  | 
                        | 
                      சோதனைகள் 
                        இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு  கண்டறியப்பட்டு அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
                        சிகிச்சைகள் 
  உணவு 
  சைவ உணவுகளைவிட அசைவ உணவுகளிலிருந்து  இரும்புச்சத்து உடலில் சிறந்தவகையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கீரைகள், தானியங்கள்,  முட்டையின் மஞ்சள் கரு, இறைச்சி, மீன், பால் மற்றும் பால் பொருட்கள், இரும்பு மற்றும்  போலிக் அமிலம் நிறைந்த ஆதாரங்களாகும்.இறைச்சி, ஈரல், மீன், முட்டையின்  மஞ்சள் கரு, பால் மற்றும் பால் பொருட்களில் வைட்டமின் பி12 சத்து நிறைந்துள்ளது. 
  மருந்துகள் 
  பெரஸ் சல்பேட் மற்றும் போலிக்  அமிலம் கொண்ட மருந்துகள் இரத்த சோகை சிகிச்சைக்கு கொடுக்கப்படுகின்றன. இரத்த சோகை சரி  செய்த பின்னரும் மருந்துகளை 3-4 மதங்களுக்கு தொடர்வதால் உடலில் இரும்புசத்து இருப்பை  உறுதிபடுத்தலாம்.கருவுற்ற பெண்களுக்கு 4 மாதம்  முதலும் பாலூட்டும் பெண்களுக்கு முதல் 6 மாதங்களுக்கும் இரத்த சோகைக்கான மருந்துகள்  கொடுக்கப்பட வேண்டும்.மருந்துகள் மாத்திரை, காப்சூல்,  இனிப்பு கூழ் மற்றும் ஊசி மூலமாக செலுத்தலாம். வாய்வழியாக மருந்து உட்கொள்ள முடியாதவர்கல்  ஊசி மூலம் எடுத்துக் கொள்ளலாம். 
   
  இரும்பு  சத்து மிகுந்த உணவுகள் 
  உலர்த்தப்பட்ட காலிபிளவர் இலைகள், அரக்கீரை, சிறுகீரை,  சுண்டக்காய், நண்டு, மனதக்காளி கீரை, அவல், முள்ளங்கி இலை, புதினா, பொன்னாங்கன்னி கீரை,  பொட்டுகடலை, கம்பு, ஈரல், வாழைக்காய் ஆகியவை இரும்பு சத்துள்ள உண்வுகளாகும்.                          |