் இல்லாமலோ இருப்பது இவ்வகையாகும். 
            
          வளர்ச்சி குன்றிய நாற்றுக்கள் 
  இவ்வகை நாற்றின் பாகங்கள் பலவீனமான அல்லது  வளர்ச்சி குன்றிய நிலையில் இருக்கும், அதாவது சுருங்கி வளைந்த அல்லது வளராத முளைக்குருத்து  (அ) குருத்து உறை (அ) விதையின் மேல் தண்டு, தடித்த தண்டுகள், வளராத வேர்கள் போன்றவை. 
            
            
            
            
            
            
            
          அழுகிய நாற்றுக்கள் 
          விதையிலிருந்து பரவிய நோய்த் தாக்குதலால்,  முக்கியப் பாகங்கள் நோய் தாக்கியும், அழுகியும் காணப்படும். 
            
            
          கடின விதைகள் 
          ஆய்வு காலம் முடியும் வரை இவ்வகை விதைகள்  ஈரத்தை உறியாமலே கடினமாக காணப்படும். (எ.கா. லெக்யூமினேசே மற்றும் மால்வேசியே விதைகள்) 
            
          முளைக்காத விதைகள் 
          ஆய்வுக்காலம் முடியும் வரை கடினமில்லாமலும்,  முளைக்காமலும் இருப்பினும், புதிய விதைகள் போல் காணப்படும். 
            
            
          உயிரற்ற விதைகள் 
         
  ஆய்வுக் காலத்தின் முடிவில் விதைகள் கடினமில்லாமல்,  புதியதாகவும் இல்லாமல் நாற்றுக்கள் முளைக்காமல் இருக்கும். இவ்வகை விதைகள் உடையும்  தன்மையுடனும், அவற்றை அழுத்தினால் ஒரு பால் போன்ற பசையும் வெளிவரும் நிலையில் இருக்கும். 
            
          மறு ஆய்வு 
         
  முதல் ஆய்வின் முடிவுகள் திருப்திகரமாக இல்லாவிடில்  அவை வெளியிடப்படாமல் வைத்திருந்து பின்னர் மறுஆய்வு அதே முறையிலோ (அ) வேறு முறையைப்  பின்பற்றியோ கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் நடத்தப்படும். 
          
            
              - திரும்பச்       செய்தல் முறையில் தவறிருந்தால் அதாவது பொறுதியின்மை இருந்தால்
 
              - நாற்றுக்களை       பகுத்தாய்வு செய்வதில் தவறு ஏற்பட்டாலோ அல்லது ஆய்வின் முறைகளில் எண்ணிக்கை தவறுகள்       ஏற்பட்டாலோ கிடைக்கும் தவறான முடிவுகளின் போது
 
              - விதைத்       தூக்கம் (அ) நச்சுத் தாக்குதல் (அ) நோய் தாக்குதல் இருந்தால்
 
             
           
          மறுஆய்வு செய்யப்பட்டு இரண்டு ஆய்வு முடிவுகளின்  சராசரி முடிவு எடுத்துக்கொள்ளப்படும். 
          பொறுதியின்  (Tolerance) பயன்  
         
  வேளாண் புள்ளியியல்படி, ஆய்வின் முடிவுகளில்  திரும்பச் செய்தல் முறையில் அதிக எண்ணிற்கும் குறைந்த எண்ணிற்கும் இடையே பொறுதிக்கு  உட்பட்டு வரவேண்டும். இரு ஆய்வு முடிவுகளுக்கு உள்ள ஒற்றுமையை சரிபார்க்க பொறுதி அட்டவணையை  உபயோகிக்கலாம். 
          ஆய்வு முடிவுகள் வெளியிடுதல் 
         
  முளைப்புத் திறன் ஆய்வின் முடிவுகள், 4  x 100 விதைகள் திரும்பச் செய்யும் முறையின் படி சராசரி கணக்கிடப்படும். இயல்பான நாற்றுக்களின்  சதவீதம் முழு எண்ணாக கணக்கிடப்படும். மற்ற இயல்பற்ற நாற்றுக்கள், கடின விதைகள், முளைக்காத  விதைகள் மற்றும் உயிரற்ற விதைகள் ஆகியவையும் கணக்கிடப்படும். இந்த முடிவுகள் பகுத்தாய்வு  சான்றட்டையில் உரிய இடத்தில் நிரப்பப்படும். ஏதேனும் முடிவுகள் ஒன்றுமில்லாமல் இருந்தால்  அவ்விடத்தில்  ‘0’  என்று நிரப்பவேண்டும். 
          ஈரப்பதம் ஆய்தல் 
          நோக்கம் 
         
