புவியியல்சார்ந்தகுறியீடு: (GI)  
                          ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு அளிக்கப்படுவதே புவியியல் சார்ந்த குறியீடாகும். அக்குறிப்பிட்ட இடத்தின் தனித்தன்மை பெற்றதாக அப்பொருள் விளங்கும்.  பொதுவாக, அத்தகைய பெயர் பொருட்களின் தரத்திற்கான உத்திரவாதம் அளிக்கிறது மற்றும் பொருளின் தனித்தன்மை, அப்பொருளின் பிறப்பிடம், அதாவது அதன் நாடு போன்றவற்றை அறிய உதவுகிறது. பொது விதிகள் 1(2) மற்றும் 10 பாரிஸ் நடைமுறைப்படி தொழில் உடமை பாதுகாப்பு மற்றும் புவியியல் குறியீடுகள் ஆகியவை IPRன் கூறுகளாகும். இந்தியா, உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினரான பிறகு பொருட்களின் புவியியல் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் இயற்றப்பட்டு, 1999-ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.  
              யார்புவியியல்சார்ந்தகுறியீட்டிற்குவிண்ணப்பிக்கலாம்? 
                ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது நாட்டைச் சார்ந்த குழுவைச் சார்ந்தோர் அப்பொருளின் உற்பத்தியாளர் அல்லது அந்நிறுவனத்தைச் சார்ந்தோர் எவரேனும் விண்ணப்பிக்கலாம். 
              எவ்வாறுவிண்ணப்பிக்கவேண்டும்? 
              பதிவு செய்யும் முறைகள்  
              நிலை 1: விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல்  
                              புவியியல் சார்ந்த குறியீடு குறிப்பு 2(1)(e) பிரிவின் கீழ் வருகிறது என்பதை சரிபார்க்கவும். 
                நபர்கள் அல்லது உற்பத்தியாளர்கள் அல்லது அமைப்பு குறிப்பிட்ட பொருட்களின் உற்பத்தியாளர்களின் ஆர்வம் மற்றும் விண்ணப்பதாரரின் ஆர்வத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக  கூறும் ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  
              
                - விண்ணப்பங்கள் முப்படியாக தயாரிக்கப்பட வேண்டும்.
 
                - விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் அல்லது அவரது முகவர் கையொப்பமிட வேண்டும் மற்றும் அறிக்கை சேர்க்கப்பட வேண்டும்.
 
              
                - அப்பொருளின் தரம், பிற       இடங்களில் தயாரிக்கப்படும் அதே பொருட்களிடமிருந்து வேறுபட்டு இருக்கும் தனிச்சிறப்பு, உற்பத்தியாளர் / தயாரிப்பாளரால் பின்பற்றப்பட்டு வரும் தரம் ஆகியவை.
 
                - அக்குறிப்பிட்ட பகுதி / பிரதேசத்தின் வரைபடம் 3 நகல்கள் 
 
                - அக்குறிப்பிட்ட பகுதி / பிரதேசத்தைச் சேர்ந்தது என்பதற்கான ஆதாரம் மற்றும் தயாரிக்கப்படும் முறை.
 
                - உரிமை கோருவோரின் எழுத்து மூலமான உறுதி மொழிப் பத்திரம். தயாரிப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் ஒருமித்த குறிப்பு விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும்.
 
               
              இந்தியாவில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி  
              புவியியல்சார்ந்தகுறியீடுகள்பதிவு 
                அறிவுசார் காப்புரிமை அலுவலகம்  
                தொழிற் பேட்டை, ஜி.எஸ்.டி சாலை  
                கிண்டி, சென்னை - 600 032. 
              விண்ணப்பதாரருக்கு இந்தியாவில் முகவரி இருக்க வேண்டும். பொதுவாக, விண்ணப்பம் (1) சட்ட பயிற்சியாளர் (2) பதிவு முகவர் தாக்கல் செய்ய வேண்டும். 
              நிலை 2  மற்றும் 3: ஆரம்ப கூர்ந்தாய்வு மற்றும் பரிசோதனை  
              
                - பரிசோதகர் விண்ணபத்தில் ஏதேனும் குறைபாடுள்ளதா என ஆய்வு செய்வார். 
 
                - ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் விண்ணப்பதாரர் அதனை ஒரு மாதத்திற்குள் சரிசெய்ய வேண்டும். 
 
                - அறிக்கை நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு மூலம் மதிப்பிடப்படுகிறது. 
 
                - கொடுக்கப்பட்ட விவரங்கள் சரியானவையா என அவர்கள் ஆராய்வார்கள். 
 
                - அதன் பின்னர் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும். 
 
               
              நிலை 4: காரண அறிக்கை  
              
                - பதிவாளருக்கு விண்ணபத்தில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், அவர் ஆட்சேபனை தெரிவிப்பார். 
 
                - அதற்கு விண்ணப்பதாரர் இரண்டு மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் அல்லது விசாரணைக்கு விண்ணப்பிக்க வேண்டும். 
 
                - தீர்மானம் முறையாக தெரிவிக்கப்டும். விண்ணப்பதாரர் மேல் முறையீடு செய்ய விரும்பினால், அவர் ஒரு மாதத்திற்குள் கோரிக்கை செய்யலாம்.
 
                - பதிவாளருக்கு விண்ணப்பத்தை திரும்பப் பெறும் அதிகாரம் உண்டு. 
 
               
              நிலை 5: புவியியல் சார்ந்த குறியீடுகள் இதழில் வெளியீடு  
              ஒவ்வொரு விண்ணப்பமும் ஏற்கப்பட்ட மூன்று மாதத்திற்குள் புவியியல் சார்ந்த குறியீடுகள் இதழில் வெளியிடப்படுகிறது.     
              நிலை 6: பதிவு செய்வதற்கு எதிர்ப்பு  
              
                - எந்த ஒரு நபரும் புவியியல் சார்ந்த குறியீடுகள் இதழில் வெளிவந்த பதிவிற்கு எதிராக மூன்று மாதத்திற்குள் எதிர்ப்பு தெரிவிக்கலாம். (மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டிய கோரிக்கை மீது மற்றொரு மாதம் நீட்டிக்கப்படலாம்)
 
                - பதிவாளர் விண்ணப்பதாரருக்கு அறிவிப்பை முறைப்படி தெரிவிப்பார்.
 
