ஜவிக் ஜபுத்ரா (பண்ணைத் தோட்டம்)  
      தயாரிப்பு முறைகள் : 
              பண்ணை இடுபொருட்கள் கொள்முதல் : 
      
        - விதை நேர்த்தி : (பீஜ் சன்ஸ்கார்) (எல்லா பொருட்களையும் புதிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்) விதைகளுக்கு இயற்கையான ஊட்டம் அளித்தல், முளைப்புத்திறன், அதிக தூர்கள் பிடித்து நல்ல மகசூலைக் கொடுக்கும்.
 
       
      விதை ஊட்டமேற்றும் ஊசி :  
              விதைப்பதற்கு அரைமணி நேரம் முன் இடவேண்டும். 
      
        - மோர் /தயிர்/மண்புழு கழுவு நீர்/மாட்டு கோமியம்/ பசும்பால் (10 பகுதி) மற்றும் 1 பகுதி பழைய வெல்லம் அல்லது தேன். எ.கா: 1 ஏக்கர் கோதுமை விதைப்பிற்கு, 40 கிலோ விதை தேவைப்படுகிறது. இதற்கு 2 லிட்டர் மோர் அல்லது 200 கிராம் வெல்லம் போதுமானது.
 
        -  சில புதிய விதை நேர்த்தித் தயாரிப்புகள், கீழ்க்கண்ட கருத்துகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.
 
          1. மோர் (லெஸ்ஸி) விதை நேர்த்திக்கு, 50 மிலி (ஒரு கிலோ விதைக்கு) 
          2. மாட்டுப்பால் + தேன், 50 மில்லி 1 கிலோ விதைக்கு, விதைநேர்த்தி செய்ய பயன்படுத்தலாம். 
          3. மாட்டு கோமியம் / கரையான் மண் -100 கிராம் 1 கிலோ விதைக்கு 
          4. பீஜாமிர்த் : மாட்டு சாணம் 5 கிலோ, மாட்டு கோமியம் 5 லிட்டர், பசும்பால் 1 
              லிட்டர் அதனுடன் 250 கிராம் சுண்ணாம்பு, 100 லிட்டர் கொள்ளளவு  கொண்ட   
              டீப்பாயில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு இரவு முழுவதும்   
              வைத்திருக்க வேண்டும். இந்த கரைசலை விதைகளின் மேல் தெளித்து விதை    
              நேர்த்தி  செய்யலாம். விதையை நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும். 
          5. ஜெர்காட் : (5 கிராம் வெல்லம் அல்லது தேன்,  10-15 கிராம்  ஜெர்காட் 1 கிலோ விதைக்கு பயன்படுத்தலாம். விலங்கு கன்று போடும்பொழுது அதனுடைய நஞ்சுக்கொடியை மட்பாண்டத்தில் போட்டு மூடி அதை 2 அடி ஆழ குழியில் வைத்து) மண்ணைப்போட்டு மூடவேண்டும். 60-90 நாட்களில் ஜெர்காட் தயாராகிவிடும். 
       
 |