தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்து பற்றாக்குறை நோய்கள்

புரத சத்துக்கள் பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்கள்

புரத சக்தி ஊட்டச்சத்துக் குறைவு
புரத சக்தி ஊட்டச்சத்து குறைவு என்பது மருந்தக கடுமை நிலை குவாஷியாக்கோர் மற்றும் மராஸ்மஸ் நிலையிலிருந்து வளர்ச்சி குறை நிலையாகும். குறிப்பாக இந்தியா மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் தாய்பாலற்ற குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

காரணிகள்:

சமூக மற்றும் பொருளாதார காரணிகள்

பஞ்சத்தின் காரணத்தால் உணவு பற்றாக்குறை, நெரிசல், சுகாதாரமற்ற வாழ்க்கை. குழந்தைகளை சரிவர பராமரிக்காமல் இருத்தல் ஆகியவை புரத சக்தி ஊட்டச்சத்துக் குறைவான முக்கிய காரணிகள் ஆகும்.

உயிரிய காரணிகள்:

பிரசவத்தின் போது அல்லது அதற்கு முன்பு, தாய் ஊட்டச்சத்துக் குறைவு இருப்பின் குழந்தை பிறக்கும் போது எடை குறைவாக இருக்கம். வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட இடர்பாடுகள் எதிர்மறையான புரதச்சத்து மற்றும் சக்தி குறைபாடு ஏற்படும்.

சுற்றுப்புற காரணிகள்:

கூட்ட நெரிசல் மற்றும் சுகாதாரமற்ற நிலையினால் வயிற்றுப் போக்கும் வறட்சி, வெள்ளத்தாக்கு, பூகம்பம், போர் மற்றும் கட்டாய இடமாற்றம், நீண்ட உணவு பற்றாக்குறைக்கும் வழிவகுக்கும்.

வயது:

பொதுவாக பச்சை குழந்தை மற்றும் இளம் குழந்தையை மட்டுமே தாக்கும்.
பற்றாக்குறையான உணவை நீண்ட நாட்கள் எடுப்பதால் மராமஸ் ஒரு வருடத்திற்கு முன்னரே தாக்கும். ஆயினும் குவாஷயாகோர் 18 மாதங்கள் கழித்தே தோன்றும்.


குவாஷியாகோர்

குவாஷியாகோர் முக்கிய நோய்க் அறிகுறிகள்

  • புரத மற்றும் கலோரி குறைவின் காரணமாக வளர்ச்சி குன்றிவிடும்
  • விட்டேர்த்தி மற்றும் எரிச்சலின் காரணமாக மனநிலை மாற்றங்கள்
  • தசை சேதாரம்
  • நீர்க்கோர்ப்பு முதலில் பாதத்திலும் பின்பு கை, தொடை மற்றும் முகத்தில் பரவும்
  • நிலா முகம்
  • கொழுப்பு மிகுந்த விரித்த ,ஈரல்
  • ஒவ்வாமை, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு
  • தொடையின் பின்புறம் மற்றும் சூத்தாம்படையில் பழுப்பு நிற கருப்பில் தோல் மாற்றம் ஏற்படும்
  • முடியில் மாற்றம்
  • சோகை
  • வைட்டமின் எ பற்றாக்குறை

மராஸ்மஸ்:

மாரஸ்மஸ் நோயின் அறிகுறிகள்:

  • கடுமையான வளர்ச்சி குறைவு
  • தோழின் கீழான பகுதியில் கொழுப்பு இழப்பு
  • கடுமையான தோல் சேதாரம்
  • குழந்தைகள் ஒல்லியாக உடல் வாகுஇ சுருங்கிய தோல் மற்றும் புடைத்த எலும்புகள் கொண்டதாக தோன்றும்.

மராஸ்மிக் குவாஷியாகோர்:

குழந்தைகள் குவாஷியாகோர் மற்றும் மராசிமிக் கலவையான சில நோய் அறிகுறிகளோடு தோன்றுவர்.

சத்து வளர்ச்சி குறைவு

குழந்தைகள் நீண்ட உணவு பற்றாக்குறை மற்றும் புரதத்திற்கு உட்பட்டால் கடுமையான வளர்ச்சி குறைவு காணப்படும். உயரம் மற்றும் எடை ஒரே மாதிரி குறைவதால்இ சராசரி குழந்தைகளை போலவே காணப்படுவர்.

எடை குறை குழந்தைகள்:

இத்தகைய குழந்தைகள் சராசரி குழந்தைகளை காட்டிலும் குறைந்த எடையை கொண்டவர்கள் ஆவர். அக்குழந்தைகளில் குறைந்த இரத்த நீர் கருப்பு புரதம் இருக்கும். சுவாசம் மற்றும் வாயு தொல்லைகள் அதிகம் காணப்படும்.

சிகிச்சை:
  • வாழ்க்கை நிலை தடுமாற்றம் அடைதல்
  • சத்துக்கள் நிலையை புருணத்தாரணம் செய்தல்
  • சத்துக்கள் புனர்வாழ்வுகளை உறுதிபடுத்துதல்

மூன்று வித சிகிச்சை முறைகள் உள்ளன:

மருத்துவ சிகிச்சை:
மருத்துவ சிகிச்சையை கொண்டு ஹைபோதியா, ஹைபோகமளைசிமியா, நிறற்ற நிலை, மின்பகுளி சராசரியற்ற நிலை, சோகை மற்றும் இதர வைட்டமின் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறை.

பத்திய மேம்பாடு:
உள்ளுரில் உள்ள பத்திய உணவானது குறைந்த செலவு மற்றும் எளிதான ஜீரணித்தல், வகையை சார்ந்தத்கும்

புணர்வாழ்வு திட்டம்:
சத்துக்கள் புணாவாழ்வு கழுத்தானது தாய்மார்களுக்கு எவ்வாறு குழந்தைகளுக்கு தாயப்பால் தருவதற்கான பயிற்ச்சிகளை பற்றி அளிபப்பதாகும்.

தடுக்கும் முறைகள்:

  • தாய்ப்பால் புகட்டுவதை ஊக்குவித்தல்
  • குறைந்த செலவு கொண்டு தாய்ப்பாலை மறக்கடித்தல்
  • குடும்பக் கட்டுப்பாடு மற்றும் குழந்தை பிறப்பதற்கான இடைவெளி
  • நோய் ஏற்படாமல் தடுத்தல்
  • உணவுகளை மேம்படுத்துதல்
  • ஆரம்ப கட்டத்தில் கண்டரிதல் மற்றும் சிகிச்சை முறை
ஆதாரம்:
http://mydreambaby.in/wp-content/uploads/2012/07/Garbhakranti-protein-rich-foods-during-pregnancy.jpg
http://www.corebloggers.com/blog/wp-content/uploads/2013/09/en.jpg
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015