                - விண்ணப்பதாரர் இரண்டு மாதங்களுக்குள் எதிர் அறிக்கை பிரதியை அளிக்க வேண்டும்.
 
                - அவ்வாறு அறிக்கை அனுப்பப்படாவிட்டால் விண்ணப்பம் கைவிடப்பட்டதாக கருதப்படும். எதிர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் பதிவாளர் எதிராளிக்கு ஒரு பிரதியை அனுப்புவார்.
 
                - அதன்பின், இரு தரப்பினரும் வாக்குமூலம் மற்றும் சாட்சியாக ஆதரவு ஆவணங்களை அளிப்பார்கள்.
 
                - விசாரணை தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
 
               
              நிலை 7: பதிவு 
              
                - புவியியல்சார்ந்தகுறியீடுவிண்ணப்பம்ஏற்றுக்கொள்ளப்பட்டால், பதிவாளர்புவியியல்குறியீட்டைபதிவுசெய்வார். பூர்த்திசெய்யப்பட்டவிண்ணப்பம்பதிவுசெய்யப்பட்டநாள்பதிவுநாளாகக்கருதப்படும்.
 
                - பதிவாளர்விண்ணப்பதாரருக்குபுவியியல்சார்ந்தகுறியீடுகள்முத்திரைசான்றிதழைஅளிப்பார்.
 
               
              நிலை 8: புதுப்பித்தல்  
              பதிவுசெய்யப்பட்ட புவியியல் குறியீடுகள் பத்திரம் 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்தல் கட்டணம் செலுத்தி புதுபித்துக்கொள்ளலாம். 
              நிலை 9: பொருட்களுக்கு  கூடுதல் பாதுகாப்பு 
              பொருட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு இச்சட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. 
              நிலை10: மேல் முறையீடு  
              இந்தஆணையால்எவரேனும்பாதிக்கப்பட்டால்மூன்றுமாதத்திற்குள்அறிவுசார்காப்புரிமைமேல்முறையீட்டுக்குழுவினரிடம்முறையீடுசெய்யலாம்.  
              அறிவுசார்காப்புரிமைமேல்முறையீட்டுக்குழுவின்முகவரிபின்வருமாறு: 
                              அறிவுசார்காப்புரிமைமேல்முறையீட்டுவாரியம் 
                இணைப்பு 1, 2 வதுமாடி, குணாகாம்ப்ளக்ஸ், 
                443, அண்ணாசாலை, சென்னை - 600 018. 
              எந்தகுறியீடுகளைபதிவுசெய்யஇயலாது? 
              பதிவுசெய்யப்படும்குறியீடு, புவியியல்சார்ந்தகுறியீடுகள்சட்டம் 1999, பிரிவு 2ன்கீழ்இருக்கவேண்டும்மற்றும்பிரிவு 9 விதிகளையும்பூர்த்திசெய்யவேண்டும். பின்வருவனவற்றைபதிவுசெய்யஇயலாது. 
              
                - தவறான வழியை பின்பற்றுபவர் மற்றும் குழப்பமாக இருப்பவை 
 
                - நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு மாறாக இருப்பவை 
 
                - இழிவான விவகாரங்கள் 
 
                - மதம் அல்லது இந்திய குடிமக்களை ஏதாவது வகையில் புண்படுத்துபவையாக இருப்பவை 
 
                - பொருட்களின் பூர்வீகம் வேறு இடமாக இருக்க மற்றொரு இடத்தில் பெயரில் குறியீட்டிற்கு விண்ணப்பத்தல் 
 
               
              பிரிவு 1 முதல் 9ன் விளக்கம், பொருட்களுக்கு பொதுவான பெயர்கள் வழங்கப்படுகின்றன. அது உற்பத்தி செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் நாடு அல்லது இடம் மறைந்துவிடுகிறது. அவ்வாறு பொருள் தனது தனித்தன்மையை இழக்காமல் இருக்க புவியியல் சார்ந்த குறியீடுகள் வழங்கப்படுகின்றன.  
              சிலபொருட்களுக்குகூடுதல்பாதுகாப்பு 
              பொருட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க பதிவு செய்யப்பட்ட படிவம் ஜி.ஐ.-9 மும்மடங்காக அறிக்கையுடன் இணைக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படுகிறது. இந்தியாவில் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களும் சேர்ந்து கூட்டாக விண்ணப்பிக்கலாம். 
              உறுதிமொழிஆவணம் 
              
                - புவியியல் சார்ந்த குறியீடு பதிவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தேவை. அவை பதிவாளரிடம் சமர்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில், அவை தொடர்வுடை விவரங்கள், பத்திகள், பதிவிற்கு தொடர்புடையவையாக இருக்க வேண்டும். ஆவணம் நபரின் உறைவிடம் மாநிலம் பற்றிய நம்பிக்கையான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
 
                - ஒவ்வொரு ஆவணமும் விளக்கமளிக்கும்படி இருக்க வேண்டும்.
 
                - ஆவணங்கள் 
 
                - இந்தியாவில் நீதிமன்றம் அல்லது தனிநபருக்கு சாட்சியம் கேட்க சட்ட அதிகாரம் உள்ளது.
 
                - இந்தியா அல்லாத பிற நாடுகள் அல்லது இடத்தில் சட்டம் 1948, தூதரக அதிகாரிகள் முன் (உறுதிப்பாடுகள் மற்றும் கட்டணம்) அல்லது பொதுமக்கள் முன் அல்லது நீதிபதி முன் சமர்பிக்க வேண்டும்.
 
                - பதிவாளர் முன் சட்டங்களுக்கு உட்பட்டு உறுதி மொழி ஆவணம் சமர்பிக்கப்படவேண்டும்.
 
