வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்தி  தொழில்நுட்பங்கள் 
      முகவுரை 
      தானிய பயிர்களில் மிக  முக்கி பயிராக நெல் கருதப்படுகிறது.   தென்கிழக்கு நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு இது ஒரு நிலையான உணவுப்  பயிராகும்.  உலக மக்கள் தொகையில் 50  சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அரிசியை உணவாக உண்ணும் பழக்கத்தைக்  கொண்டுள்ளனர்.  பொதுவாக 92 சதவீத ஆசிய  மக்கள் 90 சதவீத உலக ஆசிய அரிசியை உட்கொள்கின்றனர்.  நமது நாட்டில் தற்பொழுது 42.3 மில்லியன் ஹெக்டர்  நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  தானியங்களில் தற்பொழுது நெல் மொத்த பரப்பில்  22 சதவீத நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு சுமார் 31 சதவீதம் உற்பத்தி  செய்யப்படுகின்றது.  ஆனால் மற்றநாடுகளை  குறிப்பாக பரப்பளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள சீனாவுடன் ஒப்பிடும் போது அதிக  உற்பத்தி திறன் கொண்ட நெல் இரகங்கள் இருந்த போதிலும், இந்தியாவின் உற்பத்தி  திறன் மிக மிகக் குறைவு.  மேலும்  உற்பத்தித் திறனை பெருக்க கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம்தான் வீரிய ஒட்டு நெல்  தொழில்நுட்பம் ஆகும்.  வீரிய ஒட்டு நெல்  உற்பத்தியில் சீனா அதிக அளவு வெற்றியை வீரிய ஒட்டுநெல் தொழில்நுட்பம் மூலமாக  அடைந்துள்ளது. 
          
  உயர் விளைச்சல்  இரகங்களைப் போல் அல்லாமல், வீரிய ஒட்டு நெல் சாகுபடிக்கு ஒவ்வொரு முறையும் முதல்  சந்ததி வீரிய ஒட்டு நெல்லையே விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும். 
      வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்தி முறை 
          
  வீரிய ஒட்டு நெல்  என்பது இரண்டு வகையான நெல் இரகங்களை இயற்கையாக ஒட்டு சேர்த்து அதிலிருந்து  கிடைக்கும் முதல் சந்ததி நெல் விதையாகும்.   வீரிய ஒட்டு நெல் பயிர் செய்யும் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் இந்த முதல்  சந்ததி வீரிய ஒட்டு விதை நெல்லையே விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.  
      தமிழ்நாடு வேளாண்மை  பல்கழைக்கழகம் கோ ஆர் எச் 3 எனும் வீரிய ஒட்டு நெல் இரகத்தினை 2006 ம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.  விரைவில் முதிர்ச்சியடையும் இரகமான கோ ஆர் எச் 3 வீரிய ஒட்டு நெல்லை விதை  உற்பத்தி செய்ய பெண் இரகமான டிஎன்ஏயுசிஎம்எஸ்2ஏ மற்றும் சிபிஆர்87 என்ற ஆண் இரகமும்  ஒட்டு சேர்க்கப்படுகின்றது. 
      தரமான விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் 
      அதிக முளைப்புத்திறன்  மற்றும் வீரியமுள்ள விதைகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதே தரமான விதை  உற்பத்தியின் முக்கிய நோக்கமாகும். டிஎன்ஏயுசிஎம்எஸ்2ஏ என்ற பெண் இரகத்தை (ஆண்  மலடு), சிபிஆர்87 என்ற ஆண் இரகத்துடன் கலப்பினம் செய்து கிடைக்கும் முதல் தலைமுறை  வீரிய ஒட்டு நெல் இரகம் கோ ஆர் எச் 3 ஆகும்.  
      வயல் தேர்வு 
          
  வளமான, நன்கு  சமப்படுத்தப்பட்ட, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் வசதிகள் கொண்ட வயல் வீரிய ஒட்டு  நெல் உற்பத்திக்கு ஏற்றதாகும்.  வேண்ழய  கசூரிய ஒளியம், நல்ல காற்றோட்டடமும் இருத்தல் வேண்டும்.  முன் பருவத்தில் நெல் பயிரிடப்படாத நிலமாகத்  தேர்ந்தெடுக்க வேண்டும். 
      பயிர் விலகு தூரம் 
          
  இதர சாதாரண நெல்  இரகங்கள் உற்பத்தியைப் போலல்லாமல் வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்தி செய்யும் வயல்,  பிற நெல் இரகங்கள் பயிர் செய்யும் வயல்களிலிருந்து குறைந்த தூர இடைவெளியோ, கால  இடைவெளியோ அல்லது தடுப்பு இடைவெளியோ கொண்டு இருத்தல் வேண்டும்.  அப்போது தான் இனக்கலப்பில்லாது தூய்மையான  விதைகளை உற்பத்தி செய்ய இயலும். 
          
