தவேப வேளாண் இணைய தளம் ::ஊட்டச்சத்து :: தாது உப்புக்களின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

1. கால்சியம்
கால்சியம் குறைவு ‘ஆஸ்டியோபோராசிஸ்’ என்ற நோயிக்கு வழிவகுக்கும். இந்த நிலையில் எலும்பின் எடை குறைந்து, அடர்வும் குறைந்து இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் நடுத்தர வயதினரிடமும், வயதான பெண்களிடத்திலும் அநேகமாக காணப்படுகிறது. அதிகமான அளவில் எலும்புகள் பாதிப்பு அடைந்து எலும்பு முறிவுகள் ஏற்படுவதே இந்த நோயின் முக்கியமான அறிகுறியாகும். கடுமையான எலும்பு வலியும், பொதுவாக நொறுங்கும் தன்மையுடைய எலும்புகளில் சிறிய அதிர்ச்சியிலும் முறிவு ஏற்படும்.

Nutrition

2. மெக்னீசயம்
          குறைபாட்டினால் ஏற்படும் முதன்மையான மருத்துவம் சார்ந்த நோயின் பண்பு யாதெனில் மன அழுத்தம், தசைகளில் சோர்வு தலை சுற்றல் மற்றும் வலிப்புடன் கூடிய உடல் குலுக்கம்.
3. இரும்பு
இரும்புச்சத்து குறைபாட்டினால் இரத்த சோகை நோய் ஏற்படும். இந்நோய் அதிகமாக குழந்தைகள், இளம் வாலிப பருவ பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களை வளரும் நாடுகளில் தாக்குகிறது. மருத்துவம் சார்ந்த பண்பு என்னவென்றால், இரத்தத்தில் குறைவான ஹீமோகுளோபின் அளவினால் பிராணவாயுவை செல்கள் தசைகள் ஆகியவற்றிற்கு எடுத்துச் செல்வது குறைதல் போன்ற விளைவு ஏற்படுகிறது. இந்நோயின் அறிகுறிகளாவன - தோல் வெளிறிக் காணப்படுதல் ஆகும். நகங்கள் மென்மையானதாகவும், தட்டையாக, கரண்டி போன்ற வடிவத்துடன் (‘கோயிலானிசியா’) (Koilonychia) காணப்படுதல் ஆகும். கீழ்வரும் படத்தில் கோயிலாசினியா நோய் உருவாகியுள்ளதை காணலாம்.

Nutrition

அயோடின்
கடுமையான அயோடின் குறைவு குழந்தைகளிடம் ஏற்பட்டால் மிக அபாயகரமான வளர்ச்சி குன்றல் ஏற்படும். அந்நிலைக்கு ‘க்ரிட்டினிஸம்’ என்று பெயர். ஐயோடின் குறைவு ஏற்படும்போது, ஐயோடைஸ்டு உப்பு சேர்க்கப்பட்ட உணவை உட்கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்படுகிறது. இந்தியாவில் காய்ட்டர் உள்ள சில இடச்சூழலில் நோயால் தாக்கப்பட்ட மக்களை கொண்ட மண்டலம் மலைச்சரிவுகளில், மலை அடிவாரத்தில் மற்றும் இமாலய மலை சமவெளிகளிலும் உள்ளன. காய்ட்டர் நோயால் தாக்கப்பட்ட மக்கள் ராஜஸ்தானில் ஆரவல்லி மலைகளிலும், மத்திய பிரதேசத்தில் உள்ள விந்திய மலை தொடர்களிலும், குஜராத்தில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கிலும், ஒரிசா, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் மலைப்பகுதியிலும் மற்றும் கர்நாடகா, கேரளா மாநில தேயிலை ஸ்டே்டகளிலும் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

Nutrition

5. துத்தநாகம் (Zinc)
கடுமையான துத்தநாகம் குறைபாட்டின் விளைவாக ‘அக்ரோடொமடைட்டிஸ் என்டரோபத்திக்கா’ ஏற்பட்டு, இதன் விளைவாக கடுமையான தோல் நோய், குழந்தைக்கு பிறந்த ஒருசில மாதங்களில் ஏற்படும். (ஹைபோகுஸியா சுவை குறைதல்) மற்றும்

zinc

ஹைபோஸ்மியா (மணம் கண்டறிவதில் குறை ஏற்படுவது). ஆகியன நடுத்தர அளவு துத்தநாகம் குறைவினால் ஏற்படும். இக்குறைபாடு துத்தநாகம் சத்தை உணவுடன் எடுத்துக்கொள்ளும்போது சரியாகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015