               
              பொதுஆவணங்கள்ஆய்வு 
              
                - ஆவணங்கள் பிரிவு 78 உட்பிரிவு (1)ன் படி புவியியல் சார்ந்த குறியீடுகள் தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும்.
 
                - பதிவு நகல் மற்றும் பிரிவு 78ல் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் மத்திய அரசால் ஒவ்வொரு கிளை அலுவங்களிலும் அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகின்றன.
 
                - ஆய்வின் போது புவியியல் சார்ந்த குறியீடுகள் அலுவலகம் வழக்கமாக பொதுமக்களுக்காக இயங்கும். அல்லது பதிவாளர் முடிவு செய்வார்.
 
                - பத்திரிகை மற்றும் பிற ஆவணங்களின் பிரதிகள் விநியோகம்.  
 
               
              புவியியல் சார்ந்த குறியீடுகள் விண்ணப்பத்தை பதிவு செய்யும் முறைகள்  
              
                - படிவம் மற்றும் விண்ணப்பத்தில் கையொப்பமிடல் 
 
                - புவியியல் சார்ந்த குறியீடு பதிவு செய்யும் ஒவ்வொரு விண்ணப்பமும் நிர்ணயிக்கப்பட்ட முறையில் இருக்க வேண்டும் (GI-1A to ID). அதனுடன் கட்டணம் ரூ.5,000 சேர்க்கப்பட வேண்டும். 
 
                - விண்ணப்பதாரர் அல்லது அவரது முகவர் கையொப்பமிட வேண்டும்.
 
                - விண்ணப்பம் மும்மடங்காக மூன்று அறிக்கை நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
 
               
              கட்டணம்  
              
                - கட்டணம் ரொக்கமாக அல்லது பண அஞ்சல் அல்லது வங்கி வரைவோலை அல்லது காசோலை மூலம் அனுப்பப்பட வேண்டும்.
 
                - வங்கி வரைவோலை அல்லது காசோலை குறுக்குக்கோடிட்டதாக இருக்க வேண்டும் மற்றும் பதிவாளர், புவியியல் சார்ந்த குறியீட்டு அலுவலக முகவரிக்கு எடுக்கப்பட வேண்டும்.
 
                - இது புவியியல் சார்ந்த குறியீடுகள் அலுவலகம் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள அட்டவணை வங்கியில் எடுக்க வேண்டும். 
 
                - ஆவணம் கட்டணம் இல்லாமல் அல்லது போதிய கட்டணம் இல்லாமல் இருந்தால் அவை பதிவு செய்யப்படமாட்டாது.
 
               
              அளவுகள்  
              
                - விண்ணப்பங்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதப்பட்டு அல்லது அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
 
                - விண்ணப்பங்கள் வலுவான காகிதத்தில், நிரந்தர மை கொண்டு தெளிவான எழுத்துக்களால் நிரப்பப்பட வேண்டும் மற்றும் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும்.
 
                - அளவு சுமார் 33க்கு 20 செ.மீ என்று இருக்க வேண்டும் மற்றும் விளம்பு இடது புறம் 4 செ.மீக்கு குறையாமல் இருக்க வேண்டும். 
 
               
ஆவணங்கள்கை யொப்பமிடல் 
              
                - வழக்கில்
                  
                    - தனிநபர்கள் அல்லது உற்பத்தியாளர் சங்கம் அங்கீகரிக்கபட்ட கையெழுத்திடலாம்.
 
                    - கார்ப்பரேட் அல்லது எந்த ஒரு அமைப்பு அல்லது சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி அல்லது நிர்வாக இயக்குநர் அல்லது செயலாளர் அல்லது தலைமை அதிகாரி கையெழுத்திடலாம்.
 
                    - கூட்டாண்மையாக இருந்தால் பங்குதாரர் கையொப்பமிடலாம்.
 
                   
                 
                - கையெழுத்திட்டபின்கையொப்பமிட்டவரின்பெயரைஆங்கிலம்அல்லதுஇந்தியில்தெளிவாகஎழுதவேண்டும்.
 
               
              இந்தியாவில் முதன்மை வணிக இடம் 
              
                - விண்ணப்பத்தில் வணிகம் மேற்கொள்ளப்படும் முதன்மை இடத்தை குறிப்பிட வேண்டும்.
 
                - கார்ப்பரேட் நிறுவனங்கள் இயக்குநர் குழுவின் முழு பெயர் மற்றும் அவர்கள் நாட்டுரிமையைக் குறிப்பிட வேண்டும்.
 
                - வெளிநாட்டினர் அவர்கள் நாட்டில் முதன்மை வணிகம் மேற்கொண்டால் இந்தியாவில் அவர்கள் சேவை செய்யும் இடத்தின் முகவரியைக் குறிக்க வேண்டும்.
 
               
              விண்ணப்பங்கள் பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.  
              
                - புவியியல் சார்ந்த குறியீட்டின் விவரம், நாடு, விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட தேதி ஆகியவை தெளிவாக இருக்க வேண்டும்.
 
                - குறிப்பிட்ட பொருட்களின் புவியியல் சார்ந்த குறியீட்டிற்கான அந்நாட்டின் முதல் விண்ணப்பமாக இருக்க வேண்டும்.
 
                - வெளிநாட்டில் இதுபோன்று பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்நாடு அவற்றின் பதிவு தேதி, வரிசை எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
 
               
              பயனாளிகள் அறிக்கை 
              விண்ணப்பம் பதிவு செய்யும்பொழுது பயனாளிகள் மற்றும் சாட்சியின் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும். 
              விண்ணப்பத்தின் உள்ளடக்கம் 
              ஒவ்வொரு விண்ணப்பமும் நிர்ணயிக்கப்பட்ட வடிவில் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும். 
              
