அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
பார்லியில் மேலோடானது 13 சதவீதம் அடங்கும். இந்தியாவில் காணப்படும் பார்லியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் ஈரப்பதம்-12.5 சதவீதம், புரதம்-11.5 சதவீதம், கொழுப்பு -1.3சதவீதம், தாதுஉப்புகள்-1.5 சதவீதம், நார்ச்சத்து - 3.95 சதவீதம், கார்போஹைட்ரேட்-69.3 சதவீதம், தாது உப்புக்களில் இரும்பு சத்து அதிக அளவும் அதனுடன் பி வைட்டமின் மற்றும் சிறிதளவு வைட்டமின் ஏ, டி, ஈ காணப்படுகிறது. பார்லி கஞ்சியில் 19 சதவீதம் அமைலேஸ் மற்றும் 81 சதவீதம் அமைலோ பெக்டின் காணப்படுகிறது.
|
ஆற்றல் (கி.கலோரி) |
ஈரப்பதம் (கி) |
புரதம் (கி) |
கொழுப்பு (கி) |
து உப்பு
(கி) |
கார்போஹைட் (கி) |
நார்சத்து (கி) |
சுண்ணாம்பு (மிகி) |
பாஸ்பரஸ் (மி.கி) |
இரும்பு (மிகி) |
பார்லி |
336 |
12 |
11 |
1 |
1 |
4 |
70 |
26 |
215 |
2 |
|
|
மருத்துவத்தில் சர்க்கரைநோய் குறைப்பதற்கும், கொழுப்பு சத்து குறையவும் உடல் குறைக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது. ஓட்ஸ் சக்கை மற்றம் பார்லியில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்சத்துக்களை கொண்டுள்ளதால் இவை கொழுப்பின் அளவை குறைக்கின்றன. பார்லியானது பசியுண்டாவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. குடல் புற்று நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்
ஆதாரம்:
www.all-creatures.org/recipes/i-barley.html
http://images.foodnetwork.com /cooking/wholegrainsguide/barley_big.jpg
www.flickr.com/photos/docfiles/171847622/
commons.wikimedia.org/
|