தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: ஊட்டச்சத்து :: சமைக்கும் முறைகள்

உணவு சமைக்கும் முறை குடும்ப சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுகள் சாப்பிடுவதற்கு நல்ல சுவையுடனும் மற்றும் நல்ல தோற்றம் உடையதாக இருக்க வேண்டும். உணவு வகையான பழங்கள் காய்கறிகள் மற்றும் கொட்டைகள் பச்சையாகவே அல்லது சடைத்தும் உட்கொள்ளலாம். உணவு பொருட்களை வேக வைப்பதே சமையல் எனப்படும்.

சமைப்பதன் குறிக்கோள்:

  1. சமையல் செய்யும்போது உணவுகள் கிருமி நீக்கம் செய்யப்படுகிறது. 40 டிகிரி வெப்பத்திற்கு வேக வைப்பதால் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கும். எனவே உணவு வன நுகர்வதற்காக பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட வேண்டும்.
  2. தொடர்பு கொண்ட திசுக்கள் கொண்ட இறைச்சி மற்றும் தானிய பருப்பு மற்றும் காய்கறி நார்கள் சமைக்கும் போது மென்மையாக படுகிறது. ஆதலால் ஜீரணிக்கும் கால நேரம் குறைந்து, குடல் பகுதியில் சிறிது எரிச்சல்களே ஏற்படும்.
  3. நுகரும் தன்மை மற்றும் உணவு தரம் சமைப்பதினால் மேம்படுத்தப்படுகின்றன. (எ-டு) தோற்றம், சுவை, இழைநய, அமைப்பு மற்றும் நறுமணம்.
  4. பல விதமான சமையல் வகைகளை ஒரே பொருளில் இருந்து தயாரிக்கலாம். (எ-டு) அரிசியைக் கொண்டு பிரியாணி மற்றும் கீர் தயாரிக்கலாம்.
  5. உணவு நுகரும் தன்மை அதிகரிக்கப்படுகிறது.

சமைக்கும் முறைகள்:

நீர்வெப்பம் உலர் வெப்பம் பிணைப்பு
வேகவைத்தல்
புழுங்க வைத்தல்
அவித்தல்
குக்கர் கொண்டு சமைத்தல்
வதக்குதல்
வறுத்தல்
பொரித்தல்
நெருப்புக்கலமிடுதல்

சமைக்கும் பொழுது மின் கடத்தி கதிர்வீச்சு மற்றும் நுண்அலையின் மூலம், வெப்பம் உணவுக்கு பரிமாற்றப்படும்.
மூலதனம்: http://www.textbooksonline.tn.nic.in/books/11/nutrition-EM/CHAPTER_2.pdj

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015