  நாள்தோறும் பயன்படக்கூடிய ஈரப்பதம் அறியும்  முறைகளை ஆய்வு செய்தல். 
          வடித்தம் 
         
  விதையை உலர வைத்தபின் கிடைக்கும் குறைந்த  எடையளவு ஈர்பபதம் ஆகும். விதையின் ஆரம்ப எடையின் சதவீதமாக இது கணக்கிடப்படும். விதையின்  தரத்தை நிர்ணயிக்கும் முக்கியக் காரணியாகும் இது. 
          ஈரப்பதம் ஆய்வு முறைகள் 
              வெப்பக் காற்று அடுப்பு 
         
  விதைகளை ஒரு குறிப்பிட்ட வெப்பிநிலையில்,  குறிப்பிட்ட கால நேரம் வைத்து ஈரப்பதத்தை உலர வைப்பது இம்முறை. 
          ஈரமானி 
         
  விதையின் ஈரப்பத்தை கணக்கிடும் கருவி இது.   ஆயினும் மேல் கூறிய முறையைப் போன்று இதனில்  துல்லியமாக கணக்கிட முடியாது. 
          சமர்ப்பிக்கப்படும் மாதிரியின்  எடை 
  அரைக்கும் விதைகள்        -    100 கிராம் 
  அரைக்க வேண்டாத விதைகள்    -       50 கிராம் 
  விதைகளை பாலித்தீன் பைகளில் (700 காஜ்) அடைத்து  அனுப்பவேண்டும்  
          வெப்பக்காற்று அடுப்பு  முறையில் ஈரப்பதம் ஆய்தல் 
          தேவைப்படும் பொருள்கள் 
          அரைவு ஆலை 
         
  ஈரப்பதம் உறியாத பொருளால் கட்டமைப்பு இருக்கவேண்டும்.  இதன் அரைக்கும் தன்மை சமச்சீராகவும் அரைக்கப்படும் பொருளை வெப்பப்படுத்தாலும் இருக்கவேண்டும்.  ஈரப்பதம் அதிக அளவில் குறைக்கும் படி வெப்பக்காற்று இருக்கக்கூடாது. அரைக்கும் தன்மை  மாற்றலுக்குட்பட்டதாக இருக்கவேண்டும். 
            
          கொள்கலன் 
         
  துரு பிடிக்காத பொருளால் செய்திருக்கவேண்டும்.  
  உதாரணம் : கண்ணாடி (அ) எஃகு 
          அடுப்பு 
         
  நல்லமுறையில் இயங்கக்கூடிய மின் அடுப்பும்  அதனை மின் முறை வெப்பநிலை = 1 டிகிரி செ என்ற அளவில் மாற்றக்கூடியதாக இருக்கவேண்டும். 
            
              
          அரைத்தல் 
         
  ஈரப்பதம் ஆய்வு செய்யும் முன் தானிய வகைகள்  மற்றும் பருத்தி போன்ற விதைகளை குறு நயமாக அரைத்தல் வேண்டும். சலித்த விதை 50 சதவிகிதம்  0.5 மிமீ கம்பி வலைச் சல்லடையில் வெளிவரவேண்டும். மேலும் 10 சதவீதம் 1.00 மிமீ சல்லடையில்  வெளிவரவேண்டும். 
         
  பயிறு வகை தாவர விதைகள் பெறுநயமாக அரைத்து  50 சதவிகிதம் 4.0 மிமீ கம்பி வலை சல்லடையில் சலித்து வெளி வரவேண்டும். 
          உலர்த்துதல் 
         
  ஈரப்பதம் 17 சதவிகிதத்திற்கு மேல் உள்ளப்  பயிர்களின் விதைகளை அரைப்பதற்கு முன் உலர்த்துதல் அவசியம். (சோயாபீன்ஸ் 10 சதவீதம்,  நெல் 13 சதவீதம்) இதற்கு 50 கிராம் விதைகளை இரு பகுதிகளாக எடுத்துக்கொண்டு தட்டுக்களில்  130 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 5-10 நிமிடமும், 25 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம்  இருந்தால் 70 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 2-5 மணி நேரமும் உலர்த்தல் வேண்டும். இவ்வாறு  உலர்த்திய விதைகளை உலர்பாண்டத்தில் வைத்து குளிர்விக்க வேண்டும். அதன் பின் 20 கிராம்  எடைக்கொண்ட இரு பிரதிகளாகப் பிரித்து ஈரப்பதம் ஆய்விற்கு உபயோகப்படுத்தலாம். 
          ஈரப்பதம் ஆய்வு 
         
