| 
      மட்கு எரு   
மட்கு எரு என்றால் என்ன? 
 
மட்கு எரு என்பது நன்கு மட்கிய அங்ககக் கழிவுகளான தாவரக்கழிவுகள், கால்நடைக்கழிவுகள் மற்றும் மாட்டுத்தொழுவங்களில் உள்ள கோமியம் கலந்த மண் மற்றும் தீவனக்கழிவுகள் ஆகும்.  
  எப்படி நல்ல மட்கு எரு தயாரிப்பது? 
   
ஒரு குழியில் அங்ககக் கழிவுகளைப் போட்டு மட்கச்செய்தல், மட்கு எரு தயாரித்தல் ஆகும். உரம் தயாரிக்கக் கூடிய இடம் உயரமாகவும், மழைக்காலத்தின் போது நீர் தேங்காமல் இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும். குழியின் ஆழம் 3 அடி மற்றும் அகலம் 6-8 அடி இருக்க வேண்டும். குழியின் நீளம் தேவைக்கேற்றவாறு அமைத்துக்கொள்ள வேண்டும். 
  செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  
  - மாட்டு சாணத்துடன் நீர் கலந்து குழம்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். 
 
  - அங்ககக் கழிவுகளைக் குழியின் 6” அடி அளவுக்கு நிரப்ப வேண்டும். (தாவரக்கழிவுகள், மாட்டுத்தொழுவத்தில் உள்ள கழிவுகள், தீவனக்கழிவுகள், காய்ந்த மர இலைகள் மற்றும் தண்டுகள்) நீரைக் கொஞ்சமாக நனையும் அளவுக்குத் தெளிக்க வேண்டும். 
 
  - மாட்டு சாணக்குழம்பு மற்றும் கோமியம் கலந்த மண்ணைப்போட்டு மூடி விட வேண்டும். ஒவ்வொரு 10 டன் அங்ககக் கழிவுகளுக்கு 5 முதல் 10 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை சேர்க்க வேண்டும். 
 
  - இந்த முறையைக் குழி நிரம்பும் வரை திரும்பப் பின்பற்ற வேண்டும்.   
 
  - கடைசியில், குழியை கோமியம் கலந்த மண், தாவரக்கழிவுகள் கொண்டு மூடி, மண் குவியல் போன்று அமைக்க வேண்டும். இதனால் மழை நீர் உட்புகாமல் தடுக்கலாம். 
 
  - ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த உரம் வயலுக்கு இடலாம்.
 
  - குறுகிய கால நன்மைக்குத் தேவையான வளங்களைப் பாதுகாத்து வைக்க உதவுகிறது.
 
  - விலங்குகள் மற்றும் இயந்திரங்களின் ஆற்றலை சேமிப்பதோடு, பயிர்த்தோல்வியினால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
 
  - மண்ணின் இயற்பண்புகளான குருணையாக்கும் மண் நயம், நல்ல காற்றோட்டம், வேர் ஊடுருவும் திறன் மற்றும் மண்ணின் நீர் கொள்ளும் திறனை அதிகரிக்க உதவுகிறது.
 
  - மண்ணின் வேதிப்பண்புகளான, மண் ஊட்டச்சத்துகளை அளித்தல் மற்றும் நிலை நிறுத்தல் மற்றும் சாதகமான வேதி எதிர் விளைவுகளை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
 
  - போதுமான அங்ககக் கழிவுகள் இருக்கும் வரை குழியை நிரப்பலாம். அல்லது மூங்கிலைக்கொண்டு குழியில் ஒரு பகிர்வு உண்டாக்கு. அதில் அங்ககக் கழிவுகளைப் போட்டு வைத்துப் பின்னர் உரம் தயாரிக்கும் பொழுது உபயோகிக்க்கலாம்.
 
   
தொடர்ச்சி..... 
 
         ஆதாரம்: 
                  http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm      
          www.mycorrhizae.com 
          www.hortsorb.com 
          http://kendujhar.nic.in/ 
      http://www.greenpeace.org 
         
       |