  வீரிய ஒட்டு நெல் விதை  உற்பத்தி செய்யும் வயல் (ஏ x ஆர்) மற்ற நெல் இரகங்கள் பயிர் செய்யும் வயல்களிலிருந்து  குறைந்தது 100 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். தூர இடைவெளி  கொடுக்கப்படாவிட்டால் கால இடைவெளி குறைந்தது 25 நாட்கள் கொடுத்தல்  வேண்டும்.  அருகில் பயிர் செய்யப்பட்டுள்ள  மற்ற நெல் இரகங்கள் வீரிய ஒட்டு இரக விதை உற்பத்தியில் உபயோகப்படுத்தும் பெண்இரகத்தினை  விட குறைந்தது 25 நாட்கள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ பூக்க வேண்டும்.  அதற்கு தகுந்தாற் போல் ஆண், பெண் இரக விதைகளை  விதைக்க  வேண்டும். 
          
  வீரிய ஒட்டு நெல்  உற்பத்தி செய்யும் வயல்கள் இதர நெல் இரகங்கள் பயிர் செய்யும் வயல்களிலிருந்து  அடர்ந்த மரங்கள். குன்றுகள் அல்லது மக்காச்சோளம், கரும்பு, அகத்தி போன்ற உயரமாக  வளரக்கூடிய பயிர்களால் தடுப்புச் சுவர் போன்ற அமைப்பால் பிரிக்கப்பட்டால் 30  மீட்டர் இடைவெளி போதுமானது.  2 மீட்டர்  உயரம் கொண்ட பாலித்தீன் தடுப்பு மிகவும் உகந்ததாகும். 
      ஏற்ற பருவம் 
          
  வீரிய ஒட்டு நெல் விதை  மகசூல், பயிர் செய்யும் பருவத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. தமிழ்நாட்டில் கார்,  குறுவை (காரீப்) - மே-ஜ¤ன் விதைப்பு மற்றும் நவரை (இராபி) - டிசம்ர்-ஜனவரி  விதைப்பு பருவங்கள் வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்திக்கு ஏற்ற பருவங்களாக  கண்டறியப்பட்டுள்ளன.   
      ஆண், பெண் விதைகளின் விதைப்பு 
          
  ஆண் மலட்டுத்  தன்மையுடைய பெண் பயிரில் (ஏ இரகம்) விதைப் பிடிப்பானது, அயல் மகரந்தச் சேர்க்கை  எந்த அளவிற்கு நடைபெறுகிறதோ அதைப் பொறுத்ததாகும்.  இதற்கு வேறுபட்ட வயதுடைய ஆண் மற்றும் பெண்  இரகங்கள் ஒரே சமயத்தில் பூக்கும் பருவத்தை அடைய செய்ய வேண்டும்.  மேலும் பெண் பயிரில் பூக்கும் காலம் 8-12  நாட்களும், ஆண் பயிரில் 6-7 நாட்களும் உள்ளபடியால், பெண்பயிர், பூக்கும்  பருவத்தில் இருக்கும் காலம் முழுவதும் மகரந்தம் கிடைக்கப் பெற ஆண் பயிரை 3-4  நாட்கள் இடைவெளியில் 2-3 முறை விதைப்புச் செய்ய வேண்டும். 
      விதை அளவு 
          