                - புவியியல் சார்ந்த குறியீடு எவ்வாறு பொருளுக்கு தரம், மதிப்பு மற்றும் சிறப்பியல்புகளை அளிக்கிறது என்பதற்கான ஆவணம் 
 
                - பொருட்களின் புவியியல் சார்ந்த குறியீடு தொடர்புடைய அறிக்கை மூன்று நகல்கள் அளிக்கப்பட வேண்டும்.
 
                - பிரதேசத்தின் புவியியல் வரைபடம் 
 
                - புவியியல் சார்ந்த குறியீட்டின் தோற்றம் குறித்த விவரங்கள் வார்த்தைகளில் அல்லது உருவக கூறுகளில் விளக்கப்பட வேண்டும்.
 
                - தொடர்புடைய பொருட்களின் தயாரிப்பாளர்கள் விவரங்கள் கொண்ட அறிக்கை 
 
                - விண்ணப்பங்கள் கீழ்வருவனவற்றை கொண்டிருக்க வேண்டும்.
 
                - பொருட்களின் தரம், ஒருமைப்பாடு மற்றும் நிலைப்புத்திறன் அல்லது தயாரிப்பாளர்கள் அல்லது உற்பத்தியாளர்களால் பராமரிக்கப்படும் சிறப்புப் பண்புகள் பற்றிய உறுதி. 
 
                - பிராந்தியத்தின் மூன்று சான்றிதழ் நகல்கள் 
 
                - சிறந்த மனித திறன் அல்லது தனித்துவம் வாய்ந்த புவியியல் சூழல் அல்லது புவியியல் சார்ந்த குறியீடு கோருவதற்கான பண்புகள் பற்றிய விவரங்கள் 
 
                - தனிநபர் அல்லது அமைப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பொருளின் உற்பத்தியாளர் அல்லது தயாரிப்பாளரின் முழு பெயர் மற்றும் முகவரி 
 
                - ஆய்வு அமைப்பு பற்றிய விவரங்கள்: ஒரே வகை புவியியல் சார்ந்த குறியீகளாக இருப்பின் பதிவு செய்யும் விண்ணப்பத்தில் பொருட்களின் காரணிகளை வேறுபடுத்தி விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
 
               
              விண்ணப்பங்களின் ஒப்புகை இரசீது  
              
                - பொருட்களின் புவியியல் சார்ந்த குறியீடுகள் பதிவு செய்யும் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் பதிவாளர் ஒப்புகை இரசீது வழங்குவார். 
 
                - ஒப்புகை இரசீது அலுவலக எண் குறிப்பிடப்பட்டு அனுப்பப்படும்.
 
               
              பொருட்களின் வகைப்பாடு – பிரிவுகளின் பெயர்  
              
                
                                      பிரிவு – 1  | 
                  தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், அறிவியல், புகைப்படம் எடுத்தல், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வனவியல்; பதப்படுத்தப்படாத செயற்கை பிசின்கள், பதப்படுத்தப்படாத நெகிழிகள், எருக்கள், தீ அணைப்பான், வெப்பநிலை மற்றும் சூட்டினைப்பு தயாரிப்புகள், உணவுப்பொருளை பாதுகாக்கும் இரசாயன பொருட்கள், பொருட்கள் பதனிடுதல், தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் பசை   | 
                 
                
                  பிரிவு – 2  | 
                  வர்ணங்கள், வார்னிஷ், மெருகு, இரும்பு துருப்பிடிக்காமல் பாதுகாக்கும் மற்றும் மரத்தை சிதைவிலிருந்து பாதுகாக்கும் வேதிப்பொருள், சாயங்கள், மூல இயற்கை பசை, உலோக மென்தகடு, ஒப்பனையாளர், அச்சுப்பொறிகள் மற்றும் கலைஞர்கள்   | 
                 
                
                  பிரிவு – 3  | 
                  பிளீச்சிங் தயாரிப்புகள் மற்றும் சலவைக்கு தேவையான தயாரிப்புகள், தூய்மைப்படுத்துதல், மெருகூட்டல், உராய்வுப்பொருள் தயாரிப்புகள், சோப்புகள், நறுமண பொருள்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், ஒப்பனைப் பொருள், தலைமுடி லோஷன்   | 
                 
                
                  பிரிவு – 4  | 
                  தொழில்சாலை எண்ணெய் மற்றும் கிரீஸ்கள், உராய்வு நீக்கி, தூசி கவர்தல், நனைத்தல் மற்றும் கட்டமைப்பு பொதிவு, எரிபொருள்கள்(பெட்ரோல் உட்பட) மெழுகுவர்த்திகள், விக்ஸ்   | 
                 
                
                  பிரிவு – 5  | 
                  மருந்து தயாரிப்பு, கால்நடை மற்றும் சுகாதார தயாரிப்புகள், மருத்து பயன்படுத்த ஏதுவாக உணவு கட்டுப்பாடு பொருட்கள், குழந்தைகளுக்கான உணவு, பிளாஸ்திரிகள், காயங்களுக்கு மருந்திட உதவும் பொருட்கள், பல் மெழுகு, கிருமிநாசினிகள்,புழுக்களை அழிக்கும் தயாரிப்புகள், பூசண கொல்லிகள், களைக்கொல்லிகள்   | 
                 
                
                  பிரிவு – 6  | 
                  பொது உலோகங்கள் மற்றும் அவைகளின் கலவைகள், கட்டிட உலோக பொருட்கள், ரயில் தடங்களுக்கான உலோக பொருட்கள், மின்சாரம் அல்லாத கேபிள்கள் மற்றும் பொதுவான உலோக கம்பிகள், சறிய உலோக பொருட்கள், குழாய்கள் மற்றும் உலோக குழாய்கள், பொதுவான உலோகங்கள் மற்ற பிரிவுகளில் சேர்க்கப்படாதவை, தாதுக்கள்   | 
                 
                
                  பிரிவு – 7  | 
                  இயந்திரங்கள் மற்றும் இயந்திர கருவிகள், மோட்டார்கள் மற்றும் இயந்திரங்கள் (தரை வழி வாகனங்கள் தவிர), விவசாய கருவிகள் (கைகளால் இயக்கப்படுவது தவிர), முட்டை அடைகாப்புக் கருவி   | 
                 