            5-10 கிராம் எடை கொண்ட விதைகளை பிரதிகளாகவோ,  தனித்துவமாகவோ எடுத்து உலர்த்த வேண்டும். அதிகமாக 130 டிகிரி செல்சியஸில் 1 மணி நேரம்  வைக்கலாம். 
  தானியங்கள் 130 டிகிரி செ              -    2  மணி நேரம் 
  சோளம்                              -     130 டிகிரி 4 மணி நேரம் 
  எண்ணெய் வித்துக்கள் 103 டிகிரி செ     -     17  மணி நேரம் 
          
            
              
                பயிர்  | 
                அரைத்தல் கு.ந- குறுநயம்    பெ.ந - பெரு நயம்  | 
                உலர்த்தும் வெப்பநிலை    (செல்சியஸ்)  | 
                உலர வைக்கும் காலம்    (மணி நேரம்)  | 
                அரைக்கும் முன் உலர்த்துதல்    (ஈரப்பதம் சதவிகிதம்)  | 
               
              
                நெல்  | 
                குறுநயம்  | 
                130  | 
                2  | 
                13  | 
               
              
                கேழ்வரகு  | 
                குறுநயம்  | 
                103  | 
                17  | 
                -  | 
               
              
                சோளம்  | 
                குறுநயம்  | 
                130  | 
                4  | 
                17  | 
               
              
                கம்பு  | 
                குறுநயம்  | 
                130  | 
                1  | 
                17  | 
               
              
                மக்காச்சோளம்  | 
                குறுநயம்  | 
                130  | 
                2  | 
                17  | 
               
              
                உளுந்து  | 
                குறுநயம்  | 
                130  | 
                1  | 
                17  | 
               
              
                பச்சைப்பயிறு  | 
                குறுநயம்  | 
                130  | 
                1  | 
                17  | 
               
              
                தட்டைப்பயிறு  | 
                பெருநயம்  | 
                130  | 
                1  | 
                17  | 
               
              
                காஸ்டர்  | 
                பெருநயம்  | 
                130  | 
                17  | 
                17  | 
               
              
                நிலக்கடலை  | 
                பெருநயம்  | 
                130  | 
                17  | 
                17  | 
               
              
                எள்  | 
                -  | 
                103  | 
                17  | 
                -  | 
               
              
                சோயாபீன்ஸ்  | 
                பெருநயம்  | 
                103  | 
                17  | 
                -  | 
               
              
                சூரியகாந்தி  | 
                -  | 
                103  | 
                17  | 
                -  | 
               
              
                பருத்தி 
                  (பருத்தி நீக்கியது)  | 
                குறுநயம்  | 
                103  | 
                17  | 
                -  | 
               
              
                சாம்பல் பூசணி  | 
                பெருநயம்  | 
                130  | 
                1  | 
                17  | 
               
              
                மற்ற பூசணி வகைகள்  | 
                -  | 
                130  | 
                1  | 
                17  | 
               
              
                கத்தரி, மிளகாய்  | 
                -  | 
                103  | 
                17  | 
                -  | 
               
              
                வெண்டை  | 
                பெருநயம்  | 
                130  | 
                17  | 
                -  | 
               
              
                தக்காளி  | 
                -  | 
                130  | 
                17  | 
                -  | 
               
              
                முட்டைக்கோஸ்  | 
                -  | 
                130  | 
                17  | 
                -  | 
               
             
           
          வழிமுறைகள் 
          
            
              - பைகளை       அதன் உறையுடன் எடையிடவேண்டும்.
 
              - சமர்ப்பித்த       மாதிரிகள் நன்கு கலக்கப்பட்டு அதில் இரு பகுதிகளை தேவைக்கேற்ற அளவில் அரைத்தல்       வேண்டும்.
 
              - பின்       அதனை (5 கிராம்) பைகளில் நிரப்பவேண்டும்.
 
              - பைகளை       அதன் உறையை நீக்கிவிட்டு, ஏற்கெனவே தேவையான வெப்பத்திற்கு சூடேற்றப்பட்ட அடுப்பில்       வைக்கவேண்டும்.
 