  ஒரு ஏக்கர்  நிலப்பரப்பில் கோஆர்எச் 3 வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்தி செய்ய 8 கிலோ பெண் இரக  விதைகளும். 4 கிலோ ஆண் இரக விதைகளும் தேவைப்படும்.  எட்டு கிலோ பெண் இரக விதைகளை ஒரு ஏக்கருக்கு 8  சென்ட் நாற்றங்கால் பரப்பிலும் ஆண் இரகம் 4 கிலோ விதையை 4 சென்ட் நாற்றாங்கால்  பரப்பிலும் தனித்தனி நாற்றங்கால் அமைத்து ஒரு சென்ட் பரப்பிற்கு ஒரு கிலோ விதை  என்ற அளவில் விதைக்க வேண்டும். 
      ஆண் இரக விதையை  (4 கிலோ) ஒரு கிலோ, இரண்டு கிலோ மற்றும் ஒரு கிலோ என மூன்று பாகங்களாக  பிரித்துக்கொள்ள வேண்டும். 
      விதைப்பு இடைவெளி 
      
        
          - ஆண்  இரக விதை நெல் முதல் பாகத்தை (1 கிலோ) முதல் நாளில் விதைக்க வேண்டும் (முதல்  விதைப்பு - M1)
 
          - ஆண்  இரக விதை நெல் இரண்டாம் பாகம் 2 கிலோவையும் பெண் இரக விதை நெல் 8 கிலோவையும்  முதல் விதைப்பு விதைத்த 4-வது நாளில் தனித்தனி நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.  (இரண்டாம் விதைப்பு - M2) 
 
          - ஆண்  இரக விதை நெல் மூன்றாம் பாகம் ஒரு கிலோவை இரண்டாம் விதைப்பு விதைத்த 4-வது நாள்  விதைக்க வேண்டும். (மூன்றாம் விதைப்பு - M3) 
 
         
       
      குறிப்பு 
      
        
          - வீரிய  ஒட்டு நெல் விதை உற்பத்தி மேற்கொள்ளப்படும் இடங்களின் தட்பவெப்பநிலைக்குத்  தகுந்தபடி, ஆண், பெண் இரகங்களின் விதைப்பு இடைவெளி சிறிது வேறுபடும்.
 
          - எனவே,  காரீப் மற்றும் ராபி பருவத்திற்கு ஆண், பெண் விதைப்பு இடைவெளியில் வேறுபாடுகள்  செய்யப்பட வேண்டும்.
 
          - பொதுவாக  ராபி பருவத்தில் ஆண் இரகத்தை ஒரிரு நாட்கள் தாமதமாக விதைக்க வேண்டும்.
 
         
       
      நாற்றங்கால் பராமரிப்பு 
      ஆண் மற்றும்  பெண் இரகங்களை தனித்தனி பாத்திகளில் விதைக்க வேண்டும். ஒரு சென்டுக்கு 1-1.5 கிலோ விதை என்ற  அளவில் பரவலாக விதைப்பு செய்தால் பருமனான, வளமான நாற்றுக்கள் கிடைக்கும்.  வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்தியில் இளம்  வயதிலேயே நடவு செய்யக் கூடிய வகையில் வீரியமான நாற்றுக்களை உற்பத்தி செய்ய  வேண்டும். சென்ட்  ஒன்றுக்கு இரண்டு கிலோ என்ற விகிதத்தில் டி.எ.பி உரத்தை விதைப்பதற்கு முன்னால் இட  வேண்டும். சென்ட்  ஒன்றுக்கு 800 கிராம் யூரியா என்ற அளவில் மேல் உரமாக விதைத்த 7 வது மற்றும் 14ம்  நாட்களில் இட வேண்டும். ஆண்,  பெண் இரகங்களின் வயதிற்கேற்ப நாற்றுக்களை 18 முதல் 21 நாட்களில் நடவு செய்ய  வேண்டும். ஆண் மற்றும்  பெண் இரகங்களின் வயது வேறுபாடுகளுக்கேற்ப விதைகளை மேற்கூறிய படி வெவ்வேறு  நாட்களில் விதைக்க வேண்டும்.  அப்போதுதான்  அவற்றின் பூக்கும் பருவம் ஒரே சமயத்தில் நிகழும். 
      வரிசை விகிதம் மற்றும் நடவு முறை 
      வீரிய ஒட்டு நெல் விதை  உற்பத்தியில் ஆண் மற்றும் பெண் இரகங்களை வரிசை வரிசையாக ஒரு குறிப்பிட்ட  விகிதத்தில் நடுதல் வேண்டும்.  பொதுவாக  ஆண் வரிசைகள் குறைவாகவும் பெண் வரிசைகள் அதிகமாவும் அதாவது, 2 ஆண் வரிசைகள்: 8  பெண் வரிசைகள் இருக்கும் படி நட வேண்டும். 
      ஆண், பெண் இரகங்களின்  வயதிற்கு ஏற்ப நாற்றுக்களை குறித்த தருணத்தில் நடவு செய்ய வேண்டும்.  வயது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ நட்டால்  இவற்றின் பூக்கும் பருவம் ஒருமித்து வராமல் விதைப் பிடிப்பு பாதிக்கப்படும். 
      கோஆர்எச் 3 வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்தியில்  நடவு முறை 
      