                
                  பிரிவு – 8  | 
                  கை கருவிகள் மற்றும் சாதனங்கள் (கைகளால் இயக்கப்படுவது), உணவு அருந்தப் பயன்படும் மென்கத்தி, கரண்டி போன்றவை.  | 
                 
                
                  பிரிவு – 9  | 
                  விஞ்ஞானம், கப்பல் துறை, அளக்கையியல், மின், புகைப்படம், திரைத்துறை, ஒளிச்சூழல், எடை அளவிடல், உயிர்காக்கும் மற்றும் கற்பித்தல் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், குறிகை, சோதனை (மேற்பார்வை), பதிவு செய்யும் இயந்திரம், ஒலி மற்றும் ஒளிபரப்பு, பதிவு வட்டத்தட்டு, தானியங்கி பொருள் வழங்கும் இயந்திரம் மற்றும் நாணயம் இயக்கப்படும் இயந்திரம், பணப்பதிவேடுகள், கணக்கிடும் இயந்திரங்கள், தகவல் செயலாக்க உபகரணங்கள் மற்றும் கணினிகள், தீ அணைக்கும் இயந்திரம்   | 
                 
                
                  பிரிவு – 10  | 
                  அறுவை சிகிச்சை, மருத்துவம், பல் மற்றும் கால்நடை கருவிகள், செயற்கை உறுப்புகள், கண்கள் மற்றும் பற்கள், எலும்பியல் உபகரணங்கள், அறுவை தையல் பொருட்கள்   | 
                 
                
                  பிரிவு – 11  | 
                  விளக்கு உபகரணங்கள், வெப்பம், நீராவி உற்பத்தி, சமையல், குளிர்பதன பெட்டிகள், உலர்த்திய காற்றோட்டம், நீர் விநியோகம் மற்றும் சுகாதார தேவைகளுக்கான உபகரணங்கள்   | 
                 
                
                  பிரிவு – 12  | 
                  வாகனங்கள் (நிலம், காற்று மற்றும் நீரில் இயங்குபவை)  | 
                 
                
                  பிரிவு – 13  | 
                  ஆயுதப்படை; வெடிபொருட்கள் மற்றும் எரி பொருட்கள், பட்டாசுகள்   | 
                 
                
                  பிரிவு – 14  | 
                  விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் அதைச் சார்ந்தவை அல்லது அதன் பூச்சு மற்ற பிரிவுகளை சேர்ந்தவை அல்லாதது, நகைகள், விலையுயர்ந்த கற்கள்   | 
                 
                
                  பிரிவு – 15  | 
                  இசைக்கருவிகள்   | 
                 
                
                  பிரிவு – 16  | 
                  காகிதம், அட்டை மற்றும் இதனால் செய்யப்படும் பிற பொருட்கள் மற்ற பிரிவுகளை சேர்ந்தவை அல்லாதது, அச்சிடப்பட்டவை, புத்தகக்கட்டு, புகைப்படங்கள், எழுதுபொருள், வீட்டு தேவைக்கான பசைகள், கலைஞர்கள் 'பொருட்கள், தூரிகைகள் சாயம், தட்டச்சு மற்றும் அலுவலக தேவைகள் (அறைகலன் தவிர), கற்பித்தல் பொருட்கள், சிப்பமிட உதவும் நெகிழி பொருட்கள், சீட்டு, அச்சுப்பொறிகள் வகை   | 
                 
                
                  பிரிவு – 17  | 
                  ரப்பர், பசை, கல்நார் அட்டை, மைக்கா மற்றும் இதைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் மற்ற பிரிவுகளில் சேராதவை, உற்பத்திக்கு பயன்படும் வகையில் நெகிழி, சிப்பமிடல், நெகிழ்வான குழாய்கள் உலோகம் அற்றவை.  | 
                 
                
                  பிரிவு – 18  | 
                  தோல் மற்றும் தோல் போன்ற பொருட்கள் மற்றும் இதனால் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்ற பிரிவுகளில் சேராதவை, விலங்கு தோல்கள், பயணப் பைகள், குடைகள், கைக்குடை,  நடைபயிற்சி குச்சி, சாட்டைகள், குதிரை தளவாடப் பொருட்கள்   | 
                 
                
                  பிரிவு – 19  | 
                  கட்டிட பொருட்கள்,    (உலோகம் அல்லாத), உலோகம் அல்லாத கட்டிடங்களுக்கான வளையாத குழாய்கள், நிலக்கீல், உலோகம் அல்லாத சிறிய கட்டிடங்கள், நினைவுச் சின்னம்,    (உலோகம் அல்லாதது)  | 
                 
                
                  பிரிவு – 20  | 
                  மேஜை நாற்காலிகள், கண்ணாடிகள், படச் சட்டம், மரப் பொருட்கள் (மற்ற பிரிவுகளில் சேராதவை) தக்கை, கோரைப்புல், பிரம்பு, கொம்பு, தந்தம், திமிங்கிலம் எலும்பு, ஓடு, அம்பர், முத்தின் உள்ளோடு, மீரிசம் மற்றும் இதற்கு மாற்று பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக்   | 
                 
                
                  பிரிவு – 21  | 
                  சமையல் பாத்திரங்கள் மற்றும் கொள்கலன்கள் (விலையுயர்ந்த உலோகப் பூச்சு அற்றது), சீப்புகள் மற்றும் கடற்பஞ்சு, ப்ரஷ்கள் (வர்ணங்கள் தூரிகைகள் தவிர), சுத்தம் செய்ய பயன்படும் பொருட்கள், எஃகு கம்பளி, வேலைபாடுகள் அல்லாத கண்ணாடி (கட்டிடத்திற்கு பயன்படும் கண்ணாடி தவிர), கண்ணாடிப் பொருட்கள், பீங்கான் மற்றும் மண் பாண்டம் மற்ற பிரிவுகளில் சேராதவை.    | 
                 