              - உலர்காலம்       முடிந்தவுடன், பைகளை எடுத்து உறையிடவேண்டும். அதனை உலர்பாண்டத்தில் 30 நிமிடங்கள்       வைக்கவேண்டும்.
 
              - உலர்த்திய       விதை மாதிரியை மீண்டும் எடைபோட்டு ஈரப்பதத்தை பின்வரும் சூத்திரம் வைத்து கணக்கிடவேண்டும்.
 
             
           
          m2 - m3 
               m =                         x 100 
            m2 - m1 
  இங்கு  ,      m =  விதையின் ஈரப்பதம் 
              m1= பையின் வெற்று எடை உறையுடன் 
              m2 = பை மற்றும் விதையின் எடை  உறையுடன் (உலர்த்தும் முன்) 
              m3 = பை மற்றும் விதையின் எடை  உறையுடன் (உலர்த்தும் பின்) 
          இருபகுதிகளாக செய்யப்படும் ஆய்வின் முடிவுகள்  இரண்டும் 0.2 சதவிகிதத்திற்குள் வித்தியாசப்படாமல் இருக்கவேண்டும். இல்லையெனில் மறு  ஆய்வு செய்யவேண்டும். 
          
           
                                    S1      x S2             x 100 
              m  =                  
              S1 + S2  
                                       
           
            அரைக்கும் முன் உலர்த்தியிருந்தால்,  ஈரப்பதமானது முதல் முறை உலர்த்தும்  போது இருந்த  ஈரப்பதம் (S1), அரைத்தபின் இரண்டாம் முறை உலர்த்திய ஈரப்பதம் (S2),  என்பதை  கணக்கிட்டு , விதையின் இறுதி ஈரப்பதத்தை,  பின்வரும் சூத்திரம் கொண்டு கணக்கிடவேண்டும். 
              
            
                       
            
           
                       
          ஈரமானி : யுனிவர்சல் டிஜிட்டல் ஈரமானி 
            
            
            
            
            
            
            
            
           
         
   
          இந்தக் கருவியானது, ஈரவிதைகள் திறனுள்ள மின்கடத்தியாகவும்,  உலர் விதைகள் திறனற்ற மின்கடத்தியாகவும் செயல்படும் என்ற கோட்பாட்டின் படி இயங்குகிறது.  விதையின் மின்கடத்தும் திறன் ஈரப்பதத்துடன் நேரிடை விகிகதமாக சமன்பட்டுள்ளது, 
         
  இந்தக் கருவியில் விதைகள் முன் தீர்மானித்த  அடர்த்தியின் அளவிற்கு அழுத்தும் பகுதியில் அழுத்தப்படும். அடர்த்தியின் அளவு நீளவாகு  மற்றும் வட்டவடிவ அளவு கோலில் பதிவு செய்யப்படும். விதைகளை் ஆய்வுக்கான குவளையில்  பதிவு செய்யப்பட்டு அழுத்தப்படும். அழுத்தானை அழுத்தினால் அளவுகளின் அளவு திரையில்  பதிவு செய்யப்படும்.  வெப்பநிலை அளவுகளின் பதிவு  இந்தக் கருவியில் தேவையில்லை. கணினி மூலம் செயல்படும் ஈரமானியில் தானாகவே வெப்பநிலைக்கு  பதிவு செய்து கொள்ளலாம். 
          விதைகளின் ஈரப்பதம் தரக்கட்டுப்பாடு 
          
            
              
                பயிர்  | 
                ஆதாரவிதை  | 
                சான்று விதை  | 
               
              
                   | 
                வெளிப்புற சேமிப்பு  | 
                காற்று உட்புகாத சேமிப்பு  | 
                வெளிப்புற சேமிப்பு  | 
                காற்று உட்புகாத சேமிப்பு  | 
               
              
                நெல்  | 
                13.0  | 
                8.0  | 
                13.0  | 
                8.0  | 
               
              
                சோளம்  | 
                12.0  | 
                8.0  | 
                12.0  | 
                8.0  | 
               
              
                மக்காச்சோளம் 
                  (கம்பு, கேழ்வரகு)  | 
                12.0  | 
                8.0  | 
                12.0  | 
                8.0  | 
               
              
                உளுந்து  | 
                9.0  | 
                8.0  | 
                9.0  | 
                8.0  | 
               