        
            
              நாற்றின் வயது  | 
              :  | 
              18-21 நாள்  | 
             
            
              பெண் மற்றும்    ஆண்வரிசை எண்ணிக்கை  | 
              :  | 
              8 : 2  | 
             
            
              பெண் (ஏ) இரகத்தில்    ஒரு குத்துக்கு நாற்றுக்களின் எண்ணிக்கை  | 
              :  | 
              ஒன்று  
                (2-3 தூர் உடைய    நாற்று)  | 
             
            
              ஆண் (ஆர்) இரகத்தில்    ஒரு குத்துக்கு நாற்றுக்களின் எண்ணிக்கை  | 
              :  | 
              2-3 நாற்றுகள்  | 
             
            
              பெண் (ஏ) இரகத்தின்    நடவு இடைவெளி  | 
              :  | 
              10 x 15 செ.மீ  | 
             
            
              ஆண் (ஆர்) இரகத்தின்    நடவு இடைவெளி  | 
              :  | 
              30 x 15 செ.மீ  | 
             
            
              ஆண் (ஆர்) மற்றும்    பெண் (ஏ) இரகத்திற்கிடையே இடைவெளி  | 
              :  | 
              20 செ.மீ  | 
             
               
       
      நாற்றுப் பறிப்பு மற்றும் நடவு முறை 
      முதலில் ஆண் இரக முதல்  விதைப்பு நாற்றுக்கள் முழுவதையும் ஆண் இரக இரண்டாம் விதைப்பு நாற்றுக்களின் பாதி  அளவையும் பறிக்க வேண்டும்.  பெண் இரக  நாற்றுக்களை நடவுக்குத் தகுந்தபடி பறித்துக் கொள்ள வேண்டும். 
      
        
          - முதல்  விதைப்பு ஆண் நாற்றுக்களை முதல் வரிசையிலும் இரண்டாம் விதைப்பு ஆண் நாற்றுக்களை  இரண்டாம் வரிசையிலும் 30 செ.மீ இடைவெளி விட்டு முதல் நடவு செய்ய வேண்டும்.
 
          - பிறகு  பெண் இரக நாற்றுக்களை வரிசைக்கு வரிசை 10 செ.மீ மற்றும் நாற்றுக்கு நாற்று 15  செ.மீ இடைவெளியிலும் எட்டு வரிசைகள் நடவு செய்ய வேண்டும்.
 
         
       
      பெண் இரக நாற்றுக்கள்  நடவு செய்த 3-4 நாட்கள் கழித்து இரண்டாம் விதைப்பில் மீதமுள்ள ஆண் இரக  நாற்றுக்களையும் மூன்றாம் விதைப்பு ஆண் இரக நாற்றுக்களையும் பறிக்க வேண்டும்.   
      
        
          - இரண்டாம்  விதைப்பு ஆண் நாற்றுக்களை முதல் வரிசை ஆண் இரக வரிசையில் 15 செ.மீ. இடைவெளியிலும்  மூன்றாவது விதைப்பு ஆண் இரக நாற்றுக்களை இரண்டாவது வரிசையில் 15 செ.மீ.  இடைவெளியலும் இரண்டு நாற்றுக்களுக்கு இடையில் நடவு செய்ய வேண்டும்.
 