                
                  பிரிவு – 22  | 
                  கயிறுகள், நூல், வலைகள், கூடாரங்கள், படங்குக் கூரை, தார், கப்பலின் பாய், சாக்குப்பை மற்றும் பைகள் (மற்ற பிரிவுகளில் சேராதது), மூல இழைம ஜவுளி பொருட்கள்   | 
                 
                
                  பிரிவு – 23  | 
                  நூல் மற்றும் நெசவு தொழிலுக்கு பயன்படுபவை   | 
                 
                
                  பிரிவு – 24  | 
                  நெசவுப் பொருட்கள் (மற்ற பிரிவுகள் அல்லாதவை) படுக்கை மற்றும் மேசை விரிப்புகள்   | 
                 
                
                  பிரிவு – 25  | 
                  உடைகள், காலணி, தலைக்கவசம்   | 
                 
                
                  பிரிவு – 26  | 
                  சரிகை மற்றும் சித்திர தையல், நாடா மற்றும் பின்னல், பட்டன்கள், கொக்கிகள், ஊசிகள், செயற்கை மலர்கள்   | 
                 
                
                  பிரிவு – 27  | 
                  கம்பளங்கள், தரைவிரிப்புகள்,பாய்கள், லினோலியம் மற்றும் தரை விரிப்புகள், சுவரில் தொங்கவிடப்படும் திரைச்சீலை (ஜவுளி அல்லாத)  | 
                 
                
                  பிரிவு – 28  | 
                  விளையாட்டுப் பொருட்கள், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பொருட்கள் மற்ற பிரிவுகளில் சேர்க்கப்படாதவை, அலங்கார கிறிஸ்துமஸ் மரங்கள்   | 
                 
                
                  பிரிவு – 29  | 
                  இறைச்சி, மீன் மற்றும் கோழி, இறைச்சி சாரங்கள், பாதுகாக்கப்பட்ட, உலர்ந்த மற்றும் சமைத்த காய்கறிகள் மற்றும் பழங்கள், ஜெல்லி, பழக்களி, பழ சுவைச்சாறு, முட்டை, பால் மற்றும் பால் பொருட்கள், சமையல் எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள்   | 
                 
                
                  பிரிவு – 30  | 
                  காபி, தேயிலை, கொக்கோ, சர்க்கரை, அரிசி, மரவள்ளிக்கிழங்கு ஜவ்வரிசி, செயற்கை காபி, மாவு மற்றும் தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள், ரொட்டி, மா பலகாரம் மற்றும் தின்பண்டங்கள், பனிக்கட்டிகள், தேன், பாகு, ஈஸ்ட், சமையல் சோடா, உப்பு, கடுகு, வினிகர்,சுவைச்சாறு (சுவையூட்டிகள்), மசாலா பொருட்கள்   | 
                 
                
                  பிரிவு – 31  | 
                  வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வனவியல் பொருட்கள் மற்றும் தானியங்கள் (மற்ற பிரிவுகளில் சேர்க்கப்படாதவை), வாழும் விலங்குகள், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், விதைகள், இயற்கை தாவரங்கள் மற்றும் மலர்கள், விலங்குகள் உணவு பொருட்கள், முளைவிட்ட தானியம்   | 
                 
                
                  பிரிவு – 32  | 
                  பீர், கனிமங்கள் மற்றும் காற்றூட்டப்பட்ட பானங்கள் மற்றும் ஆல்கஹால் அல்லாத பானங்கள், பழ பானங்கள் மற்றும் பழ சாறுகள், இனிப்புக் கூழ் மற்றும் பானங்கள் செய்யப் பயன்படுபவை   | 
                 
                
                  பிரிவு – 33  | 
                  மதுபானங்கள் (பீர்கள் தவிர)  | 
                 
                
                  பிரிவு – 34  | 
                  புகையிலை, புகைப்பவர் பொருட்கள் மற்றும் தீப்பெட்டிகள்   | 
                 
               
              புவியியல்சார்ந்தகுறியீடுகள்பெறமாநிலம்வாரியாகபதிவுசெய்தவர்கள்விவரங்கள் 
              
                
                  | வ. எண் | 
                  விண்ணப்பப்படிவஎண் | 
                  புவியியல்குறியீடுகள் | 
                  சரக்கு(As    per Sec 2(f) of GI Act(1999) | 
                  மாநிலம் | 
                 
                
                  | 1. | 
                  1 மற்றும் 2 | 
                  டார்ஜிலிங்தேயிலை (வார்த்தை & முத்திரை)  | 
                  வேளாண்மை  | 
                  மேற்குவங்காளம்  | 
                 
                
                  | 2. | 
                  25 | 
                  காங்க்ரா தேயிலை  | 
                  வேளாண்மை  | 
                  இமாச்சலபிரதேசம்  | 
                 
                
                  | 3. | 
                  33 | 
                  கூர்க் ஆரஞ்சு  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | 4. | 
                  34 | 
                  மைசூர் வெற்றிலை  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | 5. | 
                  35 | 
                  நஞ்சாங்கூடு வாழை  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | 6. | 
                  69 | 
                  மைசூர் மல்லிகை  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | 7. | 
                  70 | 
                  உடுப்பி மல்லிகை  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | 8. | 
                  71 | 
                  ஹடகளி மல்லிகை  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | 9. | 
                  17 | 
                  நவரா அரிசி  | 
                  வேளாண்மை  | 
                  கேரளா  | 
                 
                
                  | 10. | 
                  36 | 
                  பாலக்காடான்மட்டை அரிசி  | 
                  வேளாண்மை  | 
                  கேரளா  | 
                 
                
                  | 11. | 
                  49 மற்றும் 56 | 
                  மலபார்மிளகு  | 
                  வேளாண்மை  | 
                  கேரளா  | 
                 
                
                  | 12. | 
                  50 | 
                  அலகாபாத்சுர்கா  | 
                  வேளாண்மை  | 
                  உத்தரபிரதேசம்  | 
                 