              
                நிலக்கடலை  | 
                9.0  | 
                5.0  | 
                9.0  | 
                5.0  | 
               
              
                எள்  | 
                9.0  | 
                5.0  | 
                9.0  | 
                5.0  | 
               
              
                சோயாபீன்ஸ்  | 
                12.0  | 
                7.0  | 
                12.0  | 
                7.0  | 
               
              
                சூரியகாந்தி   | 
                9.0  | 
                7.0  | 
                9.0  | 
                7.0  | 
               
              
                ஆமணக்கு  | 
                8.0  | 
                5.0  | 
                8.0  | 
                5.0  | 
               
              
                பருத்தி  | 
                10.0  | 
                6.0  | 
                10.0  | 
                6.0  | 
               
              
                பூசணி வகைகள்  | 
                7.0  | 
                6.0  | 
                7.0  | 
                6.0  | 
               
              
                கத்தரி, மிளகாய்  | 
                8.0  | 
                6.0  | 
                8.0  | 
                6.0  | 
               
              
                வெண்டை  | 
                10.0  | 
                8.0  | 
                10.0  | 
                8.0  | 
               
              
                தக்காளி  | 
                8.0  | 
                6.0  | 
                8.0  | 
                6.0  | 
               
              
                முட்டைக்கோஸ் 
                  காலிபிளவர்  | 
                7.0  | 
                5.0  | 
                7.0  | 
                5.0  | 
               
              
                வெங்காயம்  | 
                8.0  | 
                6.0  | 
                8.0  | 
                6.0  | 
               
              
                கேரட்  | 
                8.0  | 
                7.0  | 
                8.0  | 
                7.0  | 
               
              
                பீட்ரூட்  | 
                9.0  | 
                8.0  | 
                9.0  | 
                8.0  | 
               
              
                முள்ளங்கி  | 
                6.0  | 
                5.0  | 
                6.0  | 
                5.0  | 
               
             
           
          விதை ஆய்வு 
         
  விதைஆய்வுக்கூடங்களில் மூன்று வகையாக விதை  மாதிரிகள் அனுப்பப்படுகின்றன. 
          சான்று மாதிரிகள் 
         
  உற்பத்தியாளர்கள் சான்றிதழ் பெறும் நோக்குடன்  அனுப்பும் விதை மாதிரிக்கு ரூ. 20 / மாதிரி வசூலிக்கப்படும். சான்றிதழ் அதிகாரிகள்  உதவி இயக்குநர் (விதைச் சான்றிதழ்) மையங்களுக்கு இவை அனுப்பிவைக்கப்படும். அங்கு விதைகளுக்கு  இரகசிய குறியீட்டு எண் வழங்கப்படும். ஆய்வு   முடிவுகள் வெளியான பின்னர், குறியீடு எண் மாற்றப்பட்டு விதை உற்பத்தியாளர்களுக்கு  மேற்கொண்டு சான்றிதழ் பெறத் தேவையான ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்படும். 
          அலுவலக  மாதிரிகள்     
         
  விதைத் தரக்கட்டுப்பாட்டிற்காக அரசாங்கத்தினால்  அனுப்பி வைக்கப்படுவது இது. விதை ஆய்வாளர்கள் விதைத் தரக்கட்டுப்பாட்டு சட்டம் கூறியபடி  விதைகள் கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து விவசாயிகளுக்கு தரமான விதை கிடைக்க வழி வகுக்கின்றனர். 
          சேவை மாதிரிகள் 
         
  விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்  அவர்  தம் விதைகளின் தரம் பற்றி அறிந்து கொள்ள  ஒரு விதை மாதிரிக்கு ரூ. 30 செலுத்தி ஆய்வு செய்து கொள்வர். விதையின் உரிமையாளர்களே  விதை ஆய்வு மைங்களுக்கு நேரிடையாக அனுப்பலாம். 
         
  விதைகள் கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள்  விதை ஆய்வு மையங்கள் அந்தந்த நபர்களுக்கு ஆய்வு முடிவுகளை தெரிவிக்கவேண்டும். விவசாயிகள்  உட்பட எந்த நபரும் அவர் தம் விதை மாதிரியை சான்றிதழ் பெறவோ, விற்கும் முன்னரோ, விதைக்கும்  மாதிரியை சான்றிதழ் பெறவோ அனுப்பி ஆய்வு செய்து கொள்ளலாம்.  |