          - நடவு வயலுக்கு இரசாயன மற்றும் தொழு  உரம் இடுதல்
 
         
       
        
      
        
            
              இரசாயன / தொழு உரம்  | 
              தொழு உரம் மற்றும் இரசாயன உர அளவு (கிலோ    ஏக்கர்)  | 
             
            
              தொழு உரம் 
                (கிலோ)  | 
              யூரியா  
                (கிலோ)  | 
              சூப்பர் பாஸ்பேட் (கிலோ)  | 
              மூரியேட் ஆப் பொட்டாஷ் (கிலோ)  | 
             
            
              அடியுரம்  | 
              5000  | 
              -  | 
              150  | 
              -  | 
             
            
              முதல் மேலுரம் தூர்    உருவாகும் பருவத்தில்  | 
              -  | 
              44  | 
              -  | 
              13  | 
             
            
              2-வது மேலும் தூர்    கட்டும் பருவத்தில்  | 
              -  | 
              44  | 
              -  | 
              13  | 
             
            
              3-வது மேலுரம் கதிர்    உருவாகும் பருவத்தில்  | 
              -  | 
              22  | 
              -  | 
              7  | 
             
            
              4-வது மேலுரம்  பூக்கும் தருணத்தில்  | 
              -  | 
              22  | 
              -  | 
              7  | 
             
               
       
      கலவன் அகற்றுதல் 
          
  தரமான விதை உற்பத்தி  செய்வதற்கு ஆண் மற்றும் பெண் இரகங்களின் இடையே காணப்படும் பிற நெல் இரகங்களைப்  பிடுங்கிக் களைதல் வேண்டும்.  இவற்றைக்  கலவன் அகற்றுதல் என்று அழைக்கிறோம்.   கலவன் அகற்றுதலை பயிரின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் அதாவது தூர் கட்டும்  பருவம், பூக்கும் பருவம் மற்றும் அறுவடைக்கு முன்பு ஆகிய காலங்களில் செய்தல்  வேண்டும். 
          
  தூர் கட்டும்  பருவத்திலிருந்து அறுவடை செய்வது வரை ஆண் மற்றும் பெண் இரகங்களிலிருந்து வேறுபட்ட  இரகங்களை அகற்றி விட வேண்டும்.  இதனால்  மரபுத் தூய்மையான வீரிய ஒட்டு நெல் விதைகள் கிடைக்கும்.  கலவன்களை அவற்றின் வித்தியாசமான தோற்றத்தில்  இருந்தும் இதர பண்புகளில் இருந்தும் விதைப் பயிர் வயலிலிருந்து கண்டுபிடித்து  நீக்குதல் வேண்டும்.  ஆண் பெண் இரகங்களைக்  காட்டிலும் மிக உயரமாகவோ அல்லது குட்டையாகவோ காணப்படும் பயிர்களையும் அகற்ற  வேண்டும்.  இலை உறையின் நிறம், பூவின்  நிறம், நெல் மணிகளின் அளவு மற்றும் மீசை நெல் வகைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு  கலவன் அகற்ற வேண்டும்.  பெண் பயிரில்  மலட்டுத் தன்மை உடையதால் மகரந்தப்பை ஆண் பயிரின் மகரந்தப்பை போல் பருத்து மஞ்சள்  நிற மகரந்தப் பொடியுடன் காணப்பட்டால் அத்தகைய பயிர்களை அவ்வப்போது பார்த்து  தினமும் காலையில் பூ பூப்பதற்கு முன்பே அகற்றி விட வேண்டும். 
          
  பெண் வரிசைகளில் அதிக  பட்சமாக சுமார் 70 சதவீதம் விதை பிடிக்க வாய்ப்புள்ளது.  அதற்கு அதிகமாக (70 சதவீதத்திற்கு மேல்) விதைப்பிடிப்பு  இருப்பின் அப்பயிர்களை நன்கு பரிசோதித்து தேவைப்படின் அகற்றி விட வேண்டும். 
      ஜிப்ரலிக் அமிலம் தெளித்தல் 
          
  பொதுவாக பெண்  வரிசைகளின் கதிர், கண்ணாடி இலை உறையை விட்டு முற்றிலுமாக வெளி வருவதில்லை.  கதிர் முற்றிலுமாக இலை உறையை விட்டு வெளி வர  ஒரு ஏக்கருக்கு பரிந்துரைக்கப்படும் அளவான 30 கிராம் ஜிப்ரலிக் அமிலத்தை 18  மற்றும் 12 கிராம் என்ற அளவில் பிரித்து இரண்டு முறை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க  வேண்டும்.(ஏக்கருக்கு அதிகபட்சம் 60 கிராம் வரை ஜிப்ரலிக் அமிலம் தெளிக்கலாம்) 
          
  ஜிப்ரலிக் அமிலத்தை  முதலில் 1 கிராமிற்கு 10 மில்லி வீதம் எரிசாராயத்தில் நன்கு கரைத்த பின்பு  தண்ணீரில் கலக்க வேண்டும்.  பெண்  வரிசைகளில் சுமார் 20 சதம் பூக்கும் பருவத்தில், முதல் நாளில் ஏக்கருக்கு 18  கிராம் ஜிப்ரலிக் அமிலத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் மூலம்  தெளிக்க வேண்டும்.  அடுத்தநாள் 12 கிராம்  ஜிப்ரலிக் அமிலத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் மூலம் தெளிக்க  வேண்டும். 
          