                
                  | 13. | 
                  85 | 
                  மான்சூன்மலபார் அரபிக்காபி  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | 14. | 
                  114 | 
                  மான்சூன்மலபார் ரொபஸ்டா காபி  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | 15. | 
                  72 | 
                  மசாலா பொருட்கள் - ஆலப்புழா ஏலக்காய்  | 
                  வேளாண்மை  | 
                  கேரளா  | 
                 
                
                  | 16. | 
                  78 | 
                  கூர்க்பச்சை ஏலக்காய்  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | ஏப்ரல் 2008 முதல்மார்ச் 2009 வரை | 
                 
                
                  | 17. | 
                  110 | 
                  Eathomozhy உயரமானதென்னை  | 
                  வேளாண்மை  | 
                  தமிழ்நாடு  | 
                 
                
                  | 18. | 
                  81 | 
                  பொக்காலி அரிசி  | 
                  வேளாண்மை  | 
                  கேரளா  | 
                 
                
                  | 19. | 
                  111 | 
                  லட்சுமண்மா  | 
                  வேளாண்மை  | 
                  மேற்குவங்காளம்  | 
                 
                
                  | 20. | 
                  112 | 
                  கிர்ஸாபதி(ஹிம்சாகர்) மா  | 
                  வேளாண்மை  | 
                  மேற்குவங்காளம்  | 
                 
                
                  | 21. | 
                  113 | 
                  மால்டாமாவட்டத்தில் வளரும் பஸ்லிமா  | 
                  வேளாண்மை  | 
                  மேற்குவங்காளம்  | 
                 
                
                  | 22. | 
                  109 | 
                  நாகமிர்சா  | 
                  வேளாண்மை  | 
                  நாகாலாந்து  | 
                 
                
                  | 23. | 
                  116 மற்றும் 117 | 
                  நீலகிரி (பழமைகோட்பாடு) முத்திரை  | 
                  வேளாண்மை  | 
                  தமிழ்நாடு  | 
                 
                
                  | 24. | 
                  115 மற்றும் 118 | 
                  அஸ்ஸாம் (பழமைகோட்பாடு) முத்திரை  | 
                  வேளாண்மை  | 
                  அஸ்ஸாம்  | 
                 
                
                  | 25. | 
                  124 | 
                  விருப்பாச்சி மலை வாழை  | 
                  வேளாண்மை  | 
                  தமிழ்நாடு  | 
                 
                
                  | 26. | 
                  126 | 
                  சிறுமலை மலை வாழை  | 
                  வேளாண்மை  | 
                  தமிழ்நாடு  | 
                 
                
                  | ஏப்ரல் 2009 முதல்மார்ச் 2010 | 
                 
                
                  | 27. | 
                  125 | 
                  மாமலிகாபடி தூஸ்ரி  | 
                  வேளாண்மை  | 
                  உத்தரபிரதேசம்  | 
                 
                
                  | 28. | 
                  130 மற்றும் 141 | 
                  வாழகுளம் அன்னாசி  | 
                  வேளாண்மை  | 
                  கேரளா  | 
                 
                
                  | 29. | 
                  131 | 
                  தேவனஹள்ளிப ப்ளிமாஸ்  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | 30. | 
                  132 | 
                  அப்பமேதிமா  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | 31. | 
                  133 | 
                  கமலாபூர் செவ்வாழை  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | ஏப்ரல் 2010 முதல்மார்ச் 2011 வரை | 
                 
                
                  | 32. | 
                  142 | 
                  பிகானேரி பூஜ்யா  | 
                  வேளாண்மை  | 
                  ராஜஸ்தான்  | 
                 
                
                  | 33. | 
                  143 | 
                  குண்டூர்சம்மன் மிளகாய்  | 
                  வேளாண்மை  | 
                  ஆந்தரபிரதேசம்  | 
                 
                
                  | 34. | 
                  154 | 
                  மகாபலேஷ்வர்ஸ்ட்ரா பெரி  | 
                  வேளாண்மை  | 
                  மகாராஸ்ட்ரா  | 
                 
                
                  | 35. | 
                  186 | 
                  வயநாடுஜீரகாசலா அரிசி  | 
                  வேளாண்மை  | 
                  கேரளா  | 
                 
                
                  | 36. | 
                  187 | 
                  வயநாடுகந்தகாசலா அரிசி  | 
                  வேளாண்மை  | 
                  கேரளா  | 
                 
                
                  | 37. | 
                  163 | 
                  மத்தியதிருவாங்கூர் வெல்லம்  | 
                  வேளாண்மை  | 
                  கேரளா  | 
                 
                
                  | 38. | 
                  165 | 
                  நாசிக் திராட்சை  | 
                  வேளாண்மை  | 
                  மகாராஸ்ட்ரா  | 
                 
                
                  | 39. | 
                  129 | 
                  பயதாகி மிளகாய்  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | ஏப்ரல் 2011 முதல்மார்ச் 2012 வரை | 
                 
                
                  | 40. | 
                  185 | 
                  கிர்கேசர்மா  | 
                  வேளாண்மை  | 
                  குஜராத்  | 
                 
                
                  | 41. | 
                  192 | 
                  பாளியாகோதுமை  | 
                  வேளாண்மை  | 
                  குஜராத்  | 
                 
                
                  | 42. | 
                  199 | 
                  உடுப்பி மாட்டுகுல்லாகத்தரி  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | 43. | 
                  228 | 
                  கஞ்சம்கெவ்டாரோஹ்  | 
                  வேளாண்மை  | 
                  ஒரிசா  | 
                 
                
                  | 44. | 
                  229 | 
                  கஞ்சம்கெவ்டாமலர்கள்  | 
                  வேளாண்மை  | 
                  ஒரிசா  | 
                 
                
                  | ஏப்ரல் 2012 முதல்மார்ச் 2013 | 
                 
                
                  | 45. | 
                  238 | 
                  மதுரை மல்லி  | 
                  வேளாண்மை  | 
                  தமிழ்நாடு  | 
                 
                
                  | 46. | 
                  211 | 
                  பெங்களூர் நீல திராட்சை  | 
                  வேளாண்மை  | 
                  கர்நாடகா  | 
                 
