தேவையான பொருட்கள்: 5 முட்டை, 10-15 எலுமிச்சை பழங்களின் சாறு  மற்றும் 250 கிராம் வெல்லம் . 
             
            தயாரிப்பு: 
            
              - முட்டையை ஜாடியில் போட்டு  முற்றிலும் மூழ்கும் வரை எலுமிச்சை சாறு ஊற்ற வேண்டும்.   
 
              - பத்து நாட்கள் வரை மூடி வைக்கவும் . பத்து நாட்களுக்கு பிறகு முட்டையை உடைத்து கரைசல்  தயார் செய்ய வேண்டும். 
 
              - அடர்த்தியான வெல்லப் பாகை சம அளவு சேர்த்து பத்து நாட்களுக்கு வைத்து இருக்க வேண்டும். 
 
              - கரைசல் தெளித்தலுக்கு தயாராகி விடும். 
 
              - இது மீன் அமிலத்தைப் போன்று தாவரங்களுக்கு  ஒரு சிறந்த  ஊட்டச்சத்து மற்றும் தாவர வளர்ச்சியை அதிகரிக்கும்.  
 
              
             
            பயன்பாடு: ஒன்று முதல் இரண்டு மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து தெளிக்கலாம்.   |