  காலை 8 மணி முதல் 10  மணி வரை அல்லது மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஜிப்ரலிக் அமில கரைசலை தெளிப்பது  உகந்ததாகும்.  காலை வேளையில் ஜிப்ரலிக்  அமிலம் தெளிப்பது முற்றிலுமாக கதிரை கதிர் உறையிலிருந்து வெளிக் கொண்டுவரும்  என்று கண்டறியப்பட்டுள்ளது. 
      மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தல் 
          
  சாதாரணமாக பெண்  வரிசைகளில் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் குறைந்த அளவே விதைப் பிடிப்பு  காணப்படுகிறது.  இதனை அதிகரிக்க 20 சதம் பூ  வெளிவந்த பின்பு 10 நாட்கள் வரை கயிறு இழுத்தோ அல்லது குச்சி  கொண்டு ஆண் இரகத்தை அசைத்தோ மகரந்த  சேர்க்கையை ஊக்குவிக்கலாம்.  இது போல  கயிறு இழுப்பது, குச்சி கொண்டு அசைப்பதை ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை 30 நிமிட  இடைவெளியில் காலை 10 மணி முதல் 12 வரை செய்தல் வேண்டும். 
          
  ஜிப்ரலிக் அமிலம்  தெளிப்பதாலும், மகரந்த சேர்க்கையை ஊக்குவிப்பதாலும் பெண் பயிரில் விதைப் பிடிப்பை  40 முதல் 60 சதம் வரை அதிகரிக்க முடியும். 
      பூக்கும் காலத்தை  ஒருங்கிணைத்தல் 
          
  கதிரின் முதல் மூன்று பூ அரும்பு வளர்ச்சி நிலைகளை ஆராயும் போது ஆண்  மற்றும் பெண் இரகங்கள் ஒரே சமயத்தில் பூக்காது என்று கண்டறியப்பட்டால், வேகமாக  வளர்ந்து விட்ட ரகத்திற்கு 2 சதம் யூரியா கரைசலை தெளித்தும், தாமதமாக வளரும்  இரகத்திற்கு 2 சதம் டிஏபி கரைசலை 2-3 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால்  4-5 நாட்கள் வரையுள்ள வேறுபாட்டினை ஈடுகட்டி ஆண் பெண் பயிர்களை ஒரே சமயத்தில்  பூக்கச் செய்ய இயலும். 
  மேலும் முதல் மூன்று பூ அரும்பு நிலைகளுக்குப் பின்னர் வரும் நிலைகளில்  வேறுபாடு தெரிய வந்தால் விதை உற்பத்தி வயலில் பாசன நீரை வடித்தோ அல்லது அதிகமாக  தேக்கி வைத்தோ 3 முதல் 4 நாட்கள் வரையுள்ள வேறுபாட்டினை சரிசெய்யலாம்.  ஆண் இரக செடிகளை பெண் இரகத்தை விட  நீர்ப்பாசனத்தைப் பொறுத்து பூக்கும் பருவத்தை மாற்றி அமைக்கலாம்.  பாசன நீரை வடிப்பதன் மூலம் ஆண் இரகத்தின்  பூக்கும் பருவத்தை 2-3 நாட்கள் தாமதிக்கலாம்.   மாறாக, நீரை வயலில் தேக்கி வைப்பதன் மூலம் ஆண் இரகத்தினை துரிதமாக  பூக்கும்படி செய்யலாம். 
          