                
                  | ஏப்ரல் 2013 முதல்இன்றுவரை | 
                 
                
                  | 47. | 
                  205 | 
                  கலனாமக் அரிசி  | 
                  வேளாண்மை  | 
                  உத்தரபிரதேசம்  | 
                 
                             புவியியல் அறிகுறிகள் கீழ் பதிவு செய்யப்பட்ட தயாரிப்புகள்  
              
                
                  
                    | புவியியல் குறியீடுகள் | 
                    பொருட்கள் | 
                    மாநிலம் | 
                   
                  
                    | போச்சம்பள்ளி காட் | 
                    ஜவுளி | 
                    ஆந்திர பிரதேசம் | 
                   
                  
                    | சந்தேரி புடவை | 
                    ஜவுளி | 
                    மத்திய பிரதேசம் | 
                   
                  
                    | காட்பாட் கைத்தறி துணி | 
                    ஜவுளி | 
                    ஒரிசா | 
                   
                  
                    | கோட்டா டோரியா | 
                    ஜவுளி | 
                    ராஜஸ்தான் | 
                   
                  
                    | காஞ்சிபுரம் பட்டு | 
                    ஜவுளி | 
                    தமிழ்நாடு | 
                   
                  
                    பவானி ஜமாக்காலம் 
                        | 
                    ஜவுளி | 
                    தமிழ்நாடு | 
                   
                  
                    | சேலம் துணி | 
                    ஜவுளி | 
                    தமிழ்நாடு | 
                   
                  
                    | சோலாப்பூர் சாதர் | 
                    ஜவுளி | 
                    மகாராஷ்ட்ரா | 
                   
                  
                    | சோலாப்பூர் டெரி துண்டு | 
                    ஜவுளி | 
                    மகாராஷ்ட்ரா | 
                   
                  
                    | மைசூர் சில்க் | 
                    ஜவுளி | 
                    கர்நாடகா | 
                   
                  
                    | குளு சால்வை | 
                    ஜவுளி | 
                    இமாச்சல பிரதேசம் | 
                   
                  
                    | மதுரை சுங்கிடி | 
                    ஜவுளி | 
                    தமிழ்நாடு | 
                   
                  
                    | மைசூர் அகர்பத்தி | 
                    ஊதுபத்தி | 
                    கர்நாடகா | 
                   
                  
                    | மைசூர் சந்தனக்கட்டை எண்ணெய் | 
                    அத்தியாவசிய எண்ணெய் | 
                    கர்நாடகா | 
                   
                  
                    | மைசூர் சாண்டல் சோப் | 
                    சோப்பு | 
                    கர்நாடகா | 
                   
                  
                    அரன்முல கண்ணாடி 
                        | 
                    கைவினை பொருள்கள் | 
                    கேரளா | 
                   
                  
                    பித்ரி 
                        | 
                    கைவினை பொருள்கள் | 
                    கர்நாடகா | 
                   
                  
                    | சன்னபட்னா பொம்மைகள் | 
                    கைவினை பொருள்கள் | 
                    கர்நாடகா | 
                   
                  
                    | மைசூர் ரோஸ்வுட் இன்லே | 
                    கைவினை பொருள்கள் | 
                    கர்நாடகா | 
                   
                  
                    | கோயம்புத்தூர் வெட் கிரைண்டர் | 
                    தொழில்துறை | 
                    தமிழ்நாடு | 
                   
                  
                    | கசூடி எம்பிராய்டரி | 
                    கைவினை பொருள்கள் | 
                    கர்நாடகா | 
                   
                  
                    | மைசூர் பாரம்பரிய ஓவியங்கள் | 
                    கைவினை பொருள்கள் | 
                    கர்நாடகா | 
                   
                  
                    | ஒரிஸா இக்காட் | 
                    ஜவுளி | 
                    ஒரிஸா | 
                   
                  
                    | காளகஸ்தி களம்கரி | 
                    கைவினை பொருள்கள் | 
                    ஆந்திர பிரதேசம் | 
                   
                  
                    | கொண்டபள்ளி பொம்முலு | 
                    கைவினை பொருள்கள் | 
                    ஆந்திர பிரதேசம் | 
                   
                  
                    | மதுபானி ஓவியங்கள் | 
                    ஓவியங்கள் | 
                    பீகார் | 
                   
                  
                    | தஞ்சாவூர் ஓவியம் | 
                    ஓவியங்கள் | 
                    தமிழ்நாடு | 
                   
                  
                    | கரீம்நகர் வெள்ளி சரிகை சித்திர வேலை | 
                    கைவினை பொருள்கள் | 
                    ஆந்திர பிரதேசம் | 
                   
                  
                    ஆலப்புழா தென்னை நார் 
                        | 
                    தென்னை நார் பொருட்கள் | 
                    கேரளா | 
                   
                  
                    மைசூர் மல்லிகை 
                        | 
                    தோட்டக்கலை | 
                    கர்நாடகா | 
                   
                  
                    உடுப்பி மல்லிகை 
                        | 
                    தோட்டக்கலை | 
                    கர்நாடகா | 
                   
                  
                    | முகா சில்க் | 
                    ஜவுளி | 
                    அஸ்ஸாம் | 
                   
                  
                    | நாகர்கோவில் கோயில் நகை | 
                    கைவினை பொருள்கள் | 
                    தமிழ்நாடு | 
                   
                  
                    | பாலக்காடான் மட்டை | 
                    வேளாண்மை | 
                    கேரளா | 
                   
                
                             தொடர்புக்கு  
                              பேராசிரியர் மற்றும் தலைவர்,  
                வேளாண் பொருளியல் துறை   
                தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,  
                கோயம்புத்தூர் - 641 003. தமிழ்நாடு. இந்தியா.
 
                தொலைபேசி - 91 422-6611412 
                தொலைநகல் -+91 422-2440373 
                Email:economics@tnau.ac.in    
  senthildemic@gmail.com               Updated on April 2024 
             |