| 
  
  
    |     | 
  
    | 
       விதை நேர்த்தி :: விதை மேலாண்மை  | 
    
  
    | பச்சைப்பயிறில் தாவரம் பொருட்களைக் கொண்டு விதை மூலாம் பூசுதல் | 
  
  
    உயிரியக்க ரசாயனங்கள்  உள்ள பிசின் மற்றும் தாவர நிரப்பு பொருட்களை கொண்டு விதையை எளிதாக கையாளும் வகையில் பூசுதல்   | 
  
  
    செய்முறை
      
        
          - விதைகளை ஒரு பிளாஸ்டிக் தட்டில் எடுத்துக்  கொள்ள வேண்டும்.
 
          - 10 சதவீத மைதா கஞ்சியை சிறிதளவு விதைகளின்  மேல் ஊற்ற வேண்டும்.
 
          - தட்டை மெதுவாக அசைக்கும் போது மைதா  பசையான விதைகளின் மேல் ஒரே சீராக பரவுகிறது.
 
          - நிரப்புப் பொருளான அரப்புத் தூளை விதைகளின்  மேல் ஒரே சீராக தூவ வேண்டும்.
 
          - விதைகளை நன்கு கலக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கும் விதைகளை  நீக்க வேண்டும்.
 
          - எஞ்சிய திரட்டிப் பொருளான அரப்புத்தூளை  சல்லடை கொண்டு சளித்து அகற்ற வேண்டும்.
 
          - விதைகளை நிழலில் போதிய ஈரத்தன்மைக்கு  வரும்வரை உலர்த்த வேண்டும்.
 
           
         
நன்மைகள்
      
        
          - சிறிய மற்றும் ஒழுங்கற்ற வடிவமுள்ள விதைகளைக்  கையாளும் முறை எளிதாகின்றது.
 
          - விதையின் அளவு மற்றும் எடை அதிகமாவதால்  துல்லி விதைப்பு பெறமுடிகின்றது.
 
          - வினையியல் சார்ந்த விதைத் தரத்தை உயர்த்துகின்றது.
 
           
        | 
  
  
      | 
  
  
    | Updated On: Jan, 2016 | 
  
  
   |   | 
  
    
      
      
      © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016. 
        | 
  
     |