  பூக்கும் தருணத்தில் 7-8 நாட்களுக்கு மேல் வேறுபாடு காணப்பட்டால்  ஒருங்கிணைப்பு செய்வது கடினம்.   இருப்பினும் முன்னதாக பூக்கும் இரகத்தில் முதலில் வெளிவரும் கதிர்களை  பிடுங்கி எடுத்து விட்டு, தழைச் சத்தினை இட்டு பின்னர் வரும் தூர்களில் ஓரளவு  கதிர் சீராக வளருமாறு செய்யலாம். 
      அறுவடை 
      
        
          - ஆண் மற்றும் பெண் இரகங்கள்  அறுவடையின் போது ஒன்றோடொன்று கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
          - முதலில் ஆண் இரக வரிசைகளை அவற்றின்  சரியான முதிர்ச்சி நிலையில் அறுவடை செய்து வயலிலிருந்து வெளியே எடுத்து விட  வேண்டும்.
 
          - பெண் வரிசைகளில் விடுபட்ட கலவன்கள்  இருப்பின் அதை அகற்றி விட்டு பின் பெண் இரக வரிசைகளை தனியாக அறுவடை செய்து நன்கு  சுத்தம் செய்யப்பட்ட களத்தில் அடிக்க வேண்டும்.  
 
          - மரக்கட்டைகளின் மேல் கையால் அடித்து  நெல் மணிகளைப் பிரித்தெடுப்பது சிறந்ததாகும்.   கதிர் அடிக்கும் எந்திரத்தையும் கவனமாக பயன்படுத்தி விதையைப்  பிரித்தெடுக்கலாம்.
 
          - கதிர் அடித்த பின் விதைகளின்  ஈரப்பதம் சுமார் 12 சதம் வரும் வரை உலர வைக்க வேண்டும்.
 
          - விதைகளை நன்கு வெயிலில் உலர வைக்க  வேண்டும்.  தினமும் காலை 8 முதல் 12 மணி  வரையிலும் பின்னர் மாலை 3 முதல் 5 மணி வரையிலும் உலர்த்த வேண்டும்.
 
         
       
      விதைச் சான்று வரைமுறைகள் 
      வீரிய ஒட்டு சான்று  நிலை விதைகளை விதைச் சான்றுத் துறையினர் நிர்ணயித்துள்ள வயல் மற்றும் விதை  தரங்களுடன், விதைச் சான்று வரைமுறைகளையும், விதைச் சட்டம் மற்றும்  கோட்பாடுகளையும் பின்பற்றி உற்பத்தி செய்தல்  வேண்டும். 
      
        
            
              வயல் தரம்  | 
                 | 
                 | 
             
            
              காரணிகள்  | 
              அதிக பட்சம் ( சதவீதம் )  | 
             
            
                 | 
              ஆதார நிலை  | 
              சான்று நிலை  | 
             
            
              பயிர் இரக விதை (பெண்)  | 
              0.05  | 
              0.2  | 
             
            
              பயிர் இரக விதை (ஆண்)  | 
              0.05  | 
              0.2  | 
             
            
               மகரந்தம் உதிர்க்கும் செடிகள்( பெண் )  | 
              0.05  | 
              0.1  | 
             
            
              தவிர்க்கவேண்டிய களைகள்   | 
              0.01  | 
              0.02  | 
             
            
              2.  விதைத் தரம்  | 
                 | 
                 | 
             
            
              1.  | 
              தூய்மையான விதைகள் (குறைந்த பட்சம் )  | 
              2%  | 
              2%  | 
             
            
              2.  | 
              தூசிகள் ( அதிக பட்சம் )  | 
              2%  | 
              2%  | 
             
            
              3.  | 
              உமி இல்லா நெல் ( அதிக பட்சம் )  | 
              2%  | 
              2%  | 
             
            
              4.  | 
              பயிர் விதைகள்( அதிக பட்சம் )  | 
              10/kg  | 
              20/kg  | 
             
            
              5.  | 
              இரக விதைகள்( அதிக பட்சம் )  | 
              10/kg  | 
              20/kg  | 
             
            
              6.  | 
              பயிர் இரக விதை ( அதிக பட்சம் )  | 
              2/kg  | 
              5/kg  | 
             
            
              7.  | 
              முளைப்புத் திறன் ( அதிக பட்சம் )  | 
              80%  | 
              80%  | 
             
            
              8.  | 
              விதை ஈரப்பதம் ( அதிக பட்சம்)  | 
                 | 
                 | 
             
            
                 | 
              காற்றுப்புகும் பை   | 
              13%  | 
              13%  | 
             
            
                 | 
              காற்றுப்புகா பை   | 
              8%  | 
              8%  | 
             
               
       
        
        
                     
               |